இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரி !

இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரி !

நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் நிதி மேலாண்மை நிர்வாகத்தை , மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஏற்றுக்கொண்டு திறம்பட செயல்படுத்துகிறார். முதலாம் உலகப் போரால் ஏற்பட்ட பொரளாதார சிக்கல்களை எதிர்கொள்ள 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் இந்தியா ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் தனியார் வசம் இருந்த நிலையில் , 1949 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டு , கருவூலமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரிசர்வ் வங்கி மூலம் நாட்டின் செலவானிகுரிய நாணயத்தை வெளியிடுவது உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் தற்போது ஆளுநர் சக்தி காந்த தாஸ் ஆவார் .

ரிசர்வ் வங்கியின் நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநரிடம் இணைந்து செயல்பட கூடுதலாக தலைமை நிதி அதிகாரி ஒருவர் வேண்டும் என்ற அடிப்படையிலும் , பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக ரிசர்வ் வங்கி எதிர்கொண்ட சிக்கல்களை மேலாண்மை செய்யும் விதமாகவும், மூன்று ஆண்டுகள் கால பொறுப்பில் 2018 ஆம் ஆண்டில் தலைமை நிதி அதிகாரியாக சுதா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் 12 வது நிர்வாக இயக்குநர் என்ற கூடுதல் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலை பட்டமும், பட்டய கணக்காளர், தணிக்கை கணக்காளர் மற்றும் நிறுவன செயலாளர் ஆகிய படைப்புகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள சுதா பாலகிருஷ்ணன், பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் நிதி மேலாண்மை, வரி விதிப்பு , நிதி தனிக்ககை சமந்தப்பட்ட பதவிகளில் செயலாற்றிய அனுபவம் பெற்றவர்.
தனியார் நிறுவனங்களின் தொழில் வளர்ச்சிக்காக பொது மக்களிடம் இருந்து பங்கு சந்தை மூலம் நிதி முதலீடு பெறும் தேசிய பத்திர பாதுகாப்பு நிறுவனத்தின் ( National securities depacitary limited ) முதன்மை நிதி அலுவலராக வும் , துணை தலைவராகவும் 2013 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார் .

ரிசர்வ் வங்கியின் இருப்பு நிலை அறிக்கையில் அனைத்து திட்டங்களும் அவற்றிற்கான விதி முறைகளுக்கு உட்பட்டு இருப்பதை கவனிக்கும் முக்கிய பணியை மேற்கொள்வது டன், அரசு மற்றும் வங்கி கணக்குகள் பிரிவுக்கும் இவர் பொறுப்பு ஏற்றிருக்கிறார்.
தலைமை நிதி அதிகாரி என்ற வகையில் உள்நாடு மற்றும் வெளி நாடு ஆகியவற்றில் மத்திய வங்கி மேற்கொள்ளும் நிதி முதலீடுகளை மேற்பார்வை இடுவதுடன் , ரிசர்வ் வங்கி கணக்கியல் செயல் திட்டம் , அகணிலை கணக்குகள் , வரவு – செலவு திட்டம் , நிதியியல் முடிவுகள் அறிக்கை , வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் போன்ற முக்கியமான நடவடிக்கைகளும் அவரது தலைமையின் கீழ் நடைபெறும் .
நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் முக்கிய நடவடிக்கைகளை செயல்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரோடு இணைந்து செயலாற்றும் தலைமை நிதி அதிகாரி பதவிக்கு முதன் முதலில் ஒரு பெண் தேர்ந்து எடுக்க பட்டிருப்பது நமக்கெல்லாம் பெருமை தானே !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here