‘மீம்ஸ்’ மூலம் விவசாயத்துக்கான விழிப்புணர்வு

‘மீம்ஸ்’ மூலம் விவசாயத்துக்கான விழிப்புணர்வு

‘மீம்ஸ்’ மூலம் விவசாயத்துக்கான விழிப்புணர்வு

சமூக வலைத்தளங்களில் அதிக வரவேற்பை பெற்றிருப்பவை ‘மீம்ஸ்’கள். எவ்வளவு பெரிய விஷயத்தையும் மிக எளிதாக ‘மீம்ஸ்’ மூலம் புரிய வைக்கலாம்.

பொழுதுபோக்குக்காகவும், நகைச்சுவைக்காகவும் பயன்படுத்தி வரும் ‘மீம்ஸ்’களை விவசாயம் பற்றிய விழிப்
புணர்வை அதிகரிப்பதற்காக பயன்படுத்தி வருகிறார் மீனா. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் விவசாயம் அல்லாத குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர். விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் வேளாண்மையில் இளம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்று, தற்போது திண்டுக்கல் தோட்டக்கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். விவசாயம் சார்ந்த தகவல்களையும், தொழில்நுட்பக் கருவிகளையும் பறி ‘மீம்ஸ்’ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

நண்பர்களை கேலி செய்வதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் ‘மீம்ஸ்’ வடிவமைக்க ஆரம்பித்தேன். பின்பு
மிம்ஸ் மூலம் விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என யோசித்து 2018-ம் ஆண்டில்
இருந்து விவசாயத்துக்கு அவசியமான தகவல்கள் குறித்த ‘மீம்ஸ்’களை பகிர்ந்து வருகிறேன்.

ஆரம்ப காலத்தில் ‘மீம்ஸ்’ எழுதி சமூக ஊடகங்களில் பகிரும்போது வரவேற்பு குறைவாகவே இருந்தது நாட்கள் செல்லச் செல்ல பார்வையாளர்கள், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்று இவற்றை ரசிக்கவும், பகிரவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்” என்கிறார்.

இவர் தனது முகநூல் பக்கத்திலும், யூடியூப் பக்கத்திலும் வேளாண்மை, பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, பயிர்க் கடன், இயந்திர நடவு, இயற்கை விவசாயம், பூச்சிக்கொல்லி, தேளி வளர்ப்பு, தற்சார்பு விவசாயம், நன்மை செய்யும் பூச்சிகள், கீரை வளர்ப்பு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளிட்ட முழு தகவல்களையும் செய்முறை விளக்கங்களுடன் பதிவிடுகிறார்.

“விவசாயத்தை தொழில் என்று கூறுகிறோம். அது மனித ஆற்றலை வெளிப் படுத்தும் அடிப்படை நாகரிகத்தின் அடையாளமாகும். நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகளின் வாழ்க்கை, போராட்டங்களும், சவால்களும் நிறைந்தது. அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் கல்லூரி நண்பர் களுடன் இணைந்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். மேலும் விவசாயத்தில் ஈடுபட நினைக்கும் இளம் தலை முறையினருக்கு ஆலோசனைகளும் வழங்கி வருகிறோம்” என்றார்.

விவசாயத்தில் தனது பங்களிப்பிற்காக ‘அக்ரி விழுது’ விருதினைப் பெற்றுள்ளார். மீனா எழுதும் வேளாண்மை சார்ந்த மீம்ஸ்கள் விவசாயிகளிடத்தில் மட்டுமில்லாமல், இளம் தலைமுறையினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. பிறருக்கு உதவும் நல்ல சிந்தனைகளும், சிறிது முயற்சியும் இருந்தால். எந்த பொருளையும் பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் மீனா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here