Home Blog Page 14

20/11/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (20/11/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 20/11/2022 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் – அருவிகளில் நீராடி சரண கோஷம்

குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் குவிந்து, அருவிகளில் குளித்து சரண கோஷம் எழுப்பினர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்கு கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் விரதம் தொடங்குவார்கள். சபரிமலைக்கு தென்காசி வழியாக செல்லும் பெரும்பாலான பக்தர்கள் குற்றாலம் வந்து செல்வது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்கள் குற்றால அருவிகளில் குளித்துவிட்டு இங்குள்ள விநாயகர் கோவிலில் மாலை அணிந்து ஆண்டுதோறும் விரதத்தை தொடங்குவார்கள்.

அதுபோன்று நேற்று காலை குற்றாலம் அருவிகளில் அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். அந்த பக்தர்கள் குளித்துவிட்டு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கூட்டம், கூட்டமாக அய்யப்ப பக்தர்கள் அருவிக்கு வந்தனர். இதனால் அருவிக்கரையில் `சுவாமியே சரணம் அய்யப்பா’ எனும் சரண கோஷங்கள் ஒலித்தன. இன்னும் 2 மாதங்கள் குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

தற்போது குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. மெயின் அருவியில் கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு இருந்ததால் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் மதியம் முதல் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று நேற்றும் ஓரமாக நின்று அய்யப்ய பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே, தென்காசியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் கேரள மாநிலம் ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

நவ.18 இன்றைய நிலவரம்: இன்று காலை ஐந்தருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பழைய குற்றாலம் மற்றும் மெயினருவியில் அதிக வெள்ளப்பெருக்கு நீடித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:களக்காடு கோவிலில் பக்தர்கள் அமைத்த நந்தவனம்

18/11/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (18/11/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 18/11/2022 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

13/11/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (13/11/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 13/11/2022 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

கடையம்: 3 பேரை கடித்து குதறிய கரடிக்கு ரேபிஸ் நோய் – பரபரப்பு தகவல்கள்

கடையம் அருகே 3 பேரை கடித்து குதறிய 10 வயது பெண் கரடிக்கு ரேபிஸ் நோய் பரவியது எப்படி? என்பது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் கடந்த 6ம் தேதி பைக்கில் சென்ற வியாபாரியை வழிமறித்து பெண் கரடி கடித்து குதறியது. இதை தடுக்கச் சென்ற இரண்டு விவசாயிகளையும் கரடி கடித்து குதறியதால் 3 பேரும் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து 3 பேரை கடித்து குதறிய பெண் கரடியை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது காட்டுப்பகுதிக்குள் பதுங்கியிருந்த கரடி மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். எனவே கரடியை பிடிக்க முயற்சிக்கும் போது தாக்குதல் நடத்தலாம் என்பதால், பாதுகாப்பு கருதி, நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன், கால்நடை ஆய்வாளர் அர்னால்ட் ஆகியோர் சுமார் 15 அடி தூரத்தில் இருந்து மயக்க ஊசி செலுத்தி அன்று இரவில் கரடியை பிடித்தனர்.

பிடிபட்ட கரடி மறுநாள் களக்காடு அருகே செங்கல்தேரி அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் மயக்க ஊசி ெசலுத்தி பிடிபட்ட கரடி திடீரென மர்மமான முறையில் இறந்தது. இதனால் மயக்க மருந்து பாதிப்பினால் கரடி இறந்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால், கரடி நுரையீரல் பாதிப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் கரடியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து களக்காடு தலையணை அருகே கரடி உடல் எரிக்கப்பட்டது. இந்நிலையில் கரடியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது. இதில் இறந்த கரடிக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு மட்டுமின்றி ரேபிஸ் எனும் வெறிநோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனாலேயே கரடி ஆக்ரோஷத்துடன் மனிதர்களை தாக்கியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். பொதுவாக ரேபிஸ் நோய் தாக்கினால் மனிதர்களோ, விலங்குகளோ 100 சதவீதம் இறப்பு உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் இறந்த பெண் கரடிக்கு ரேபிஸ் நோய் எப்படி பரவியது என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். உயிரிழந்த இந்த பெண் கரடி பல நாட்களாக ஊருக்குள் நடமாடி வந்துள்ளது. அப்போது, ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட நாய் உள்ளிட்ட ஏதேனும் விலங்குகளை தாக்கிய போது கரடிக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து நெல்லை ராமையன்பட்டி கால்நடை மருத்துவகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் துறை தலைவரும், பேராசிரியருமான முத்துக்கிருஷ்ணன் கூறுகையில், ‘ரேபிஸ் எனும் ஆட்கொல்லி நோய், கடிப்பது மற்றும் தோலில் காயத்தை ஏற்படுத்துவது மூலம் பரவும். இறந்த கரடிக்கு ரேபிஸ் நோய் இருந்ததால் இந்த கரடி கடித்த விலங்குகளுக்கும், மற்ற மனிதர்களுக்கும் ரேபிஸ் நோய் தாக்கியிருக்கும்.

கரடியின் விரல் பட்டு காயம் ஏற்பட்டாலும் பரவும். இந்த நோயின் அறிகுறிகள் உடனடியாக தெரியாது. பாதிக்கபட்டவர்களின் எதிர்ப்பு சக்தியை பொறுத்து 3 மாதமோ, 6 மாதமோ அல்லது ஒரு வருடத்துக்கு பிறகு தான் தெரியும். இந்த நோய்க்கு பாதிக்கபட்டவர்கள் வெறி பிடித்த நாய் எப்படி இருக்குமோ அது போன்று மிகவும் ஆக்ரோசமாக காணப்படுவர். அதனால் உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும்.

நானும் என்னுடன் பிரேத பரிசோதனையில் இருந்தவர்களும் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டோம். மொத்தம் 4 தடுப்பூசிகள் போட வேண்டும். அதிக அளவு மயக்க மருந்து கொடுத்ததால் கரடி இறந்திருக்கலாம் என்பது தவறான தகவல். கரடியை பிடிக்க இரண்டு ஊசிகள் போடப்பட்டது. மயக்கம் தெளிவதற்கு 4 மணி முதல் 6 மணி நேரம் ஆகும். இறந்த இந்த கரடி இறப்பதற்கு சில நாட்கள் முன் உணவருந்தாமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது’ என்றார்.

காயமடைந்தவர்களுக்கு தடுப்பூசி

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குநர் செண்பகபிரியா கூறுகையில், ‘இறந்த கரடிக்கு ரேபிஸ் நோய் பரவியுள்ளது. ஊருக்குள் புகுந்த இந்த கரடியை நாய் கடித்திருந்தாலும் அல்லது வவ்வால், மரநாய் கடிப்பதன் மூலமும் பரவியிருக்கலாம். கரடி தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.

தாக்குதல் சம்பவம் நடந்த அன்று கரடி துரத்திய பொதுமக்கள் மற்றும் காயம்பட்டவர்களை மீட்ட வனத்துறையினருக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த உள்ளோம். இதுகுறித்து தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநரிடம் பேசி உள்ளேன். மருந்துகளை தயார் செய்து விரைவில் அப்பகுதியில் தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி போடப்படும்’ என்றார்.

இதையும் படிக்கலாமே: கடையம் அருகே 3 பேரை கடித்து குதறிய கரடி திடீர் உயிரிழப்பு: அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டதா?

தவற விடாதீர்: கடையம்: மீண்டும் கரடி நடமாட்டமா? வனத்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு

மேக்கரை மலைப்பாதையில் சென்ற அரசு பஸ்சை விரட்டிய யானையால் பரபரப்பு

மேக்கரை மலைப்பாதையில் சென்ற அரசு பஸ்சை விரட்டிய யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.

தமிழக- கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேக்கரையில் இருந்து அச்சன்கோவிலுக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக செல்லும் சாலையில் யானை, கரடி, மான், மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று மேக்கரையில் இருந்து அச்சன்கோவிலுக்கு வனப்பகுதி வழியாக கேரள மாநில அரசு பஸ் சென்றபோது, சாலையோரம் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. எனவே அவற்றின் ஓரமாக மெதுவாக கடந்து சென்று விடலாம் என்று கருதி, டிரைவர் பஸ்சை இயக்கினார். பயணிகள் அச்சம் அப்போது கூட்டமாக நின்ற யானைகளில் ஒன்று திடீரென்று பஸ்சை நோக்கி ஓடி வந்து பிளிறியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர்.

இதற்கிடையே யானை நெருங்குவதற்குள் பஸ்சை டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றார். எனினும் சிறிதுதூரம் ஓடி வந்த யானை பின்னர் சாலையோரமாக நின்றது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மேக்கரையில் இருந்து அச்சன்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையானது அடர்வனம் நிறைந்த பகுதி என்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

தவற விடாதீர்: வனப்பகுதிக்குள் திசை தெரியாமல் அலைந்த பெண் – வினோத செடி உரசியதால் வழிதவறி சென்றதாக தகவல்

கடையம்: மீண்டும் கரடி நடமாட்டமா? வனத்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு

கடையம் அருகே மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, வனத்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, வனத்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரடி நடமாட்டம் தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டி அமைந்துள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் கடந்த 6-ந் தேதி கரடி கடித்து குதறியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஊருக்குள் கரடி வந்ததாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் தீப்பந்தங்களுடன் சென்று தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் கரடி நடமாட்டத்திற்கான அறிகுறி எதுவும் இல்லை என தெரிவித்தனர்.

இருப்பினும் பொதுமக்களின் அச்சத்தை போக்குவதற்காக கடையம் வனச்சரக அலுவலர் கருணாமூர்த்தி, வனவர் முருகேசன், வனக்காப்பாளர் ரமேஷ் பாபு, சோமசுந்தரம், மணி, காட்வின் மற்றும் வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் என 48 பேர் நேற்று வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் கரடி நடமாட்டத்தை அறிவதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கரடி நடமாட்டம் இருப்பதாக பரவும் வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: கடையம் அருகே 3 பேரை கடித்து குதறிய கரடி திடீர் உயிரிழப்பு: அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டதா?

09/11/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (09/11/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 09/11/2022 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

கடையம் அருகே 3 பேரை கடித்து குதறிய கரடி திடீர் உயிரிழப்பு: அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டதா?

கரடிக்கு செலுத்தப்பட்ட ஊசியில் அதிக அளவு மயக்க மருந்து சேர்க்கப்பட்டதா?

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் காட்டு விலங்குகள் அடிக்கடி நுழைவது வாடிக்கையாகிவிட்டது. விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றி, யானை, கரடி ஆகியவை நுழைந்து சேதத்தை ஏற்படுத்திவருகின்றன. அத்துடன், சிறுத்தைகள் குடியிருப்புக்குள் நுழைந்து ஆடுகள், நாய் உள்ளிட்டவற்றை அடித்துத் தூக்கிச் சென்றுவிடுகின்றன.

அதனால் வனப்பகுதியிலுள்ள 18 கி.மீ தூரத்துக்கு சோலார் மின்வேலி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கிராம மகக்ள் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து 15 கி.மீ தூரத்துக்கு சோலார் மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் அகழியும் வெட்டப்பட்டிருக்கிறது. ஆனாலும், காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் குறையவில்லை.

இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி மசாலா வியாபாரி வைகுண்டமணி என்பவர் தனது பைக்கில் பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்துக்குச் சென்றிருக்கிறார். அவரை வழிமறித்த கரடி திடீரென தாக்கியதில் அலறித் துடித்திருக்கிறார். அப்போது அந்த வழியாகச் சென்றவர், அதை கவனித்து கிராமத்துக்குள் சென்று தகவல் தெரிவித்திருக்கிறார்.

கரடியிடம் சிக்கிய வைகுண்டமணியைக் காப்பாற்ற முயன்ற சகோதரர்களான சைலப்பன், நாகேந்திரன் ஆகியோரையும் கரடி பலமாகத் தாக்கியது. அதில் சைலேந்திரனுக்கு ஒரு கண்ணும் நாகேந்திரனுக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டன். இருவரின் முகம், வாய், மூக்கு உள்ளிட்டவை சிதைந்தன. அதனால் இருவருக்கும் அறுவை சிகிச்சை மூலம் சிதைந்த முகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இருவரும் நலமுடன் இருப்பதாக நெல்லை அரசு மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

வியாபாரி மற்றும் விவசாயிகளைத் தாக்கிய கரடியை சுட்டுப் பிடிக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் நெல்லை அரசு கால்நடை மருத்துவமனையிலிருந்து மருத்துவர் வரவழைப்பட்டு கரடிக்கு மயக்க மருந்து செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் கரடி பிடிபட்டது. நான்கு மணி நேரம் மயக்கத்தில் இருந்த கரடி வாகனத்தில் ஏற்றப்பட்டு, களக்காடு அருகே செங்கல்தேரி வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அடர்ந்த வனப்பகுதியில் கரடியை வனத்துறையில் விட்டதும் காட்டுக்குள் ஓடிச்சென்று மறைந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் வனத்துறை ஊழியர்கள் அந்த பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது வனத்துறையினர் விட்ட இடத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் அந்த கரடி இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்தனர். கரடியின் திடீர் சாவு குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அதிகமான நுரையீரல் பாதிப்பு காரணமாக கரடி இறந்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கரடிக்கு அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தியதாலேயே உயிரிழப்பு நேர்ந்திருப்பதாக வன உயிரின ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்துப் பேசியவர்கள், “இரண்டு மணி நேரத்துக்கு மயக்கம் இருக்கும் வகையிலேயே மயக்க ஊசியைச் செலுத்த வேண்டும். ஆனால், கடையத்தில் பிடிபட்ட கரடி நான்கு மணி நேரத்துக்கும் மேலாக மயக்கத்திலேயே இருந்தது. அதனால் ஏற்பட்ட பாதிப்பினாலேயே உயிரிழந்திருக்க வேண்டும்” என்கிறார்கள்.

இது தொடர்பாக வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கடையம் பகுதியில் பிடிபட்ட கரடி செங்கல்தேரி வனப்பகுதியில் கொண்டு செல்லப்பட்டு காட்டுக்குள் விடப்பட்டது. 7-ம் தேதி மாலை 5 மணியளவில் உயிரிழந்துவிட்டது. கரடியை உடற்கூறாய்வு செய்ததில், 10 வயதுகொண்ட கரடிக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. அதன் காரணமாக உயிரிழந்த கரடியை எரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

நன்றி: விகடன்

 

 

 

31/10/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (31/10/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 31/10/2022 

*விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

*விண்ணப்பிக்க தவறாதீர்: தென்காசி: நியாயவிலை கடைகளில் விற்பனையாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group