தென்காசி சுகாதார மாவட்டம், வடகரை கீழ்பிடாகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர் (Account Assistant) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும்
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரியில் B.Com மற்றும் Tally படிப்புப்பிரிவு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
Application for the post of Account Assistant
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13.04.2022 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ/தபால் மூலமாகவோ துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர்
அலுவலக வளாகம், தென்காசி– 627 811 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
Also Read: விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி மாவட்ட பொது சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்புகள்
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..