பற்கள் பராமரிப்பில் கவனம் கொள்ளுங்கள்!

பற்கள் பராமரிப்பில் கவனம் கொள்ளுங்கள்!

பற்களின் நிறம் எப்படி இருந்தாலும், அவற்றில் ஏற்படும் பாதிப்புகள் தொண்டைக்கு பரவி. பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால், இதயம் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. பற்களை எப்போதும் சுத்தமாக பராமரிப்பது மிக அவசியம். அடிக்கடி இனிப்பு சாப்பிடுவது. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி அருந்துவது, குளிர்ந்த நீரை குடிப்பது ஆகிய வற்றாலும் பற்களில் பாதிப்பு ஏற்படும். அவற்றை குணப்படுத்தக்கூடிய சில பாட்டி வைத்திய குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

அத்தி இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்த நீரை, வெதுவெதுப்பாக ஆற்றி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண். ஈறுகளில் சீழ் பிடித்தல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

ஆலம் மொட்டு, பாகற்காய் இலை. நந்தியா வட்டை வேர் இவற்றில் ஏதேனும் ஒன்றை அடிக்கடி நன்றாக மென்று, பல்வலி உள்ள பகுதியில் சிறிது நேரம் வைத்திருந்து, வெளியே எடுத்து விட்டு வாய் கொப்பளிக்க பல் வலி அகலும்.

வன்னிக்காயை கொதிக்க வைத்த நீரை வெது வெதுப்பாக ஆற்றி. வாய் கொப்பளிக்க ஈறு வீக்கம் மற்றும் வலி ஆகியவை நீங்கும். மேலும். நாக்கு மற்றும் வாயில் புண்கள் இருந்தாலும் ஆறிவிடும்.

வாகை வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி, அதை வெதுவெதுப்பான பதத்தில் வாய் கொப்பளித்து வர ஈறுகள் உறுதியாகும்.

பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல் கூச்சம் நீங்கும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரை பெற்று உண்பது சிறந்தது.

வீட்டிலேயே தயாரிக்கும் பற்பொடி:

தலா 10 கிராம் கற்றைக் காம்பு மற்றும் படிகாரம், தலா 25 கிராம் சீமைச் சுண்ணாம்பு மற்றும் கிராம்பு ஆகியவற்றை பொடித்து சலித்து தயாரித்த பொடி கொண்டு, காலை மற்றும் மாலை பல் தேய்த்து வர பற்களில் ஏற்படும் ரத்தக்கசிவு, ஈறுகளில் ஏற்பட்ட புண்கள் ஆகியவை குணமாகும்.

பொடித்த கற்பூரம் கால் ஸ்பூன், அரைத்த வேப்பிலை பொடி அரை ஸ்பூன், உப்பு அரை ஸ்பூன் சர்க்கரைத் தூள் ஒரு ஸ்பூன் மற்றும் நான்கு சொட்டு எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து, அதன் மூலம் வாரம் இரண்டு முறை பல் துலக்க, ஈறுகள் வெண்மையாக பளபளக்கும். வலுவாகி, பற்கள்

புங்கம் பட்டையை தூள் செய்து, நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்ற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அரை லிட்டர் நல்லெண்ணெய்யில் பத்து கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி, மெழுகு பதம் வரும்போது, புங்கம் பட்டை கசாயத்தை சேர்த்து காய்ச்சி இறக்க வும். இந்த கலவை மூலம் தினமும் இரண்டு வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் அகலும், பல்லுக்கு உறுதியை அளித்து சொத்தை ஏற்படாமலும் தடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here