நெகிழி இல்லா குற்றாலம்.. சுற்றுலாப் பயணிகளுக்கு துணிப்பைகள் விநியோகம்

நெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி குற்றாலம்…

இயற்கை அன்னையின் பெருங்கொடையாக விளங்கும் குற்றாலத்தில் நெகிழிப் பயன்பாட்டை குறைக்கவும், நெகிழியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கை உணர்த்தவும் நேற்று (16 ஜூலை 2023) 5,000 சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக துணிப்பைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுமை வலசை இயக்கம் மற்றும் Tenkasi Life செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் சுப்புலெட்சுமி குரூப்ஸ் உரிமையாளர் திரு.கண்ணன், தென்காசி கேன்சர் சென்டர் நிறுவனரும், குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்கத் தலைவருமான மருத்துவர் சிவச்சந்திரன், குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்க செயலாளர் திரு.சந்திரதாஸ், K Shark Power Technologies உரிமையாளர் திரு.சாமி, ஓய்வுபெற்ற துணை வேளாண்மை அலுவலர் திரு.ஷேக் முகைதீன், ஸ்ரீ வெற்றிவேல் மேட்ரிமோனி நிறுவனரும், பேச்சாளருமான திரு.காந்தி, பட்டிமன்ற பேச்சாளரும் F&F Unisex Salon உரிமையாளருமான திருமதி.மஹ்முதா சையத் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

 

Tenkasi Life சார்பில் ஜஸ்டின், வாசு, நசீர், தனலெட்சுமி, ஜாஸ்மின் கலந்து கொண்டனர். பசுமை வலசை இயக்கம் சார்பில் ஆண்டார் கிருஷ்ணன், முருகேசன், சாம்சன், ராம்குமார், சக்தி குமார், சீனிவாசன், கணேஷ், அனிஷ், நவீன் மற்றும் ஜெய் கம்யூட்டர் கார்த்திக், சந்துரு, ஈஸ்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக Tenkasi Life Chief Admin சின்னத்துரை நன்றி கூறினார்.

துணிப்பை வாங்குவதற்கு சுப்புலெட்சுமி குரூப்ஸ், செல்வராணி டெக்ஸ்டைல்ஸ், தென்காசி கேன்சர் சென்டர், கே ஷார்க் பவர் டெக்னாலஜிஸ் ஸ்பான்சர் செய்திருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நிலா ரெஸ்டாரண்ட் மதிய உணவு வழங்கியது.

குற்றாலத்தில் நெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக துணிப்பைகள் வழங்கியிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here