கற்பமூலிகை கருந்துளசி

கற்பமூலிகை கருந்துளசி

கற்பமூலிகை கருந்துளசி

கருந்துளசியின் தாவரப் பெயர் ‘ஆசிமம் டெனி புனோரம் டைப்பிகா’ இதை ‘கிருஷ்ண துளசி என்றும் சொல்வார்கள். கருந்துளசி வறட்சியை தாங்கி வரைக்கூடிய மூலிகைச் செடி. சாதாரண துளசிச் செடி போலவே இருந்தாலும், இதன் தண்டு, பூ, காய் கருமையாக இருப்பதால் ‘கருத்துளசி’ என குறிப்பிடுகிறார்கள். இதற்கு ‘கற்பமூலிகை’ என்ற பெயரும் உண்டு.

கருந்துளசி சுற்றுச்சூழலுக்கு சிறந்த நண்பனாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. சளித் தொல்லைக்கும், வாய் துர்நாற்றத்திற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது.

குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி ‘சுருந்துளசிக் கஷாயம்’ கொடுத்து வந்தால் குணமாகும். தினமும் அதிகாலையில் சாப்பிடுவதற்கு முன்னால் கருந்துளசி இலையை மென்று உண்பதால் கிருமித் தொற்றும், சளிப் பிரச்சினையும் ஏற்படாது. சிறிதளவு கருந்துளசியை பசும்பாலில் சேர்த்து காய்ச்சிக் குடிக்கும் போது ஒவ்வாமையால் ஏற்படுகிற பிரச்சினைகள் தீரும். கருந்துளசியை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிந்தால் ‘சைனஸ்’ தொல்லையால் ஏற்படும் சளி தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.

மேலும் வலிப்பு, அனைத்து விதமான காய்ச்சல்கள் (மலேரியா, ஃப்ளு) மற்றும் தோல் சம்பந்தமான நோய்களை கருந்துளசி குணப்படுத்தும் தன்மை கொண்டது. உடலில் உள்ள கோழையை அகற்றி, உடல் வெப்பத்தை குறைக்கக்கூடிய தன்மை உடையது.

பேன் தொல்லைக்கும் கருந்துளசி நல்ல மருந்தாக செயல்படுகிறது. சிறிதளவு துளசியை இடித்து சாறாக்கி, அதனுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும். கருந்துளசி இலையை இடித்து, பிழிந்த சாறுடன் கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.

கருந்துளசிச் செடி இருக்கிற இடத்தில் கொசுக்கள் வருவதில்லை. இதன் இலைகளுக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபக் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய் களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு கருந்துளசிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here