Home Blog Page 30

கற்பமூலிகை கருந்துளசி

கற்பமூலிகை கருந்துளசி

கருந்துளசியின் தாவரப் பெயர் ‘ஆசிமம் டெனி புனோரம் டைப்பிகா’ இதை ‘கிருஷ்ண துளசி என்றும் சொல்வார்கள். கருந்துளசி வறட்சியை தாங்கி வரைக்கூடிய மூலிகைச் செடி. சாதாரண துளசிச் செடி போலவே இருந்தாலும், இதன் தண்டு, பூ, காய் கருமையாக இருப்பதால் ‘கருத்துளசி’ என குறிப்பிடுகிறார்கள். இதற்கு ‘கற்பமூலிகை’ என்ற பெயரும் உண்டு.

கருந்துளசி சுற்றுச்சூழலுக்கு சிறந்த நண்பனாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. சளித் தொல்லைக்கும், வாய் துர்நாற்றத்திற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது.

குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி ‘சுருந்துளசிக் கஷாயம்’ கொடுத்து வந்தால் குணமாகும். தினமும் அதிகாலையில் சாப்பிடுவதற்கு முன்னால் கருந்துளசி இலையை மென்று உண்பதால் கிருமித் தொற்றும், சளிப் பிரச்சினையும் ஏற்படாது. சிறிதளவு கருந்துளசியை பசும்பாலில் சேர்த்து காய்ச்சிக் குடிக்கும் போது ஒவ்வாமையால் ஏற்படுகிற பிரச்சினைகள் தீரும். கருந்துளசியை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிந்தால் ‘சைனஸ்’ தொல்லையால் ஏற்படும் சளி தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.

மேலும் வலிப்பு, அனைத்து விதமான காய்ச்சல்கள் (மலேரியா, ஃப்ளு) மற்றும் தோல் சம்பந்தமான நோய்களை கருந்துளசி குணப்படுத்தும் தன்மை கொண்டது. உடலில் உள்ள கோழையை அகற்றி, உடல் வெப்பத்தை குறைக்கக்கூடிய தன்மை உடையது.

பேன் தொல்லைக்கும் கருந்துளசி நல்ல மருந்தாக செயல்படுகிறது. சிறிதளவு துளசியை இடித்து சாறாக்கி, அதனுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும். கருந்துளசி இலையை இடித்து, பிழிந்த சாறுடன் கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.

கருந்துளசிச் செடி இருக்கிற இடத்தில் கொசுக்கள் வருவதில்லை. இதன் இலைகளுக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபக் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய் களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு கருந்துளசிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

ஆன்லைன் கேம்கள் ஆபத்தானதா?

ஆன்லைன் கேம்கள் ஆபத்தானதா?

கொரோனா பரவலின் காரணமாக பலரும் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகின்றனர். நம் வீட்டு சுட்டிகளும் வீட்டில் இருந்த படியே பள்ளிப் பாடங்களை ஆன்லைள் மூலம் படித்து வருகின்றனர். பாதுகாப்பான சூழல் ஏற்படாத காரணத்தால், சிறுவர்களை விளையாடுவதற்கு வெளியே அனுப்புவதிலும் தயக்கம் இருக்கிறது.

தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பது போரடிப்பதால் பெரியவர்கள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை பலரும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இது உடல் நல சிக்கல்களுக்கு காரணமாக அமைவது மட்டுமில்லாமல், மனநல பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு, பல குற்றங் களுக்கும் வழி வகுப்பதாக அமைந்து விடுகிறது.

ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. அதே சமயம், பள்ளி பாடங் களையும் செல்போனில் தான் படிக்க வேண்டி இருப்பதால், அவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவதை பல சமயங்களில் தடுக்க முடிவதில்லை. சில நேரங்களில் விடலைப் பிள்ளை களை கண்டிப்பது விபரீதத்தில் கூட முடிகிறது.

‘ஆன்லைன் கேம்கள்’’ எனப் பொதுவாகக் கூறினாலும், குறிப்பிட்ட விபரீதமான விளையாட்டுகளையே மாணவர்கள்
அதிகம் விளையாடுகின்றனர். இவ்வகை விளையாட்டு களில் வன்முறையே அதிகமாக இருக்கிறது.

பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்து நாளடைவில் அதிலிருந்து மீண்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் கவனச் சிதறல், மன அழுத்தம், படபடப்பு போன்ற மன நோய்களுக்கும், கோபம், பதற்றம் போன்ற நடத்தை சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஆளாகின்றனர்.

ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் ஆர்வத்தில் மொபைலை மிக அருகில் வைத்து, கொள்கின்றனர். இதனால் கண்கள் பாதிக்கப்படும் சரியான கோணத்தில் அமராதபோது கழுத்துவழி, முதுகுவலி, உறக்கம் கெடுவதால் மலச்சிக்கள் தலைவலி போன்றவை ஏற்படும் வாய்ப்பு உண்டு.

தேவையற்ற நேரத்தில் கணினி மற்றும் மொபைலி பயன்பாட்டில் இருந்து அவர்களை விலக்க வேண்டும். இதனால் அவர்கள் கோபப்பட்டாலும், சோர்வாக் நடந்து கொண்டாலும் சலுகை அளிக்கக்கூடாது. மாறாக அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் மாற்று வழிகளைக் காண்பிக்க வேண்டும். திரும்பவும் விளையாடத் தோன்றும் போதெல்லாம், ‘இது தவறு’ என்பதைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

‘மீம்ஸ்’ மூலம் விவசாயத்துக்கான விழிப்புணர்வு

‘மீம்ஸ்’ மூலம் விவசாயத்துக்கான விழிப்புணர்வு

சமூக வலைத்தளங்களில் அதிக வரவேற்பை பெற்றிருப்பவை ‘மீம்ஸ்’கள். எவ்வளவு பெரிய விஷயத்தையும் மிக எளிதாக ‘மீம்ஸ்’ மூலம் புரிய வைக்கலாம்.

பொழுதுபோக்குக்காகவும், நகைச்சுவைக்காகவும் பயன்படுத்தி வரும் ‘மீம்ஸ்’களை விவசாயம் பற்றிய விழிப்
புணர்வை அதிகரிப்பதற்காக பயன்படுத்தி வருகிறார் மீனா. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் விவசாயம் அல்லாத குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர். விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் வேளாண்மையில் இளம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்று, தற்போது திண்டுக்கல் தோட்டக்கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். விவசாயம் சார்ந்த தகவல்களையும், தொழில்நுட்பக் கருவிகளையும் பறி ‘மீம்ஸ்’ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

நண்பர்களை கேலி செய்வதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் ‘மீம்ஸ்’ வடிவமைக்க ஆரம்பித்தேன். பின்பு
மிம்ஸ் மூலம் விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என யோசித்து 2018-ம் ஆண்டில்
இருந்து விவசாயத்துக்கு அவசியமான தகவல்கள் குறித்த ‘மீம்ஸ்’களை பகிர்ந்து வருகிறேன்.

ஆரம்ப காலத்தில் ‘மீம்ஸ்’ எழுதி சமூக ஊடகங்களில் பகிரும்போது வரவேற்பு குறைவாகவே இருந்தது நாட்கள் செல்லச் செல்ல பார்வையாளர்கள், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்று இவற்றை ரசிக்கவும், பகிரவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்” என்கிறார்.

இவர் தனது முகநூல் பக்கத்திலும், யூடியூப் பக்கத்திலும் வேளாண்மை, பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, பயிர்க் கடன், இயந்திர நடவு, இயற்கை விவசாயம், பூச்சிக்கொல்லி, தேளி வளர்ப்பு, தற்சார்பு விவசாயம், நன்மை செய்யும் பூச்சிகள், கீரை வளர்ப்பு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளிட்ட முழு தகவல்களையும் செய்முறை விளக்கங்களுடன் பதிவிடுகிறார்.

“விவசாயத்தை தொழில் என்று கூறுகிறோம். அது மனித ஆற்றலை வெளிப் படுத்தும் அடிப்படை நாகரிகத்தின் அடையாளமாகும். நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகளின் வாழ்க்கை, போராட்டங்களும், சவால்களும் நிறைந்தது. அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் கல்லூரி நண்பர் களுடன் இணைந்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். மேலும் விவசாயத்தில் ஈடுபட நினைக்கும் இளம் தலை முறையினருக்கு ஆலோசனைகளும் வழங்கி வருகிறோம்” என்றார்.

விவசாயத்தில் தனது பங்களிப்பிற்காக ‘அக்ரி விழுது’ விருதினைப் பெற்றுள்ளார். மீனா எழுதும் வேளாண்மை சார்ந்த மீம்ஸ்கள் விவசாயிகளிடத்தில் மட்டுமில்லாமல், இளம் தலைமுறையினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. பிறருக்கு உதவும் நல்ல சிந்தனைகளும், சிறிது முயற்சியும் இருந்தால். எந்த பொருளையும் பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் மீனா.

அதிகாலையில் எழுவதே வெற்றிக்கான முதல் படி

அதிகாலையில் எழுவதே வெற்றிக்கான முதல் படி

இன்றைய பெண்கள் பலருக்கு தங்களை கவனித்துக் கொள்வதற்கும், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதற்கும், வாழ்வில் மேம்படுவதற்கான செயல்களை செய்வதற்கும் ‘நேரமில்லை’ எனும் வார்த்தை தடையாக இருக்கிறது.

இவற்றையெல்லாம் தாண்டி சரியான திட்டமிடுதல், நேர நிர்வாகம், முயற்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னேறி இருக்கிறார் சித்ரா ரமேஷ். நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த இவர், குடும்பத்தை கவனித்துக் கொண்டு, வெவ்வேறு விதமான மூன்று தொழில்களை சிறப்பாக நடத்தி வருகிறார். அவரது பேட்டி..

உங்களைப் பற்றி சொல்லுங்கள்?

நான் பத்தாவது படித்திருக்கிறேன். கணவர் ரமேஷ், கல்லூரியில் படிக்கும் மகள், மேல்நிலைக் கல்வி பயிலும் மகன், இதுதான் எங்கள் குடும்பம், எனது கணவருடன் இணைந்து பாக்கு சிவல் உற்பத்தி செய்யும் நிறுவனம், மரச்செக்கு எண்ணெய் மில், காபி ஷாப் போன்றவற்றை நடத்தி வருகிறேன்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று தொழில்
களைத் தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது?

பாக்கு சீவல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை முதலில் தொடங்கினோம். வீட்டு உபயோகத்திற்காக மரச் செக்கில் ஆட்டிய சுத்தமான எண்ணெய்யைத் தேடியபோது கிடைப்பது அரிதாக இருந்தது. அதன் காரணமாக, ‘ஏன் நாமே ஒரு மரச்செக்கு ஆலையைத் தொடங்கக் கூடாது? என தோன்றியதால், மரச்செக்கு எண்ணொய் மில்லைத் தொடங்கிளோம். சொத்து வாங்க முயற்சித்தபோது, சீர்காழி நகரில் ஒரு காபி ஷாப் விலைக்கு வந்தது. ஏற்கெனவே நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருந்த அந்த காபி ஷாப்பை நாமே நடத்தலாம் என்று முடிவெடுத்து நடத்தி வருகிறோம்.

தொழிலில் உள்ள சாதக, பாதகங்கள் என்னென்ன?

மற்றவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் அணு பவம் நமக்கு சாதகமானது. வாடிக்கையாளரின் எதிர் பார்ப்புகளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்வதே முக்கியம். அதுவே தொழிலின் வெற்றிக்கு சாதகமாக
அமைகிறது. சிறு தொழில்களில் நேரமின்மை மட்டும்தான் பாதகமானது. ஒரு வேலையைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டுமென்றால் தொழிலாளிகளை மட்டுமே நம்பினால் முடியாது. அதனால் முதலாளியே முதலில் தொழிலாளியாக இருக்க வேண்டும்.

குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, தொழில்களுக்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?

எனது வெற்றிக்கான காரணங்களில் முக்கிய மானது, ‘வைகறைத் துயிலெழு’ என்ற மூத்தோர் சொல்லை கடைப்பிடிப்பதுதான். தினமும் அதிகாலை நான்கரை மணிக்கே எழுந்து, வீட்டு வேலைகளை முடித்து விடுவேன். அதனால் எனக்குப் போதிய நேரம் கிடைக்கிறது. பிள்ளைகளும் உதவி செய்கிறார்கள்.

தொழில் முனைவோராக விரும்பும் பெண் களுக்கு உங்களின் அறிவுரை என்ன?

ஆண், பெண் பாகுபாடு சமூக அளவில்தான் இருக்கிறதே தவிர, ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் பெண்களாலும் செய்ய முடியும். பெண்கள் சாதிப்பதற்கு வயதோ, படிப்போ ஒரு தடையில்லை. எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நம்பிக்கையோடும், புத்துணர்ச்சியான மனதோடும் சிந்தித்து செயலாற்றினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

என்றும் இளமைக்கு வைட்டமின் ‘ஈ’

என்றும் இளமைக்கு வைட்டமின் ‘ஈ’

சரும பராமரிப்புக்காக தயாரிக்கப்படும் பொருட்களில், வைட்டமின் ‘ஈ’ சேர்க்கப் படுகிறது. சருமம் முதிர்ச்சி அடைவதை தள்ளிப் போடும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆன்டி ஆக்சிடெண்டுகள் வைட்டமின் ‘ஈ’யில் அதிக மாக உள்ளன. வைட்டமின் ‘ஈ’ சத்து போது மான அளவு இருந்தால், உடலில் ஏற்படும் பிரச்சினைகளை எளி தாகத் தடுக்கலாம்.

உணவின் மூலம் வைட்டமின் ‘ஈ’ சத்தை நேரடியாகப் பெற்று, இயற்கையான வழியில் அழ கைப் பாதுகாக்க முடியும். சூரியகாந்தி விதைகள், பாதாம், வேர்க்கடலை, அரிசித் தவிடு மற்றும் கோதுமைத் தவிடுகளில், இருந்து எடுக்கப்படும் எண் ணெய், பசலைக்கீரை போன்ற வற்றில் வைட்டமின் ‘ஈ’ அதிக மாக உள்ளது.

நகங்கள் பராமரிப்பு

கைகளுக்கு தொடர்ந்து வேலை கொடுப்பவர்களின் நகங்கள் வலிமை குறைந்து, அழகின்றி, நிறம் மங்கி காணப்படும். நகங்களை சுற்றிலும் தோல் உரிதல், சருமம் கருமை அடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இரவில் தூங்கு வதற்கு முன்பு வைட்டமின் ‘ஈ’ சத்துள்ள எண்ணெய்யை நகங்களை சுற்றியும், விரல் களிலும் தடவி மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நகங்கள் இயற்கையான வெளிர் சிவப்பு நிறத் தோடும், வலிமையோடும் காணப்படும்.

கருவளையம் மறைவதற்கு

கருவளையம் முகத்தின் பொலிவைக் குறைப்ப தோடு, வயது முதிர்ந்த தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. சிலருக்கு கருவளையத்தோடு,
கண்களைச் சுற்றியுள்ள சருமத்தில் சுருக்கங் களும் ஏற்படும். இவர்கள் தினமும் இரவு தூங்கு வதற்கு முன்பு வைட்டமின் ‘ஈ’ சத்துள்ள எண்ணெய்யை கண்களைச் சுற்றிலும் தடவி, மென்மையாக மசாஜ் செய்து வந்தால் கரு வளையமும், சுருக்கங்களும் நீங்கி கண்களில் பொலிவு ஏற்படும்.

இரவு நேர சரும பராமரிப்பு

குறைந்த அளவிலான மேக்-அப் போட்டிருந் தாலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு அதை முழுவதுமாக கலைத்து, முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். மேக்-அப் பொருட்களில் உள்ள வேதி மூலக்கூறுகள் சருமத்தை சேதமடைய செய்து, பருக்கள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். வைட்டமின் ‘ஈ’ சத்துள்ள எண்ணெய்யை சில துளிகள் எடுத்து முகம் மற்றும் கழுத்துப்பகுதி யில் தடவலாம். இதனால், முகத்தில் எண் ணெய் வடியும் சிரமம் ஏற்படாது. வைட்டமின் ‘ஈ’ சத்துள்ள எண்ணெய், வறண்ட முகத்துக்கு ஈரப்பதம் அளிக்கும்.

இளமையான சருமம்

தளர்வு அடைந்த சருமங்கள் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். சருமத்தை சரியாக பராமரிக்காவிட்டால், நெற்றிப் பகுதியில் சுருக்கங்களும், கோடுகளும் விழத் தொடங்கும். இவை மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கு வைட்ட மின் ‘ஈ’ சத்துள்ள எண் ணெய் உதவுகிறது. இது சருமத்தை இறுக்கமாக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, இளமையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

நோயற்ற வாழ்விற்கு குறிப்புகள்

நோயற்ற வாழ்விற்கு குறிப்புகள்

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி
போலவும், மதிய உணவு ஒரு
இளவரசன்/இளவரசி போலவும்,இரவு
உணவை யாசகம் செய்பவனைப்
போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை
அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப்
படுத்தப்பட்ட உணவை
தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும்
பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு
விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம்
தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம்
தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30
நிமிடம் வரை நடைப் பயிற்சி
மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும்
மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள்
பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும்
பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை
எப்பொழுதும் மனதில்
நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை
செய்யுங்கள். அளவுக்கு மீறி
எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம்
பேசுவதில் உங்கள் சக்தியை
வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும்
பொழுது எதிர்காலத்தைப் பற்றி
நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை
கொள்வது நேர விரையம்.
உங்களுக்கு தேவையானது
உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி
செய்யுங்கள். கடந்த காலம் உங்கள்
நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில்
யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக
இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள்
கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள்.
சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு
பாடங்கள்.
20. முடியாது என்று
சொல்லவேண்டிய இடங்களில் தயவு
செய்து முடியாது என்று
சொல்லுங்கள். இது பல
பிரச்சனைகளை ஆரம்பதிலே
தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ
வெளியூரிலோ இருந்தால்
குடும்பத்தில் இருப்பவர்களுக்கும்,
நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக
்கும் அடிக்கடி
தொலைபேசியிலோ, கடிதம்
மூலமாகவோ தொடர்புகொண்டிரு
ங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களை
யும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களை
யும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன
நினைப்பார்களோ என்பதைப் பற்றி
ஒருபொழுதும் கவலை
கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப்
பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று
படுகிறதோ அதை உடனே
செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும்
இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது
சந்தோஷம் தான். அதை தேடி
அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை
கொடுக்காதோ, எது அழகை
கொடுக்காதோ,நிம்மதியைக்
கொடுக்காதோ அதை
நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள்
கண்டிப்பாக மாறும்.

ஆரோக்கியத்தின் கண்ணாடி நாக்கு!

ஆரோக்கியத்தின் கண்ணாடி நாக்கு!

நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் நாம் கரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தமாகும். · உடர் சிவப்பு நிறத்தில் இருந்தால், தொற்றுநோய் இற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளதைக் குறிக்கும்.

“·சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால், இதயம் மற்றும் ரத்தம் சம்பந்தமான நோய்க்கான அறிகுறியாகும். இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி 12 குறைபாட்டின் காரணமாகவும் இவ்வாறு ஏற்படலாம்”.

*நாக்கு நீல நிறத்தில் இருந்தால், சிறுநீரகத்தில்
பாதிப்பு இருப்பதை உணர்த்தும், • மஞ்சள் நிற நாக்கு, வயிறு அல்லது கல்லீரலில்
பிரச்சினை, மஞ்சள் காமாலை நோய்க்கான அறிகுறி களை உணர்த்துகிறது.

நாக்கு வெள்ளை நிறத்தில் காட்சியளித்தால் நோய்த் தொற்று இருப்பதைக் குறிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி
குறைவாக உள்ளதையும் ஈட்டிக்காட்டும்.

சாம்பல் நிறத்தில் இருந்தால், செரிமானம் மற்றும் கவளம் செலுத்த
மூலநோய் பிரச்சிளைகளில் வேண்டும்.

நாக்கை சுத்தமாக பராமரிக்க..

* காலை மாலை இரு வேளையும் பற்களை சுத்தம் செய்வதுபோல நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.

வாரம் ஒரு முறை வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும். இது வாயில் உள்ள நுண்கிருமிகள், பூஞ்சை மற்றும் பாக்மரி யாக்கள் உருவாகுவதைத் தடுக்கும் குணம் கொண்டது.

சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் ஊற்றி, நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

♦️தினமும் நல்லெண்ணெய்யில் ஆயில் புல்லிங்
செய்வது நல்ல பலன் தரும்.

* அவ்வப்போது இளஞ்சூடான நீரில் கல் உப்பு
சேர்த்து வாயைக் கொப்பளிக்கலாம்.
இவ்வழிமுறைகளைப் பின்பற்றினால் நாக்கின்
ஆரோக்கியத்துடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

உணவே உணர்வுகளின் ஆதாரம்

உணவே உணர்வுகளின் ஆதாரம்

உண்ணும் உணவுக்கும், உள்ளத்தின் உணர்வுகளுக்கும் தொடர்பு இருக்கிறது. காலையில் நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தே, நாளில் நமது மனநிலை அமைவதை பல நேரங்களில் உணர்ந்திருப்போம். மனநிலையை நிர்ணயிப்பது ‘செரோடோனின்” எனும் நரம்புக் கடத்தியாகும். இது 95 சதவீதம் வயிற்றில் சுரக்கிறது. அதாவது நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து செரோடோனின் சுரக்கிறது. மனநிலை, தூக்கத்தை முறைப்படுத்துவது. பசியைத் தூண்டுவது, வலியைக் குறைப்பது போன்றவை. இதன் முக்கிய வேலைகளாகும். எத்தகைய உணவுகளை உட்கொள் கிறோமோ, அதைப் பொறுத்து மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது.

மன அழுத்தம் காரணமாக உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு, அளவுக்கு அதிகமாக உண்பதால், உடல் எடை அதிகரித்தல், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், வாழ்வியல் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

நீங்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ; ஏதேனும் குறிப்பிட்ட சுவையின் மீது உங்களுக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டாலோ உடனடியாக கவனியுங்கள். என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறீர்கள் எனத் தெரிந்து கொள்ளுங்கள். மன அழுத்தத்தில் இருந்தால் அதளை சரி செய்யுங்கள்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி உணவு தொடர்பான பதிவுகளைப் பார்ப்பதும், அடுத்த நொடியில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவதும்,
தான். அழுத்தத்தில் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், ஊட்டச்சத்து குறைபாடுகள். மனநிலயயில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். ஆரோக்கிய மில்லாத உணவுப் பழக்கங்கள் மனநிலையிலும், உணர்வுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

உணவை சாப்பிடாமல் தவிர்க்கும்போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையக்கூடும். இதன் மூலம் சோர்வாகவும், பலவீனமாகவும் இருப்பது போன்ற உணர்வு தோன்றும்.

துத்தநாகம், இரும்பு, பி வைட்டமின்கள்: மெக்னீசியம், வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் மனநிலையில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருட்களால் செய்யப்படும் உடணவுகளை சாப்பிடும்போது, ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து எரிச்சல் உணர்வு ஏற்படக்கூடும்.

அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்கும் காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுவது, முழு தானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது, புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, ஒமேகா-3 கொழுப்பு அமிலங் கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது போன்றவற்றை மேற்கொண்டால் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பெண் தலைவர்

கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பெண் தலைவர்

கொரோனா பெருந்தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் மூழ்கியுள்ளன. எண்ணற்ற உயிர்களை பலி கொண்டிருக்கும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர்; தற்போது தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து, தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவ ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் தகுந்த சிகிச்சை முறையும், தடுப்பூசிகளும் இல்லாமல் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். வளர்ந்த நாடுகள் கூட செய்வதறியாமல் நின்றன. அந்த நேரத்தில்தான் கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திக் காட்டியது நியூசிலாந்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் நியூசிலாந்தின் பெண் பிரதமர் ஜெசின்டா அச்டேன் ஆவார்.

கொரோனா பரவல் தீவிரமாகிக் கொண்டிருந்த வேளையில், தொற்றை தடுப்பதற்காக நியூசிலாந்து நாட்டின் எல்லைகளை முடி துரிதமாக செயல்பட்டார் ஜெசின்டா. ஊரடங்கு, முகக்கவசம் அணிதல் போன்ற தடுப்பு முறைகளை கட்டாயமாக்கினார். மக்களின் உயிரைக் காத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். ஜெசின்டாவின் திறமையான ஆளுமையை ஏற்றுக்கொண்ட மக்கள், அவரை இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் ஆக்கி யுள்ளனர்.

1980-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி பிறந்த ஜெசின்டா கேட் அர்டேன். அமெரிக்க கத்தோலிக்க மத வழியைச் சார்ந்தவர். ஜெசின்டா தன்னுடைய மழலைப் பருவத்தில், ஊர் சிறார்கள் காலில் செருப் பின்றியும், உண்ண உணவின்றியும் இருப்பதைக் கண்டு வருந்தினார். ‘அந்த நிலையை மாற்ற தன்னால் என்ன செய்ய முடியும்? என்று அவருக்குள் எழுந்த கேள்வியே, ஜெசின்டாவின் அரசியல் வாழ்விற்கான அடித்தளமானது.

17-ம் வயதில் பட்டப்படிப்புக்கு முன்னரே நியூசிலாந்து தொழிலாளர் கட்சியில் இணைந்தார். ஒரு மறு தேர்தலில் கட்சிக்காக பணி புரிந்தார். அதன் மூலம் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமரும், தன் முன்னோடியுமான ஹெலனுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

2007-ம் ஆண்டு ஒன்றிய சோஷியலிச இளைஞரணி தலைவர் ஆனார் 2017-ம் ஆண்டு மவுண்ட் ஆலபாட் மாநகரின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜெசின்டா. தன் இடைவிடாத உழைப்பால் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஆனார்.

நெருக்கடியான சூழலில் தேர்தலை சந்தித்த அவரது கட்சி, ஜெசின்டாவின் திடமான வழிகாட்டுதலால் 2017-ம் ஆண்டு ஆட்சி அமைத்தது. தனது 37-ம் வயதில் உலகின் இளமையான பிரதமர் ஆனார் ஜெசின்டா.

போர்பஸ் இதழின் மூலம் இந்த வருடத்தின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெசின்டா தற் போது பிரதமராக மட்டுமல்லாமல், தன் இரண்டு வயது மகளுக்கு சிறந்த தாயாகவும் திகழ்கிறார். பெண்கள் வீட்டை மட்டுமல்லாமல், நாட்டையும் மிகச்சிறந்த முறையில் வழி நடத்துவார்கள் என்பதை ஜெசின்டா அர்டேன் மீண்டும் ஒருமுறை இவ்வுலகிற்கு எடுத்துரைத்துள்ளார்.

பற்கள் பராமரிப்பில் கவனம் கொள்ளுங்கள்!

பற்களின் நிறம் எப்படி இருந்தாலும், அவற்றில் ஏற்படும் பாதிப்புகள் தொண்டைக்கு பரவி. பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால், இதயம் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. பற்களை எப்போதும் சுத்தமாக பராமரிப்பது மிக அவசியம். அடிக்கடி இனிப்பு சாப்பிடுவது. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி அருந்துவது, குளிர்ந்த நீரை குடிப்பது ஆகிய வற்றாலும் பற்களில் பாதிப்பு ஏற்படும். அவற்றை குணப்படுத்தக்கூடிய சில பாட்டி வைத்திய குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

அத்தி இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்த நீரை, வெதுவெதுப்பாக ஆற்றி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண். ஈறுகளில் சீழ் பிடித்தல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

ஆலம் மொட்டு, பாகற்காய் இலை. நந்தியா வட்டை வேர் இவற்றில் ஏதேனும் ஒன்றை அடிக்கடி நன்றாக மென்று, பல்வலி உள்ள பகுதியில் சிறிது நேரம் வைத்திருந்து, வெளியே எடுத்து விட்டு வாய் கொப்பளிக்க பல் வலி அகலும்.

வன்னிக்காயை கொதிக்க வைத்த நீரை வெது வெதுப்பாக ஆற்றி. வாய் கொப்பளிக்க ஈறு வீக்கம் மற்றும் வலி ஆகியவை நீங்கும். மேலும். நாக்கு மற்றும் வாயில் புண்கள் இருந்தாலும் ஆறிவிடும்.

வாகை வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி, அதை வெதுவெதுப்பான பதத்தில் வாய் கொப்பளித்து வர ஈறுகள் உறுதியாகும்.

பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல் கூச்சம் நீங்கும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரை பெற்று உண்பது சிறந்தது.

வீட்டிலேயே தயாரிக்கும் பற்பொடி:

தலா 10 கிராம் கற்றைக் காம்பு மற்றும் படிகாரம், தலா 25 கிராம் சீமைச் சுண்ணாம்பு மற்றும் கிராம்பு ஆகியவற்றை பொடித்து சலித்து தயாரித்த பொடி கொண்டு, காலை மற்றும் மாலை பல் தேய்த்து வர பற்களில் ஏற்படும் ரத்தக்கசிவு, ஈறுகளில் ஏற்பட்ட புண்கள் ஆகியவை குணமாகும்.

பொடித்த கற்பூரம் கால் ஸ்பூன், அரைத்த வேப்பிலை பொடி அரை ஸ்பூன், உப்பு அரை ஸ்பூன் சர்க்கரைத் தூள் ஒரு ஸ்பூன் மற்றும் நான்கு சொட்டு எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து, அதன் மூலம் வாரம் இரண்டு முறை பல் துலக்க, ஈறுகள் வெண்மையாக பளபளக்கும். வலுவாகி, பற்கள்

புங்கம் பட்டையை தூள் செய்து, நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்ற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அரை லிட்டர் நல்லெண்ணெய்யில் பத்து கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி, மெழுகு பதம் வரும்போது, புங்கம் பட்டை கசாயத்தை சேர்த்து காய்ச்சி இறக்க வும். இந்த கலவை மூலம் தினமும் இரண்டு வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் அகலும், பல்லுக்கு உறுதியை அளித்து சொத்தை ஏற்படாமலும் தடுக்கும்.