திருநெல்வேலி மாவட்டம் பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பொது சுகாதார ஆய்வகம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியிடமாக உள்ள நுண்ணுயிரியலாளர் (Microbiologist), லேப் டெக்னிஷியன், ஆய்வக உதவியாளர் (Lab Attendant), குளிர்பதன கம்மியர் (Refrigeration Mechanic), மருந்தாளுநர் (Pharmacist), பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant), துணை செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், வாகன ஓட்டுனர், வாகன கிளீனர், மனநல ஆலோசகர் (Psychologist) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க கடைசிநாள்: 13/04/2022
இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள், கல்வித் தகுதி, ஊதியம், பணிபுரிய வேண்டிய இடம் ஆகியவற்றின் விபரங்களை பதவிகள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
▶️ ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ லேப் டெக்னிஷியன் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ நுண்ணுயிரியலாளர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ துணை செவிலியர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ மனநல ஆலோசகர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ வாகன கிளீனர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ ஊர்தி ஓட்டுநர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ பல் மருத்துவ உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ மருந்தாளுநர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ குளிர்பதன கம்மியர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு
Also Read: விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..
செங்கோட்டை அருகே உள்ள கற்குடி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் சிவானந்தம் வரவேற்றார். குற்றாலம் பராசக்தி கல்லூரி விலங்கியல்துறை தலைவர் மாருதிகலைச்செல்வி “நமது கிரகம் நமது ஆரோக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். கல்லூரி மாணவிகள் பள்ளிக்குழந்தைகளுக்கு ஏழு படிநிலைகளில் கைகழுவும் முறையை செய்து காண்பித்தனர். அனைவரும் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்தனர்.
இதேபோல கட்டளைக்குடியிருப்பு துவக்கப்பள்ளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கைதட்டுவதன் அறிவியலும், முக்கியத்துவமும் குறித்து கல்லூரி மாணவிகள் விளக்கினர். ஆசிரியர் ஐயப்பன் நன்றி கூறினார். கிராமப்புற பெண்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவது தொடர்பாக சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சொரிமுத்து அய்யனார் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் புனித நீராடவும், கோவிலில் கிடா வெட்டி படையலிடவும் வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர்.
ஊரடங்கு தளர்வில் கோவிலில் தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதி அளித்தாலும், முடி காணிக்கை செலுத்தவும், பொங்கலிடவும் மட்டுமே அனுமதித்தனர். கிடா வெட்டி படையலிட தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்ட நிலையில், சொரிமுத்து அய்யனார் கோவிலில் வழக்கம்போல் கிடா வெட்டி படையலிட்டு வழிபட அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சொரிமுத்து அய்யனார் கோவிலில் கிடா வெட்டி படையலிட்டு வழிபட 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.



