தென்காசியில் 23-ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தென்காசியில் 23-ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தென்காசியில் வருகிற 23ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

தென்காசி நகராட்சி ஆணையாளர் எம்.பாரிஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலைச் சுற்றி உள்ள நான்கு ரத வீதி மற்றும் அம்மன் சன்னதி பஜார், சுவாமி சன்னதி பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் முன்புறம் சாலையில் கடையை நீட்டிப்பு செய்தும் வியாபார பொருட்களை வைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பகுதிகளில் பலர் தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்வதாலும், தென்காசி சுற்றுவட்டார பகுதியில் இருந்து அதிகப்படியான மக்கள் இப்பகுதிக்கு பொருட்களை வாங்க வந்து செல்வதாலும் இந்த பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அவசர காலங்களில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. தற்போது குற்றால சீசன் தொடங்க உள்ள நிலையில் மேலும் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் நான்கு ரத வீதிகளிலும் ஏற்படும்.

எனவே வருகிற 22-ஆம் தேதிக்குள் நான்கு ரத வீதிகள் மற்றும் அம்மன் சன்னதி பஜார், சுவாமி சன்னதி பஜார் ஆகிய சாலைகளில் முன்புறம் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நகராட்சியால் வருகிற 23-ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகையையும் ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிக்கலாம்: மாஞ்சோலை தபால் பட்டுவாடா: காட்டு வழியே பயணம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here