தென்காசியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தென்காசியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி மாவட்ட அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கொடிக்குறிச்சில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 26.03.2022 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் எழுதப் படிக்கத் தெரிந்தவர் முதல் முதுநிலை பட்டதாரி, B.E., Diploma., ITI., படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இம்முகாமில் கலந்து கொள்ள இருப்பதால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் இந்நிறுவத்தின் மூலம் பதிவு செய்து வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.

இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்பட உள்ளது. எனவே, மாற்றுத்தினாளிகள் மற்றும் இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாதவர்கள் அசல் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வங்கிக் கணக்கு ஆரம்பித்து வங்கிக் கணக்குப்புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலோ அல்லது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற்று வந்தாலோ அவர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Also Read: விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here