தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

தென்காசி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், ஆற்றுப்படுத்துநர், சமூகப்பணியாளர், கணக்காளர், தகவல் பகுப்பாளர், உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர், புறத்தொடர்பு பணியாளர் ஆகிய பதவிகள் முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொகுப்பூதியமாக ஒரு மாதத்திற்கு ரூ.8,000 முதல் ரூ.21,000 வரை வழங்கப்படும்.

இப்ப்பதவிகளுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, அனுபவம் போன்ற முழு விபரங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Notification – Tenkasi District Child Protection Unit

கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அல்லது கீழ்க்கண்ட அலுவலகத்தில் நேரில் பெற்று உரிய சான்றிதழ் நகல்களுடன் 23.03.2022 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால்/கொரியர் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Application Form – Tenkasi District Child Protection Unit

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் (பொ.),
அரசினர் குழந்தைகள் இல்லம்,
கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளி அருகில்,
ரெட்டியார்பட்டி, (இருப்பு)
நெட்டூர் வழி,
ஆலங்குளம் தாலுகா,
தென்காசி – 627854.

மேலும் பல தென்காசி மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு இங்கே சொடுக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here