Home Blog Page 23

03/04/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (03/04/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 03/04/2022

Also Read: விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல் துறை சார்பில் கிராமப்புற பள்ளிக் குழந்தைகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல் துறை சார்பில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் சுய உதவிக்குழுவினருக்கு தொற்றுநோய் தடுப்பு, சுகாதார மேம்பாடு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கற்குடி, கட்டளைக்குடியிருப்பு கிராமப்பள்ளிகளில் நடைபெற்றது.

செங்கோட்டை அருகே உள்ள கற்குடி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் சிவானந்தம் வரவேற்றார். குற்றாலம் பராசக்தி கல்லூரி விலங்கியல்துறை தலைவர் மாருதிகலைச்செல்வி “நமது கிரகம் நமது ஆரோக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். கல்லூரி மாணவிகள் பள்ளிக்குழந்தைகளுக்கு ஏழு படிநிலைகளில் கைகழுவும் முறையை செய்து காண்பித்தனர். அனைவரும் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்தனர்.

இதேபோல கட்டளைக்குடியிருப்பு துவக்கப்பள்ளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கைதட்டுவதன் அறிவியலும், முக்கியத்துவமும் குறித்து கல்லூரி மாணவிகள் விளக்கினர். ஆசிரியர் ஐயப்பன் நன்றி கூறினார். கிராமப்புற பெண்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவது தொடர்பாக சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

விலங்கியல்துறை தலைவர் மாருதிகலைச்செல்வி, பேராசிரியைகள் வசந்தி, சாந்திபிரியா, பாரதி, இசக்கியம்மாள், கவிதா, கலைவாணி,ராமலட்சுமி ஆகியோர் பங்கேற்று பேசினர். விலங்கியல்துறை விரிவாக்க குழு உறுப்பினர் சாந்திபிரியா நன்றி கூறினார். சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியை இசக்கியம்மாள், ஆய்வக உதவியாளர் கண்ணன் செய்திருந்தனர்.

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் கிடா வெட்டி படையலிட அனுமதி

2 ஆண்டுகளுக்கு பிறகு காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் கிடா வெட்டி படையலிட அனுமதிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சொரிமுத்து அய்யனார் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் புனித நீராடவும், கோவிலில் கிடா வெட்டி படையலிடவும் வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர்.

ஊரடங்கு தளர்வில் கோவிலில் தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதி அளித்தாலும், முடி காணிக்கை செலுத்தவும், பொங்கலிடவும் மட்டுமே அனுமதித்தனர். கிடா வெட்டி படையலிட தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்ட நிலையில், சொரிமுத்து அய்யனார் கோவிலில் வழக்கம்போல் கிடா வெட்டி படையலிட்டு வழிபட அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சொரிமுத்து அய்யனார் கோவிலில் கிடா வெட்டி படையலிட்டு வழிபட 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

இதனால் திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து, வணங்கினர். தொடர்ந்து பட்டவரையார் சாமிக்கு கிடா வெட்டி படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

இதையும் படிக்க: பண்பொழி திருமலை கோயிலுக்கு ரூ. 40 லட்சத்தில் 2 மினி பஸ்கள்

பண்பொழி திருமலை கோயிலுக்கு ரூ. 40 லட்சத்தில் 2 மினி பஸ்கள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி திருமலைகுமாரசாமி கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து மலை மீது பயணிக்க பக்தர்கள் வசதிக்காக ரூ. 40 லட்சம் மதிப்பில் 2 மினி பஸ்கள் வழங்கப்பட்டன.

இங்கு 400 அடி உயர மலை மீது அமைந்துள்ள திருமலை குமாரசுவாமி கோயிலில் முருகப் பெருமான் பாலமுருகனாக அருள்புரிகிறார். அருணகிரிநாதர், தண்டபாணி சுவாமிகளால் பாடல் பெற்ற தலமாகும். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் கடையநல்லூர் அருணாசலத்தின் முயற்சியால் கோயிலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளது.

முன்பு மலைக்கோயிலுக்கு 544 படிக்கட்டுகள் வழியாக செல்ல முடியும். 2011ல் மலை மீதுள்ள கோயிலுக்கு அறநிலையத்துறை பங்களிப்புடன் வாகனங்கள் செல்லும் வகையில் 2.2 கி.மீ., தூரம் மலைப்பாதை அமைக்கப்பட்டது. இக்கோயிலில் தங்கத்தேர், ராஜகோபுரம் போன்றவையும் அருணாசலம் உள்ளிட்ட நன்கொடையாளர்கள் முயற்சியில் உருவாகின.

மலைக்கோயிலுக்கு தனியார் வாகனத்தில் அழைத்து செல்ல ஒருவருக்கு ரூ.50 வரை வசூலிக்கப்பட்டது. தற்போது அடிவாரத்தில் இருந்து மலை மீது உள்ள கோவில் வரை செல்ல ரூ 40 லட்சம் மதிப்பில் இரண்டு மினி பஸ்களை அருணாசலம் வழங்கியுள்ளார்.

மினி பஸ்கள் வழங்கும் விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கமிஷனர் ஜெ.குமரகுருபரன், இணை கமிஷனர் அன்புமணி, மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ், எம்.எல்.ஏ.,க்கள் சதன் திருமலைக்குமார், பழனி நாடார், நன்கொடையாளர் அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரண்டு பஸ்களுக்கான டிரைவர் சம்பளம், பராமரிப்பு வைப்புத்தொகையும் நன்கொடையாளர் தரப்பில் வழங்கப்பட்டது. பயணிகள் ஒரு முறை பயணிக்க ரூ 10 கட்டணம் என நிர்ணயிக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

 

இதையும் படிக்க: களக்காடு கோவிலில் பக்தர்கள் அமைத்த நந்தவனம்

திருநெல்வேலி இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு

திருநெல்வேலி இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 15/04/2022 மாலை 5.30 மணிக்குள் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்ப்பதவிகளுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு போன்ற முழு விபரங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Tirunelveli Assistant Commissioner Office Employment Notification

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பப்படிவம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர் ,
இந்து சமய அறநிலையத்துறை,
ஏ.ஆர். லைன் ரோடு,
பாளையங்கோட்டை – 627002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.04.2022

Also Read: விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

29/03/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (29/03/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 29/03/2022

Also Read: விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

களக்காடு கோவிலில் பக்தர்கள் அமைத்த நந்தவனம்

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் 100-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பக்தர்கள் நந்தவனம் போல் அமைத்து பராமரித்து வருகிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் பழமையானதாகும். இக்கோவில் வெளி பிரகாரத்தில் முன்பு ஒரு காலத்தில் இருந்த நந்தவனம் அழிந்துவிட்டது.

இந்த நிலையில் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் 5 பேர் மீண்டும் நந்தவனத்தை உருவாக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவர்களை மரங்களை நட்டு, பராமரிக்க தொடங்கினார்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரியவகை மரக்கன்றுகள், மருத்துவ குணம் கொண்ட மூலிகை மரக்கன்றுகள், பூஞ்செடிகள் ஆகியவற்றை சேகரித்து, வரிசைப்படுத்தி தனித்தனியாக பாத்தி கட்டி மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். கடந்த 2 ஆண்டுகளில் அவர்கள் நட்டுவைத்த 80 வகையான 100-க்கும் மேற்பட்ட மரங்கள் நன்றாக வளர்ந்து தற்போது வெளிபிரகாரத்தை நந்தவனம் போல் பசுகையாக்கி உள்ளது.

இங்கு பல்வேறு ராசிக்குரிய 27 வகையான மரங்கள், 40 வில்வ மரங்கள், கோவிலின் ஸ்தல விருட்சமான புன்னை மரம், புரசை மரம், அரியவகை கருங்காலி மரம், மருத்துவ குணமிக்க வெள்ளிளோத்திரம் மரம், ஆவிமரம், புங்கை மரம், கடம்பை மரம், ஓதிய மரம், பன்னீர் மரம், இடி விழுவதை தடுக்கு அத்திமரம், பலா மரம், வெப்பாலை மரம், வெண் தேக்கு, ரோஸ்வுட், ஈட்டி மரம், மகோகணி மரம், நொச்சி மரம், மகாலிங்கம் மரம், மகிலி மரம், செண்பக மரம், ரெயில் தண்டவாளத்திற்கு பயன்படுத்தப்படும் மகாகனி மரம், தென்னை மரம், சிவபெருமானின் சடையை போல் பின்னி வளரக்கூடிய காட்டு எலுமிச்சை மரம் என 100-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளது.

மேலும் சுவாமிக்கு சூடுவதற்காக மனோ ரஞ்சிதம் பூ, கார்த்திகை மாதம் மட்டுமே பூக்கும் தன்மை கொண்ட மந்தாகரப் பூ, முல்லைப் பூ, பாரிஜாதம் உள்ளிட்ட பூச்செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. அழிந்து வரக்கூடிய அரிய வகை மரங்களை அடுத்த தலைமுறையினரும் அறியும் வகையில் நந்தவனத்தில் வளர்த்து வருகின்றனர். இங்கு களா மரங்களும் நடப்பட்டுள்ளது.

இந்த மரங்களை வளர்க்க பக்தர்கள் காய்ந்த இலைகளை மட்டும் இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதற்கு நீர்ப்பாய்ச்சி பராமரித்தும் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதன் இலைகளை பறிக்காதவாறு பாதுகாத்து வருகிறார்கள்.

Also Read: அதே அமைதி, அதே பிரமிப்பு, அதே ஏகாந்தம் – தென்காசி பெரிய கோவில் பயணம்

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையை முன்னிட்டு பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

பாபநாசத்தில் சிவன் கோயிலை தாண்டி களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் வருகிறது. அங்கிருந்து மலைப்பாதை ஆரம்பிக்கிறது. இரு புறமும் பசுமையான காட்சிகளைக் கண்டபடி செல்லும் போது, இடது பக்கத்தில் அகஸ்தியர் அருவி என்ற பலகை நம்மை வரவேற்கிறது. அந்த பாதையில் சென்றால், நீர்மின் தொகுப்பு, அதன் அருகே வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தில் இருந்து இறங்கி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் மிக அழகான ஆலமரம் நிற்கிறது. இங்கு ஏராளமான குரங்குக் கூட்டங்களையும் காண முடிகிறது. அங்கிருந்து சில அடிகள் எடுத்து வைத்தால் அகஸ்தியர் அருவி.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் பாபநாசம் அகஸ்தியர் அருவியும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். தண்ணீர் மிகக் குளிர்ச்சியாகவும், மூலிகைகளின் மணம் கலந்தும் கொட்டுகிறது. இதில் குளிப்பதற்காக நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

அகஸ்தியர் அருவியில் பெண் சுற்றுலாப் பயணிகளும், ஆண் சுற்றுலாப் பயணிகளும் தனித்தனியாக நின்று குளிக்கும் வகையில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெண்களுக்கு உடைகள் மாற்றுவதற்கு தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டதால் சுற்றுலா பயணிகள் அங்கு வருவதை நிறுத்திவிட்டனர். இதனால் தற்போது, அகஸ்தியர் அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கிறார்கள்.

நேற்றும் இன்றும் விடுமுறை நாள் என்பதால் உள்ளூர், வெளியூர், பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவியில் குவிந்தனர். அவர்கள் ஏராளமான வாகனங்களில் வந்திருந்தனர். அருவியில் கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து புதுச்சேரியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
நாங்கள் முதலில் குற்றாலம் சென்றோம். ஆனால் அங்கு தண்ணீர் இல்லை. இதனால் தற்போது பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு வந்தோம். இங்கு தண்ணீர் நன்றாக விழுகிறது. இதில் நாங்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தோம்” என்று கூறினர்.

பாபநாசம் தலையணை மற்றும் அகஸ்தியர் அருவி தடாகப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆழமான தடாகத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழப்பது அதிகரித்து வந்த நிலையில், காவல்துறையினர், சுற்றுலாப் பயணிகள் தடாகத்தில் குளிக்க அனுமதிப்பதில்லை. அது பற்றி தொடர்ந்து ஒலிப்பெருக்கி வாயிலாகவும் அறிவிக்கப்பட்டு வருகிறது. எனவே அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்புக் கருதி அருவிகளில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் குளித்து வருவது நல்லது.

இதையும் படிக்க: மாஞ்சோலை தபால் பட்டுவாடா: காட்டு வழியே பயணம்!

27/03/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (27/03/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 27/03/2022

Also Read: விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

செங்கோட்டை நுழைவு வாயில் கட்டிடத்தை இடிக்கக்கூடாது – அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

செங்கோட்டை நகராட்சி எல்லை நுழைவுவாயில் கட்டிடத்தை இடிக்க அனுமதிக்க முடியாது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி நுழைவாயில் பகுதியில் அப்போதைய கேரள அரசால் திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் சங்கு முத்திரை பொறிக்கப்பட்ட துவாரபாலகா்கள் சிலையுடன் கூடிய பழைமைவாய்ந்த நுழைவுவாயில் அமைந்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக்கூறி, நுழைவு வாயிலை அகற்றும் பொருட்டு மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் செங்கோட்டை நகா்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் ஷ்யாம் சுந்தா், துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையா் இளவரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெகன், சுடா்ஒளி, சரஸ்வதி, நகர திமுக செயலா் எஸ்எம்.ரஹீம், நகர காங்கிரஸ் தலைவா் ராம உள்பட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், நூறாண்டு பழமையும் பெருமையும் வாய்ந்த நுழைவு வாயிலை பேணி பாதுகாப்பது செங்கோட்டை நகர மக்களின் கடமையாகும். பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி பாரம்பரியமிக்க நுழைவு வாயில் கட்டிடத்தை இடிக்க அனுமதிக்க முடியாது எனவும், போக்குவரத்து நெருக்கடியான நேரங்களில் கூடுதலாக போலீசாரை நியமித்து போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்கலாம்: மாஞ்சோலை தபால் பட்டுவாடா: காட்டு வழியே பயணம்!