நாணயத்தை விழுங்கிய சிறுவன் – அறுவை சிகிச்சையின்றி வெளியே எடுத்த தென்காசி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள்.

19-01-2023 இரவு 11.30 மணிக்கு தென்காசி மெடிக்கல் சென்டர் & தென்காசி கேன்சர் சென்டர் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை உதவி கேட்டு ஒரு போன் வருகிறது. நாங்கள் தென்காசி அருகிலுள்ள கிராமம். 3 வயது குழந்தை நாணயம் விழுங்கி விட்டான். திருநெல்வேலி போக சொல்கிறார்கள், என்ன செய்வது? பதட்டத்துடன் சொல்லி முடிக்கிறார்கள்.

மருத்துவமனை உதவியாளர் விவரங்களை போனில் சேகரித்து தலைமை மருத்துவரிடம் தெரிவிக்க, தலைமை மருத்துவர் அனைத்து விவரங்களையும் கேட்டு, மருத்துவமனைக்கு கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என்று கூறுகின்றனர். அனைத்து விவரம் பெற்றுக்கொண்டு, தன்மைக்கு ஏற்ப அனைத்தையும் ஏற்பாடுகளையும் அவர்கள் வருவதற்குள் செய்யும்படி அறிவுறுத்துகிறார் தலைமை மருத்துவர்.

மருத்துவக்குழுவினர் அனைத்து விவரங்களையும் பெற்றுக்கொண்டு தன்மைக்கு ஏற்ப அனைத்தையும் முன்னேற்பாடுகளும் மருத்துவமனையில் தயாராகிக் கொண்டிருக்கிறது. மயக்க மருந்து மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், தலைமை மருத்துவர், உதவி மருத்துவர்கள் என 5 மருத்துவர்கள் கொண்ட குழு தயார் நிலையில் இரவு 11.30 மணிக்கு வெறும் 15 நிமிடங்களுக்குள் தயார் நிலையில் உள்ளது.

எக்ஸ்-ரே தயார், ஆபரேஷன் தியேட்டர் தயார், ஆக்ஸிஜன் தயார். அனைத்தும் குழந்தை வருவதற்குள். குழந்தை அழைத்து வந்த உடனே குழந்தையின் நிலையை உணர்ந்து அவனை கீழே படுக்க வைக்காதீர்கள் என்று கூறி, எக்ஸ்-ரே மற்றும் அடுத்தடுத்த சிகிச்சை ஆய்வுக் கட்டங்களில் நுரையீரலுக்கு போகும் பாதைக்கும் உணவு பாதைக்கும் இடையே மிக மோசமான இடத்தில் நின்றது. இன்னும் மோசமான சூழ்நிலைக்கு தயாராக மருத்துவமனையையும் மருத்துவர்களையும் தள்ளியது.

கடும் போராட்டங்களுக்கு மத்தியில் வெறும் 30 நிமிடங்களில் நாணயம் வெளியே எடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் வெறும் 30 நிமிடங்களில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டது. ஏதும் அறியா அந்த குழந்தையின் வாழ்க்கை புத்தகத்தில்.

அனைவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி. சிறிது நேர ஓய்வுக்கு பின் மறுநாள் காலை அனைவரும் திருப்தியுடன் வீடு சென்றனர். கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக. 24மணி நேர மருத்துவருடன் கூடிய சேவை. தென்காசி மெடிக்கல் சென்டரின் 24 மணிநேர மருத்துவருடன் கூடிய சேவை சொல்லல்ல; செயல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here