Home Blog Page 31

சென்னை முதல் டெட்ராயிட் வரை! திவ்யாவின் வெற்றிப் படிகள்

திவ்யாவின் வெற்றிப் படிகள்

உலக அளவில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் தர வரிசையை தொகுத்து அளிக்கும் “ஃபார்ச்சூன் 500” தரப்பட்டியலில் இடம்பிடித்த நிறுவனங்களுக்கு தலைமை ஏற்பது உயரிய சமூக அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. தரவரிசைப் பட்டியலில் உள்ள நிறுவனங்களில் 5 முதல் 7 சதவீத பெண்கள் மட்டுமே அந்த நிறுவனம் அல்லது அதன் ஒரு பிரிவின் தலைமை பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இந்த சூழ்நிலையிலும் தலைமை பொறுப்பை எட்டிப் பிடித்தவர் சென்னையைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவரா ஆவார். 2013-ம் ஆண்டில் அமெரிக்காவின் ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் முதன்மை நிதி அலுவலராக அவர் பொறுப்பேற்றார். அதன் மூலம் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் ஊட்டும் நம்பிக்கைத் தாரகையாக திகழ்கிறார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த நிலையில், வங்கிப் பணியில் இருந்தவாறே தன்னை படிக்க வைத்த அம்மாவின் எண்ணப்படி பள்ளித் தேர்வுகளில் முதலிடம் பெற்றார். பட்டப்படிப்பை சென்னையில் முடித்துவிட்டு, அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

அந்த அனுபவம் பற்றி தெரிவிக்கும் போது, “ஹார்வர்ட் என்னை பல வழிகளில் திணறடித்தது. கலாசார ரீதியான சங்கடங்களையும் அங்கே எதிர்கொண்டேன். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் இங்கே வந்துவிட்டேன். கையில் அதிகப் பணப்புழக்கம் இல்லாததால், நண்பர்கள் கல்விச் சுற்றுலா சென்ற போது என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.

அந்த சமயத்தில் கல்விக் கடனைத் திருப்பி செலுத்துவது பற்றியே எப்போதும் நினைத்து வந்தேன். அந்த நிலையில் உடனே ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டும் என்பதும் கூடுதலான மன அழுத்தத்தை ஏற்படுத்தியது” என்று திவ்யா குறிப்பிடுகிறார்.

படித்து முடித்து, அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் நிதித்துறையில் பகுத்தாய்வாளராக 2004-ம் ஆண்டு சேர்ந்தார். நியூயார்க்கில் வீடு, டெட்ராய்ட்டில் அலுவலகம் என்ற நிலையில் தினமும் விமானப் பயணத்திலேயே சுமார் 3 மணி நேரம் சென்று விடும். அதனால், நேர மேலாண்மையை கற்றுக்கொண்டு உழைத்திருக்கிறார். 2013-ம் ஆண்டில் அதன் முதன்மை நிதி அலுவலர் மற்றும் முதன்மை முதலீட்டு அலுவலர் என இரு துறைகளின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தார். திறமை மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் 2017-ம் ஆண்டில் கார்ப்பரேட் நிதிப்பிரிவு துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.

தற்போது ‘ஸ்ட்ரைப்’ என்ற மின்வர்த்தக நிறுவனத்தின் முதன்மை நிதி அலுவலராகப் பதவியேற்றிருக்கிறார். திறமை இருந்தால் எந்த இலக்கும் தொட்டுவிடும் தூரம் தான் என்பதை திவ்யா சூர்யதேவரா நிரூபித்திருக்கிறார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரி !

நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் நிதி மேலாண்மை நிர்வாகத்தை , மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஏற்றுக்கொண்டு திறம்பட செயல்படுத்துகிறார். முதலாம் உலகப் போரால் ஏற்பட்ட பொரளாதார சிக்கல்களை எதிர்கொள்ள 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் இந்தியா ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் தனியார் வசம் இருந்த நிலையில் , 1949 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டு , கருவூலமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரிசர்வ் வங்கி மூலம் நாட்டின் செலவானிகுரிய நாணயத்தை வெளியிடுவது உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் தற்போது ஆளுநர் சக்தி காந்த தாஸ் ஆவார் .

ரிசர்வ் வங்கியின் நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநரிடம் இணைந்து செயல்பட கூடுதலாக தலைமை நிதி அதிகாரி ஒருவர் வேண்டும் என்ற அடிப்படையிலும் , பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக ரிசர்வ் வங்கி எதிர்கொண்ட சிக்கல்களை மேலாண்மை செய்யும் விதமாகவும், மூன்று ஆண்டுகள் கால பொறுப்பில் 2018 ஆம் ஆண்டில் தலைமை நிதி அதிகாரியாக சுதா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் 12 வது நிர்வாக இயக்குநர் என்ற கூடுதல் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலை பட்டமும், பட்டய கணக்காளர், தணிக்கை கணக்காளர் மற்றும் நிறுவன செயலாளர் ஆகிய படைப்புகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள சுதா பாலகிருஷ்ணன், பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் நிதி மேலாண்மை, வரி விதிப்பு , நிதி தனிக்ககை சமந்தப்பட்ட பதவிகளில் செயலாற்றிய அனுபவம் பெற்றவர்.
தனியார் நிறுவனங்களின் தொழில் வளர்ச்சிக்காக பொது மக்களிடம் இருந்து பங்கு சந்தை மூலம் நிதி முதலீடு பெறும் தேசிய பத்திர பாதுகாப்பு நிறுவனத்தின் ( National securities depacitary limited ) முதன்மை நிதி அலுவலராக வும் , துணை தலைவராகவும் 2013 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார் .

ரிசர்வ் வங்கியின் இருப்பு நிலை அறிக்கையில் அனைத்து திட்டங்களும் அவற்றிற்கான விதி முறைகளுக்கு உட்பட்டு இருப்பதை கவனிக்கும் முக்கிய பணியை மேற்கொள்வது டன், அரசு மற்றும் வங்கி கணக்குகள் பிரிவுக்கும் இவர் பொறுப்பு ஏற்றிருக்கிறார்.
தலைமை நிதி அதிகாரி என்ற வகையில் உள்நாடு மற்றும் வெளி நாடு ஆகியவற்றில் மத்திய வங்கி மேற்கொள்ளும் நிதி முதலீடுகளை மேற்பார்வை இடுவதுடன் , ரிசர்வ் வங்கி கணக்கியல் செயல் திட்டம் , அகணிலை கணக்குகள் , வரவு – செலவு திட்டம் , நிதியியல் முடிவுகள் அறிக்கை , வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் போன்ற முக்கியமான நடவடிக்கைகளும் அவரது தலைமையின் கீழ் நடைபெறும் .
நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் முக்கிய நடவடிக்கைகளை செயல்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரோடு இணைந்து செயலாற்றும் தலைமை நிதி அதிகாரி பதவிக்கு முதன் முதலில் ஒரு பெண் தேர்ந்து எடுக்க பட்டிருப்பது நமக்கெல்லாம் பெருமை தானே !

நம்மைப்பற்றி மற்றவர்களிடம் சொல்லக்கூடாத ஐந்து விஷயங்கள்!

வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவ சில விஷயங்களில் ரகசியம் காப்பது அவசியம் என்று உளவியல் மற்றும் வாழ்வியல் நெறிமுறைகள் வலியுறுத்தி இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஐந்து விஷயங்கள் குறித்து இங்கே காணலாம்.

அடைய வேண்டிய லட்சியம்

எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் சொல்பவர்கள். எப்போதுமே எல்லா விஷயங்களிலும் வெற்றி பெற இயலாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். குறிப்பாக, ஒருவரது லட்சியத்தை ஒரு சிலரிடம் சொல்வது வெற்றிக்கான வழியல்ல என்பது வாழ்வியல் அனுபவம் பெற்றவர்கள் கருத்தாகும். நமது லட்சியம் யாரிடமும் வெளிப்படுத்தப்படாமல் இருக்கும்போது தான் அதை அடைவதற்கான மன உறுதி ஏற்படுகிறது என்று உளவியலாளர்கள் சொல்வதும் சிந்தனைக்குரியது.

பொருளாதார நிலைமை

ஒருவரது சம்பளத்தை வெளியில் சொல்லக்கூடாது என்பதை அனைவரும் அறிவார்கள். தற்போதைய பொருளாதார சூழலில் கணவன், மனைவி ஆகிய இருவரும் சம்பாதிக்கும் நிலையில், அவர்களை சந்திக்கும் உறவினர்களின் முதல் கேள்வியே ‘இருவரும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என்பதாக இருக்கும். இந்த விஷயத்தில் மவுனமாக இருந்து விடுவதே சிறந்தது. வெளியில் சொல்லும் போது, நல்ல விளைவுகள் ஏற்படுவதை விட, உறவுக்கு பாதகமான சூழலே ஏற்படக்கூடும். பணம் என்ற விஷயம் உறவினர்களையும், நண்பர்களையும் பகைவர்களாக மாற்றும் சக்தி பெற்றது என்பதை மனதில் கொள்வது நல்லது.

தனிப்பட்ட விஷயங்கள்

கணவன், மனைவி இருவருக்கிடையிலான உறவு இரு நண்பர்களுக்கிடையிலான நட்பு, ஒருவருக்கு நடந்த சங்கடமான விஷயம், அலுவலக நட்பு ஆகிய விஷயங்களில் ஒருவர் மவுனமாகவும், அமைதியாகவும் இருப்பதே நல்லது. அதன் மூலம் பல எதிர்கால சங்கடங்கள் தவிர்க்கப்படும். சில விஷயங்களில் ஆலோசனை பெற விரும்பினால் அனுபவமும், அக்கறையும் உள்ள நெருக்கமான உறவுகள் அல்லது நண்பர்களை மட்டுமே அணுக வேண்டும். அலுவலகத்தில் அலுவலக பணிகள் பற்றி மட்டும் பேசுவது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உளவியல் அல்லது உடலியல் ரீதியாக ஒருவருக்கு ஏற்பட்டுள்ள ஆரோக்கிய குறைபாடுகளை பொதுவெளியில் தெரிவிப்பது அவசியமற்றது. அதன் காரணமாக, சுய மரியாதை பாதிக்கப்படக்கூடும் என்பதுடன். அனைவரும் பரிதாபமாக பார்க்கக்கூடிய நிலையும் ஏற்படலாம். மேலும் ஒரு சிலர் தற்காலிக மருத்துவ ஆலோசகர்களாக மாறி அவர்களுக்கு தெரிந்த வைத்திய முறைகளை கடைப்பிடிக்கச் சொல்லி வலியுறுத்துவார்கள். அதனால், தக்க மருத்துவரைத் தவிர எல்லோரிடமும் உடல் சார்ந்த குறைகளையோ அல்லது ஆரோக்கிய பாதிப்புகளையோ வெளிப்படுத்துவது கூடாது.

செய்த தர்ம காரியங்கள்

பயன்பாட்டின் அடிப்படையில் ஒருவர் செய்த நல்ல காரியங்களை வெளியில் சொல்லக்கூடாது. வலது கையில் கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது. என்ற சொல்வழக்கு நம்முடைய தமிழ் மரபில் உண்டு. அந்த அளவுக்கு தர்ம காரியங்களில் ரகசியம் காக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான மதிப்பு குறைவதுடன். எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேரிடலாம்.

மலச்சிக்கலை போக்கும் பாதாங்குஸ்தாசனம்!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவு, நார்ச்சத்து குறைவான உணவு, போதிய தண்ணீர் அருந்தாதது, அன்றாட உணவில் காய்கறி, கீரை. பழங்களைச் சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். அதற்கான தீர்வாக தினமும் காலை, மாலை இரு வேளையும் பாதாங்குஸ்தாசனம் என்ற ஆசனத்தைச் செய்யலாம். மருத்துவரின் ஆலோ சனையுடன் இந்த பயிற்சியை மேற்கொள்வது நல்லது.

அஷ்டாங்க யோகம் என்ற இந்திய பாரம்பரிய யோகக்கலையில் குறிப்பிடத்தக்க ஆசனமாக உள்ள இந்த முறையில் உபய பாதாங்குஸ்தாசனம், உத்திட்ட ஹஸ்த பாதாங்குஸ்தாசனம். சுப்த பாதாங்குஸ்தாசனம், பரிவருத்த ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் மற்றும் ஏக பாத பாதாங் குஸ்தாசனம் போன்ற வகைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. அவற்றில் பொதுவான ஒரு முறையை இங்கே காணலாம்.

பாதம் என்பது கால் என்றும், அங்குஸ்தம் என்பது கட்டை விரல் என்றும் பொருள்படும்.

செய்முறை:

தலை மற்றும் முதுகுத்தண்டு ஆகியவை நேராக இருப்பதுபோல நன்றாக நிமிர்ந்து நின்ற நிலையில், கைகளை தலைக்கு மேல் தூக்கியவாறே கீழே குனிய வேண்டும். கை விரல்கள், கால் பெருவிரலைத் தொடும்படி நன்றாக குனிந்த நிலையில் 10 முதல் 20 வினாடிகள் இருக்க வேண்டும். அந்த நிலையில், கால் முட்டி மடங்கிவிடாமல் இருப்பது அவசியம். குனியும் போது மூச்சை வெளிவிட வேண்டும். மேலே நிமிரும்போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

நின்ற நிலையில் செய்ய முடியாதவர்கள் இந்த ஆசனத்தை அமர்ந்த நிலையிலும் செய்யலாம். தரையில் ஒரு விரிப்பின் மீது நிமிர்ந்து உட்கார்ந்து, காலை நேராக நீட்டவும். மெதுவாக, மூச்சை வெளி விட்டவாறே உடலை முன்புறமாக வளைத்து, கை விரல்கள். கால் பெருவிரலை தொடும்படி குனியவும். சில வினாடிகள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு வரவும். மேற்கண்ட இரு முறைகளிலும் ஆசனத்தை செய்யும் போது மூச்சை அடக்கி விடாமல், நிதானமாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும்.

பலன்கள்

தொடர்ந்து செய்யும்போது தொடைகள் உறுதியாவதுடன், இடுப்பு எலும்பு வலுவாகி, பின்புறத் தோற்றத்தை சீராக்குகிறது.

வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளை போக்குகிறது. உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, நாளமில்லா சுரப்பிகளையும் சீராக செயல்பட ஊக்குவிக்கிறது.

தூக்கமின்மை பிரச்சினை, கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதுடன், இனப்பெருக்க உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கும் உதவும்.

சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்ற உடலின் உள் உறுப்புகளின் தடையில்லா செயல்பாட்டுக்கும் இந்த ஆசனம் உதவுகிறது. •

அம்மான் பச்சரிசி மூலிகை சாகுபடி பலனும், வருமானமும்..

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளரக்கூடிய மூலிகைச்செடி அம்மான் பச்சரிசி, ஈரப்பதமான இடங்களில் தானே வளரக்கூடிய இதன் இலைகள், எதிர் அடுக்கில் கூர் நுனிப்பற்களுடன் கூடிய ஈட்டி வடிவம் கொண்டவை. இச்செடிக்கு சித்ர வல்லி, பச்சரிசி, பச்சரிசிக்கீரை. எம்பெருமான் பச்சரிசி என்ற பெயர்களும் உண்டு. 45 சென்டிமீட்டர் உயரம் கொண்ட இது ஆண்டு முழுவதும் வளரும்.

புரதம், கொழுப்புசத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ் பரஸ், இரும்பு மற்றும் வைட்டமின் சத்துக்கள் கொண்ட இதன் இலையை சமைத்து உண்டு வந்தால், உடல் வறட்சி, வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் உள்ள வெடிப்பு சரியாகும். குடல்புழுக்களை அகற்றி. மலமிளக்கியாகவும் செயல்படும். உடல் உஷ்ணத்தைக் குறைத்து. தலை வலியை போக்கும்.

சிவப்பு மற்றும் பச்சை என இரண்டு வகை அம்மான் பச்சரிசி செடியை அனைத்து வகை மண்ணிலும், எந்த பருவத்திலும் பயிரிடலாம். நாற்று பயிரிடுதல் முறையில் செடியை நட்டு, அதை வாடவிடாமல் தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு பராமரித்து கூடுதல் மகசூல் பெறலாம். 90 நாட்களுக்கு ஒரு முறை என வருடம் நான்கு முறை அறுவடை செய்யலாம். அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்ட இந்த செடியை நிழலில் உலர்த்தி வைத்து பயன்படுத்தலாம்.

வர்த்தக ரீதியாக செயல்படுபவர்கள் முழுச் செடியை விற்கலாம். அல்லது வீட்டில் பொடியாக தயாரித்தும் விற்பனை செய்யலாம். செடியை பறித்து, நிழலில் உலர்த்தி கல் உரலில் இடித்து பொடியாக்கலாம். அரைவை மில்லில் கொடுத்தும் பொடி செய்து பெற்றுக்கொள்ளலாம். பொடியை மென்மையான பருத்தி துணி மூலம் சலித்து கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

அம்மான் பச்சரிசி செடி அல்லது பொடியை அரசு அங்கீகாரம் பெற்ற சித்த மருத் துவர்களுக்கு விற்பனை செய்யலாம். அரசு அல்லது தனியார் சித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மொத்த விற்பனையும் செய்யலாம். தற்போது இயற்கை மருத்துவ முறைகளுக்கு வரவேற்பு இருப்பதால் சந்தை மதிப்பு கொண்ட மருத்துவ செடியாகவும் உள்ளது.

சாகுபடி செய்ய ஏக்கர் கணக்கில் இடமோ அல்லது வற்றாத நீர் வளம் வேண்டுமென்றோ அவசியம் இல்லை. வீட்டு தோட்டத்தில் அல்லது மாடித்தோட்டத்திலும் பயிர் செய்யலாம். இட வசதி கொண்டவர்கள் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பசுமை குடில் அமைத்து ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்யலாம். தமிழகம் முழுவதும் கிராமப்புற சாலை ஓரங்களில் விளைந்துள்ள அம்மான் பச்சரிசி செடிதான் மருத்துவ காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. தென் மாவட்ட விளை நிலங்களில் ஊடு பயிராகவும், வாய்க்கால் வரப்பில் வளர்த்தும் விற்பனை செய்து வருகிறார்கள். பயிரிடுவதற்கான ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு தோட்டக்கலைத் துறையினரை அணுகி கூடுதல் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

உடனடி சரும பொலிவு தரும் எலுமிச்சை!

கொளுத்தும் வெயிலில் வெளியில் செல்பவர்களுக்கு மட்டுமே சருமத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால், ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் இருந்தாலும் பல்வேறு காரணங்களால் சரும பாதிப்புகள் ஏற்படலாம். வெப்பம். வியர்வை. உடலின் நீர் வறட்சி மற்றும் மின் விளக்கு வெளிச்சம் போன்றவற்றாலும் பாதிப்பு வரலாம். இதை தடுக்க எலுமிச்சையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் எளிய அழகு குறிப்புகள்.. எலுமிச்சை சாறுடன் தயிர் அல்லது முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து முகத்தில்

தடவி, பத்து நிமிடங்கள் உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர முகத்தில் உள்ள கருமை நீங்கி பொலிவடையும். ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து தேய்த்தால் சருமம் பளபளக்கும். பாலில் எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வர சூரிய ஒளியால் ஏற்படும் கருமையான சரும் நிறம் மாறும்.

முதல் நாள் இரவு எலுமிச்சை சாருடன் பாலாடை சேர்த்து ஊற வைத்து, மறுநாள் காலை அந்த கலவையை தடவி, உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் குளித்தால் சருமத்தின் நிறம் மேம்படும்.

எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் ‘மாஸ்க்’ போன்று தடவினால் சருமத்தின் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி மென்மையாகும். பால் பவுடரில், எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, சில நிமிடங்கள் ஊற வைத்து முகத்தில் ‘மாஸ்க்’ போன்று தடவலாம்.

முதல் நாள் இரவில் ஓட்ஸை ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து, அதில் எலுமிச்சை சாறு மற்றும் புளித்த தயிரைக் கலந்து சருமத்தில் தடவினால், அழுக்கு மற்றும் மாசு ஆகியவற்றை அகற்றி புத்துணர்வை தரும். எலுமிச்சை தோலை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, அதில் ஒரு ஒரு ஸ்பூன் எடுத்து, கால் ஸ்பூன் கிரீன் டீ இலை மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம். அதனால் எண்ணெய் பிசுபிசுப்பு அகன்று முகம் குளிர்ச்சி பெறுவதால் முகப்பரு வராது.

கடலை மாவு மற்றும் எலுமிச்சைப் பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து, சிறிதளவு நீருடன் கலந்து முகத்தில் பூசலாம், எலுமிச்சை பொடி, சந்தனப் பொடி மற்றும் கற்றாழை ஜெல் மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவலாம். இவை வறட்சியை நீக்கி, எண்ணெய் சுரப்பை குறைக்கச் செய்வதால் மென்மையான மற்றும் பளிச்சென்ற சருமம் கிடைக்கும்.

அவ்வளவு பெரிய யானையை சணல் அச்சுறுத்தும்!

மலையோரக் கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து, பயிர்களையும் உயிர்களையும் நாசமாக்கி வருவது அண்மைக்காலத்தில் அதிகமாகிவிட்டது. யானைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள மின்சார வேலிகள் அமைப்பது, மலைத் தொடர்களில் வழக்கமாகி வருகிறது.

யானைகள் விளைநிலங்களுக்குள்ளும், வாழ்விடங்களுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்தது. நம் நாட்டில் மட்டும் உள்ள பிரச்சினை அல்ல இலங்கையிலும் உண்டு. இலங்கையில் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலை தடுக்க மின்சார வேலிகளோடு கூடுதலாக சணல் செடியில் வேலிகள் அமைப்பதற்கு அந்நாட்டின் வன விலங்குகள் அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

ஏன் சணல் செடிகள்?

சணல் செடி வளர்த்தல், பனைமரங்களை நடுதல் எக்ஸ்சோரா எனப்படும் ஒரு வகைச் செடிகளை நடுதல் என மூன்று முறைகளில் யானைகளைக் கட்டுப்படுத்தலாம். இவற்றில் குறைந்த பராமரிப்புச் செலவு, குறுகிய காலத்தில் கிடைக்கும் பயன், ஆகியவற்றை கருத்தில் கொண்டு சணல் செடி வேலியே பொருத்தமானதாக உள்ளது என்று அந்த அமைச்சகம் தீர்மானித்திருக்கிறது.

சணல் எப்படி யானைகளைக் கட்டுப்படுத்தும்?

சணல் செடிகளின் நுனிப்பகுதிகளைபார்த்துப் பார்த்து யானைகள் அச்சம் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விடுமாம். தான்சானியா உட்பட சில நாடுகள் யானைகளிடமிருந்து பயிர்களைக் காக்க சணல் செடிகளை வேலிகளாகப் பயிரிட்டு வெற்றி கண்டிருக்கின்றன. இதேபாணியை இப்போது இலங்கையும் பின்பற்ற இருக்கிறது.

சீனா இந்த சணல் தாவரங்களைத் தனது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரைவாக வளர்த்து, தனது செலவில் சாகுபடி செய்து இலங்கைக்கு அனுப்ப முன்வந்திருக்கிறது. இலங்கையில் கால் பதிக்க விரும்பும் சீனாவின் இன்னொரு முயற்சியாக இது இருக்கலாம்.

ஆனால், இதை ஏன் தமிழக அரசு, நம்மலையோர வனப்பகுதிகளில் முயற்சித்துப் பார்க்ககூடாது? இதன் மூலம் ஒருபுறம் யானைகளை கட்டுப்படுத்த முடியும் இன்னொருபுறம் வனப்பகுதிகளை ஒட்டி வாழும் குடும்பங்களின் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். ஏன் கூடாதா?

Hello world!

1

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!