Home Blog Page 24

செங்கோட்டை நுழைவு வாயில் கட்டிடத்தை இடிக்கக்கூடாது – அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

செங்கோட்டை நகராட்சி எல்லை நுழைவுவாயில் கட்டிடத்தை இடிக்க அனுமதிக்க முடியாது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி நுழைவாயில் பகுதியில் அப்போதைய கேரள அரசால் திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் சங்கு முத்திரை பொறிக்கப்பட்ட துவாரபாலகா்கள் சிலையுடன் கூடிய பழைமைவாய்ந்த நுழைவுவாயில் அமைந்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக்கூறி, நுழைவு வாயிலை அகற்றும் பொருட்டு மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் செங்கோட்டை நகா்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் ஷ்யாம் சுந்தா், துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையா் இளவரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெகன், சுடா்ஒளி, சரஸ்வதி, நகர திமுக செயலா் எஸ்எம்.ரஹீம், நகர காங்கிரஸ் தலைவா் ராம உள்பட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், நூறாண்டு பழமையும் பெருமையும் வாய்ந்த நுழைவு வாயிலை பேணி பாதுகாப்பது செங்கோட்டை நகர மக்களின் கடமையாகும். பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி பாரம்பரியமிக்க நுழைவு வாயில் கட்டிடத்தை இடிக்க அனுமதிக்க முடியாது எனவும், போக்குவரத்து நெருக்கடியான நேரங்களில் கூடுதலாக போலீசாரை நியமித்து போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்கலாம்: மாஞ்சோலை தபால் பட்டுவாடா: காட்டு வழியே பயணம்!

மாஞ்சோலை தபால் பட்டுவாடா: காட்டு வழியே பயணம்!

மாஞ்சோலையில் தோட்டத் தொழிலாளியின் மகளாகப் பிறந்து 25 ஆண்டுகளுக்கு முன் அஞ்சல் அதிகாரியாகத் தேர்வானதிலிருந்து இன்றுவரை அடர்ந்த வனப்பகுதியில் 5 கி.மீ. தொலைவு நடந்து சென்று பணியாற்றி வருகிறார் பாத்திமா ராணி.

தென்மாவட்டங்களின் ஊட்டி என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் ஒன்று நாலுமுக்கு. இங்கு 4 தலைமுறைகளுக்கு முன் தோட்டத் தொழிலாளியாகச் சென்ற குடும்பத்தில் 3-ஆவது தலைமுறையாகப் பிறந்தவர் பாத்திமா ராணி. தொடக்கக் கல்வியை நாலுமுக்கில் உள்ள தொடக்கப் பள்ளியிலும், மேல்நிலைப் படிப்பை விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியிலும் பயின்ற பாத்திமா ராணி, தூத்துக்குடியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்துள்ளார். கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன் திருமணமானதால் படிப்பைத் தொடர முடியவில்லை.

இந்நிலையில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கோதையாறு கிளை அஞ்சலக அதிகாரி பணிக்கு அழைப்பு வந்ததையடுத்து அதில் சேர்ந்துள்ளார். அந்தப் பணியில் சேர்வதற்கு அவரது பெயரில் உள்ள அசையா சொத்தை அடமானமாக கேட்டதையடுத்து, தனக்குச் சொந்தமான நிலத்தை பாத்திமா ராணி பெயருக்கு மாற்றி வேலையை உறுதி செய்துள்ளார் அவரது மாமனார்.

1997 ஏப்ரல் 5 -ஆம் தேதி பணியில் சேர்ந்த பாத்திமா ராணி, கடந்த 25 ஆண்டுகளாக நாலுமுக்கு பகுதியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள கோதையாறு மேல்தங்கல் கிளை அஞ்சல் அலுவலகத்துக்கு அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்று பணியாற்றி வருகிறார்.

இந்தப் பணியில் சேர்ந்தது, குறித்தும் , வனப்பகுதியில் நடந்து சென்று வருவது குறித்தும் பாத்திமா ராணி கூறியது:

“”அஞ்சலக அதிகாரி பணிக்கு அழைப்பு வந்ததும் எனது கணவர் ஜெயக்குமார், மாமனார், மாமியார் ஆகியோர் தைரியம் கூறி பணியில் சேர வைத்தனர். மேலும் சிறிது காலம் எனது கணவர் நாலுமுக்கிலிருந்து கோதையாறுக்கு என்னுடன் துணைக்கு வந்தார். அப்போது, வனமும், வனவிலங்குகளும் காரணமின்றி நம்மைத் துன்புறுத்தாது என்று எனக்கு மன தைரியத்தை ஏற்படுத்தினார் கணவர். அதன் பின் தனியாகவே நாலுமுக்கிலிருந்து கோதையாறு மேல்தங்கல் கிளை அஞ்சல் அலுவலகத்துக்கு இன்றுவரை தனியாக நடந்தே சென்று வருகிறேன். ஒவ்வொரு நாளும் நான் பணிக்குச் செல்லும்போது மனதில் ஆண்டவரை ஜெபித்துக் கொண்டே செல்வேன்.

பணிக்குச் செல்லும் வழியில் காட்டுப் பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளை பலமுறை பார்த்துள்ளேன். ஒருமுறை புலிக்குட்டி ஒன்று பாதையில் தனியாக நின்று கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த நான், தாய்ப் புலியும் அருகில் புதரில் நிற்கலாம் என்று நினைத்து அப்படியே பின்வாங்கினேன். சுமார் முக்கால் மணி நேரம் காத்திருந்து புலி சென்றுவிட்டதை உறுதிப்படுத்திய பின் அந்த இடத்தைக் கடந்தேன்.

நாலுமுக்கு துணை அஞ்சலகத்தில் இருந்து தபால்கள் பெற்று கோதையாறு மேல்தங்கலில் உள்ள மின் வாரிய ஊழியர்கள், வனத்துறையினர், காவல் துறையினருக்கு பட்டுவாடா செய்வது, அலுவலகப் பணிகளை மேற்கொள்வது எனது பணியாகும்.

நாலுமுக்கு துணை அஞ்சலகத்தில் பணி புரியும் உயரதிகாரிகளும், சக பணியாளர்களும் எனக்கு தைரியம் கொடுத்து உறுதுணையாக உள்ளனர். மேலும் கோதையாறு மேல்தங்கலில் தங்கியுள்ள அனைத்துத் துறைப் பணியாளர்களும் என்னை சகோதரியாக நினைத்து அன்பாகவும், ஆதரவாகவும் நடந்து கொள்வதால் நான் பணிக்கு 5 கி.மீ. தொலைவு வனப்பகுதியில் நடந்து வருவதால் ஏற்படும் துன்பம் பெரிதாகத் தெரிவதில்லை. நானும் அவர்களுக்கு சேவை மனப்பான்மையுடன் விருப்பத்தோடு பணி செய்கிறேன்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தன்னம்பிக்கையோடு தங்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நான் இந்தப் பணிக்கு வரும் போது பயமோ தயக்கமோ பட்டிருந்தால் இன்று தோட்டத் தொழிலாளியாகத்தான் இருந்திருப்பேன்.

எனவே பெண்களுக்கு எப்போதும் தன்னம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு சொந்தக் காலில் நிற்கும் திறனை வளர்த்துக் கொண்டால் எந்த இடத்திலும் பெண்களுக்குத் தோல்வியே இருக்காது என்றார்.

நன்றி: கு.அழகியநம்பி | தினமணி

இதையும் படிக்கலாம்: திருவள்ளூர் துணை கலெக்டராக பதவி வகிக்கும் தென்காசி பெண் 

 

தென்காசியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி மாவட்ட அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கொடிக்குறிச்சில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 26.03.2022 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் எழுதப் படிக்கத் தெரிந்தவர் முதல் முதுநிலை பட்டதாரி, B.E., Diploma., ITI., படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இம்முகாமில் கலந்து கொள்ள இருப்பதால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் இந்நிறுவத்தின் மூலம் பதிவு செய்து வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.

இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்பட உள்ளது. எனவே, மாற்றுத்தினாளிகள் மற்றும் இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாதவர்கள் அசல் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வங்கிக் கணக்கு ஆரம்பித்து வங்கிக் கணக்குப்புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலோ அல்லது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற்று வந்தாலோ அவர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Also Read: விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில் பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ (One Stop Center) துவங்கப்பட்டுள்ளது. அதில் சுழற்சி முறையில் பணிபுரிய வழக்கு பணியாளர் – 1, வழக்கு பணியாளர் – 2, பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊதியத் தொகையாக மாதத்திற்கு ரூ.6,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, பணி முன் அனுபவம் மற்றும் ஊதிய விவரங்கள் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Notification – Social Welfare Department 1

Notification – Social Welfare Department 2

கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 04/04/2022 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Application Form – Social Welfare Department

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலகம்,
86A, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,
தென்காசி – 627 811.

மேலும் பல தென்காசி/நெல்லை வேலைவாய்ப்புச் செய்திகளை காண இங்கே அழுத்தவும்..

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

 

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்

அழிந்துவரும் சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு
மார்ச் 20ஆம் தேதி உலகெங்கும் சிட்டுகுருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த ஊர்வன பாதுகாவலர் ஷேக் உசேன் அழிந்து வரும் பறவை இனமான சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு அவைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். சிட்டுக் குருவிகளை பற்றி ஷேக் உசேனிடம் கேட்ட போது, ”சிட்டுக்குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும் பறவையினத்தைச் சேர்ந்தவை. இந்தியாவில் இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள் என அழைக்கப்படுகின்றன. மனிதனுக்கு நன்கு அறிமுகமான இந்த பறவைகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். மூன்று முதல் ஐந்து முட்டைகள் இடும். ஆண், பெண் இரண்டுமே அடைகாத்து குஞ்சுகளை வளர்க்கின்றன. குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன. பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

நாம் ஏற்படுத்தும் பல இழப்புகளால் மரங்களும் பறவைகளும் உலகெங்கும் அழிந்து வருவதால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுகின்றன. தற்போது பல நகர்ப்புறங்களில் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டன. அலைபேசியில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகளின் தாக்கம் குருவியினத்தின் இனப்பெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதனால், இவற்றால் தங்களின் இனத்தை பெருக்க இயலவில்லை என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

இதனால் குருவியினங்களை பாதுகாக்க வேண்டி, சர்வதேச உலக சிட்டுக்குருவி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 தேதி கடைபிடிக்கப்படுகிறது” என்றார்.

ஷேக் உசேன் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சென்று சிட்டுக் குருவிகளை பாதுகாக்க குருவிகளை பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லால் சிட்டு குருவிகளுக்கு எவ்வாறு செயற்கை கூடு செய்வது என்பது பற்றிய விளக்கத்தையும் கொண்டு செல்கிறார். கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், ​​பறவைகளுக்கு மனிதர்களைப் போலவே நிழல்களும், தண்ணீரும், உணவும் தேவைப்படுகிறது. எனவே ஒவ்வொரும் உங்கள் வீடு தேடி வரும் சிட்டுகுருவிகளுக்கு தண்ணீர், தானியங்கள் வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் ஷேக் உசேன்.

இதையும் படிக்கலாம்: திருவள்ளூர் துணை கலெக்டராக பதவி வகிக்கும் தென்காசி பெண் 

20/03/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (20/03/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 20/03/2022

விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு இங்கே காணலாம்..

18/03/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (18/03/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 18/03/2022

விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

 

16/03/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (16/03/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 16/03/2022  

விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

 

15/03/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (15/03/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 15/03/2022   

விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

 

கடையநல்லூர் வனப்பகுதியில் காட்டுத்தீ – விடிய, விடிய போராடிய வனத்துறையினர்

கடையநல்லூர் அருகே மேக்கரை வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான பட்டா இடங்களில் கோடை வெயிலால் இலைகள், சருகுகள் காய்ந்து கிடக்கின்றன. இந்தநிலையில் கடையநல்லூர் வனச்சரகம் மேக்கரை பீட்டுக்கு உள்ளிட்ட வெள்ளக்கல்தேரி பகுதியில் காய்ந்த சருகுகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியது.

இதனால் வடகரை, அச்சன்புதூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு புகை மூட்டமாக தென்படுகிறது. தீயில் கருகிய இலைகள் சாம்பலாக காற்றில் பறந்து வருகிறது.

தகவல் அறிந்ததும் வன ரேஞ்சர் சுரேஷ் உத்தரவின் பேரில் கடையநல்லூர் வனபிரிவு வனவர்கள் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் என சுமார் 25-க்கும் மேற்பட்ட வனக்குழுவினர்கள் விரைந்து சென்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இரவுபகலாக தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். காட்டுத்தீயில் அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகும் அபாயம் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

-தினத்தந்தி

Also Read: விக்கிரமசிங்கபுரத்தில் மீன்பிடிக்க விரித்த வலையில் சிக்கிய 3 மலைப்பாம்புகள்