திருநெல்வேலி மின் மாவட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருநெல்வேலி மின் மாவட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருநெல்வேலி மாவட்ட மின் ஆளுமை சங்கத்தின் கீழ் மின்-மாவட்ட மேலாளர் (E-District Manager) பதவிக்கு தகுதி வாய்ந்த திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

▶️ பி.இ., (BE) அல்லது பி.டெக் (B.Tech), பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் (Computer Science), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (Information and Communication Technology), ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும். அல்லது மூன்றாண்டு இளங்கலை படிப்பு முடித்து, முதுகலை படிப்பில் எம்.சி.ஏ, எம்.எஸ்.சி., கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் பொறியியல் (Software Engineering) போன்ற படிப்பு படித்தவராக இருக்க வேண்டும்.

▶️ வேறு துறை படிப்பு படித்தவர்கள் இத்தேர்வில் பங்கேற்க முடியாது.

▶️ விண்ணப்பதாரர் கண்டிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பதற்கான இருப்பிடச் சான்றிதழ் அல்லது பிறப்பிடச் சான்றிதழ் இணைக்க வேண்டும்.

▶️ வயது வரம்பு: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

▶️ தகுதியுடையோர் ஆன்லைன் வழியாக வருகிற 14-03-2022 மாலை 6.00 மணிக்குள் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

▶️ ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் விபரங்கள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் குறித்த விபரங்கள் 21-03-2022 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.

▶️ விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் வேறு விபரங்கள் எதுவும் அனுப்பப்பட மாட்டாது.

▶️ஆன்லைன் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் வருகிற 02-04-2022 சனிக்கிழமை அன்று திருநெல்வேலியில வைத்து நடைபெறவிருக்கும் ஆன்லைன் தேர்விற்கு நேரில் வரவேண்டும். அதனைத்தொடர்ந்து ஆன்லைன் தேர்வில் மதிப்பெண் தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்வு நடைபெறும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

▶️▶️ Notification for Tirunelveli E-District Manager post 

▶️▶️ To apply click here  

Also Read: 06/03/2022: தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here