Home Blog Page 26

25/02/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (25/02/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 25/02/2022

மேக்கரை அகத்தியர் கோவில் வரலாறு

நீண்ட காலத்திற்கு முன்பு, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், மேக்கரை அகத்தியர் கோவில் அமைந்துள்ள பகுதியை, பழங்குடியினத்தை சேர்ந்த தலைவர் ஆட்சி செய்து வந்தார். கடவுள் சுப்பிரமணியரின் தீவிர பக்தரான அவர், தினமும் அர்ப்பணிப்புடன் பிரார்த்தனை மேற்கொண்டு வந்தார். வாழ்க்கையின் முதல் பாதியை மகிழ்ச்சியாக கழிந்த அவருக்கு, பிற்பகுதி, பல்வேறு உடல்நலக்குறைவால் பாதிப்பு அடைந்து இருந்தார். உடல்நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளால் உழன்று வந்த அவர், இத்தகைய இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான வழிகளை வேண்டி, கடவுள் சுப்பிரமணியரிடம் பிரார்த்தனை மேற்கொண்டார். மனமிறங்கி வந்த கடவுள் சுப்பிரமணியர், மிகப்பெரும் முனிவரான அகத்தியரின் ஆசிகளை பெறுமாறு அவருக்கு அறிவுறுத்தினார். தான் அவதியுறும் இத்தகைய இன்னல்களுக்கு, நவக்கிரக தோஷமே காரணம் என அகத்தியரின் மூலமாக உணர்ந்த அவர், நவக்கிரகங்களுக்கு, ஒரு புனித கோவிலை கட்டினார்.

கோவில் புனரமைப்பு விழாவிற்கு உரிய தேதியை தேர்ந்தெடுத்த பின்னர், அவர், மிகுந்த நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புத் தன்மையுடன் ஹோம சடங்குகளை செய்யத் துவங்கினார். இந்த நிகழ்வின்போது அவர், நிறைய தடைகளையும், தடங்கல்களையும் எதிர்கொண்டார். தான் கண்ட கெட்ட சகுனங்களினால், பெரிதும் கவலைப்பட்ட அவர், அத்தகைய தடைகளுக்கான காரணங்களை தனக்குக் காட்டி, கோவில் சீரமைப்பு விழாவை, நல்லபடியாக நடக்க ஆசிர்வதிக்கும்படி, கடவுள் சுப்பிரமணியரை வேண்டினார்.  அவர் கட்டி வரும் கோவிலில், விநாயகப் பெருமானை இடம்பெறாமல் போனதே இந்த தடைகளுக்கு காரணம் என கடவுள் சுப்பிரமணியர் தெரிவித்தார். பிறகு கடவுள் சுப்பிரமணியர், தனது அருள் பிரசன்னத்தை முன்வைத்து, கட்டித்தழுவிக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார். அப்போது அங்கு விநாயகப் பெருமான், தனது வடிவத்தை காட்டுகிறார். பிரமாண்ட யானைப்பாறை வடிவில், முழங்கால் இட்டு, பெரிய காதுகள், தொப்பை உடன் அழகான தும்பிக்கை உடன், விநாயகர் காட்சி அளிக்கிறார். விநாயகரின் சிலை பிரமாண்டமாக பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, எல்லாம் சரியாக நடைபெற்றது. இந்தக் கோவில், இயற்கைப் பேரிடர்களால் சிதிலம் அடைந்தது.  பின்னர் அதே அகத்தியரின் வழிகாட்டுதல்களின்படி,  இந்த கோவில் மீண்டும் உருவாக்கப்பட்டது.

எல்லா கோவில்களிலும், விநாயகப் பெருமான், முதன்மைக் கடவுளாக முன்புறம் இருந்து அருள்பாலிக்கிறார். ஆனால், இந்த கோவிலில் மட்டும் அகத்திய முனிவரின் அறிவுறுத்தலின்படி, விநாயகப் பெருமானின் சன்னதி பின்புறம் அமைக்கப்பட்டு உள்ளது. ஒன்பது நவக்கிரகங்ளையும் கவனிப்பது போல் அவரது சன்னதி அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புனித தலத்தில் உருவமற்ற வகையில் சுற்றித் திரியும் துறவிகள், தங்கள் பக்தர்களை ஆசீர்வதிப்பதை உணர முடியும் என நம்பப்படுகிறது. தர்ப்பைப்புல் எனப்படும் புனித புல், இங்கு மட்டுமல்லாது, இந்த இடத்தை சுற்றி அடர்த்தியாக வளர்ந்து இருப்பதால், இந்த இடம் மிகவும் புனிதம் மிக்கதாக கருதப்படுகிறது. இயற்கையில் வளரும் தாவரங்களுக்கு இடையே, அண்டத்தின் ஆற்றலை அறிந்து கொள்ளும் சக்தி, இந்த தர்ப்பைப் புல்லுக்கு மட்டுமே உள்ளது. இதனாலேயே, இக்கோயிலில் நடத்தப்படும் சடங்குகள்,  பூஜைகளில் தர்ப்பைப் புல் பயன்படுத்தப்படுகிறது. கோவிலின் கோபுர கலசத்தின் உச்சியில் தர்ப்பைப் புல்லினால் கயிறு கட்டப்படுகிறது குடமுழுக்கு உள்ளிட்ட புதுப்பிப்பு நிகழ்வுகளில் நடத்தப்படும் ஹோம சடங்குகளில், தர்ப்பைப் புல் பயன்படுத்தப்படுகிறது. அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்ட கங்கை நீரால், இங்கு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிக்கலாம்: அதே அமைதி, அதே பிரமிப்பு, அதே ஏகாந்தம் – தென்காசி பெரிய கோவில் பயணம்

 

 

Tenkasi Life Annual Awards 2022

0
Please enter your email, so we can follow up with you.
நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபரின் முழுப்பெயர், ஊர், முழுநேரப் பணி, வயது மற்றும் அவர் செய்த சாதனைகள்/ சேவைகள் குறித்து கீழே உள்ள பாக்ஸில் சுருக்கமாகவோ விளக்கமாகவோ பதிவு செய்யவும்

அதே அமைதி, அதே பிரமிப்பு, அதே ஏகாந்தம் – தென்காசி பெரிய கோவில் பயணம்

வெகுநாட்களுக்குப் பின் தென்காசி பெரிய கோவிலுக்குப் போக வேண்டும் போல் இருந்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு பிரம்மாண்டகளும் பிரம்மிப்புகளும், நாளுக்குள் நாள் அதன் அளவில் குறைந்து கொண்டே இருக்க, பெரிய கோவில் மட்டும் அப்படியே இருக்கிறது. அதே அமைதி, அதே பிரமிப்பு. அதே ஏகாந்தம்.

முன்பெல்லாம் காரணமே இல்லாமல் இந்தக் கோவிலுக்குச் சென்று வருவேன். கோவிலுக்குச் சென்று வர காரணம் தேவையா என்ன?

பரம கல்யாணியில் படித்த வரையிலும் வாரத்தின் இருநாட்கள் நிச்சயமாய் விஸ்வநாதரைப் பார்த்தாக வேண்டும். முத்தையா சாரிடம் ஸ்போக்கன் இங்கிலீஷ் சேர்ந்தாலும் சேர்ந்தோம். சரியாக கோபுர வாசலுக்கு அருகிலேயே டியூஷன் சென்டரைப் பிடித்திருந்தார். முத்தையா சார் எந்தளவுக்கு நாத்திகம் பேசுவாரோ, அந்த அளவுக்கு சிவபக்தரும் கூட. பெரிய கோவிலின் சிற்பக் கலைகள் குறித்தும், பராக்கிரமப் பாண்டியனின் கலை சிந்தனைகள் குறித்தும், பொதிகை சித்தர்கள் குறித்தும் அவர் பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

பிற்காலப் பாண்டியர்களில் ஒருவரான பராக்கிரமப் பாண்டியனுக்குப் பின், இத்தனைக் கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட கோவில்கள் எதுவும் தமிழகத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. மூன்று புறமும் மலைகள் சூழ, அதன் மையமாய் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதனுக்கும் அவன் மூலமாக எங்களுக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்திருக்கிறது. கோவிலால் நிறைந்த ஊர் தென்காசி என்பதில் எப்போதும் எங்களுக்குப் பெருமை உண்டு. கோவிலைச் சுற்றித்தான் ஒட்டுமொத்த ஊரும். ஊரின் வேர் இந்த இடங்களில் தான் மிக வலுவாக ஊன்றபட்டு இருக்கிறது.

அந்த நாட்களில் பெரிய கோவிலை உலகம்மன் கோவில் என்று தான் சொல்வோம். விபரம் தெரிய ஆரம்பித்த நாட்களில் இந்தக் கோவிலின் முதல் பெயர் காசி விஸ்வநாதர் கோவில் என்பதை ஏற்றுக்கொள்வதற்குச் சற்றே சிரமமாக இருந்தது. இன்றைக்கும் யாரேனும் ஒருவர் மூலமாக உலகம்மன் கோவில் என்றழைக்கப்படும் போது உள்ளுக்குள் எதோ ஓர் இனம் புரியா சந்தோஷம் எழுவதைக் கண்டுகொள்ள முடிகிறது.

பெரிய கோவிலைச் சுற்றி எழும்பி வீசும் காற்றின் அருமையை அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்குத் தகுந்த மாதம் ஆடி தான். அடித்து வீசுகின்ற அந்தக் காற்றில் கோபுரத்தின் நுழைவாயில் அத்தனை கம்பீரமாக நம்மை வரவேற்கும். கோபுரத்தைக் கடந்ததும் ஒரு சிறிய புல்வெளி உண்டு. என்னுடைய சிறுவயது நாட்கள் மிகப் பசுமையாக நினைவில் இருப்பது இந்தப் புல்வெளியைச் சுற்றித்தான். எப்போதும் ஈரமாக இருக்கும் அந்தப் புல்வெளிதான் எங்களுக்கான மைதானமாக இருந்தது.

மெரினா பீச்சில் அமர்ந்து காற்று வாங்குவதைப் போல, கோவில் வாசலில் அமர்ந்து காற்று வாங்குவதற்கென்றே ஒரு கூட்டம் வரும். ஒரு கட்டத்தில் பட்டாணி சுண்டல். பால் பாயாசம் வரைக்கும் விற்கத் தொடங்கினார்கள். புல்வெளியில் அமர்ந்து கொண்டு சாப்பிட்ட கோவில் பனியாரமும் ரவா லட்டும் இன்றைக்கும் அந்த வாசத்தை எழுப்பிக்கொண்டுதான் இருக்கின்றன.

மிகச் சரியாகச் சொல்வதென்றால், சிறுவயதில் இருந்து இப்போது வரைக்கும் நான் பார்த்த எந்தக் காட்சிகளும் மாறாமல் அத்தனையும் அப்படியேத் தான் இருக்கின்றன. எல்லாமும் அதனதன் இடத்தில் பொருந்தி நின்று அப்படியே வேலை செய்வதைப் போல. சரியாக சொல்வதென்றால் கோபுர வாசலின் அருகே ஒரு பெரியவர் பால்கோவா விற்றுக்கொண்டிருப்பார், அவரைத் தவிர எல்லாமும் அதனதன் இடத்தில் அப்படியேத் தான் இருக்கின்றன.

ஊரில் எது மாறினாலும் கோவில் மட்டும் அப்படியே இருக்கிறது. அதே பிரம்மாண்டத்துடன், அதே பூரணத்துடன். நாங்கள் ஆசீர்வதிக்கபட்டவர்கள்.

எழுத்து: Srinivasan Balakrishnan

 

10/01/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (10/01/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 10/01/2022

09/01/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (09/01/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 09/01/2022

02/01/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (02/01/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 02/01/2022

26/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (26/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

PDF: Today Job Vacancy 26/12/2021

21 மாதங்களுக்கு பிறகு அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: நீர்வரத்து அதிகரிப்பால் மணிமுத்தாறில் குளிக்க தடை

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்ததை படத்தில் காணலாம்.

21 மாதங்களுக்கு பிறகு பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் பாபநாசம் அகஸ்தியர் அருவியும் ஒன்றாகும். இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இதில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்த பகுதி வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் காரணமாக ஏராளமான சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது. இதில் சமீபத்தில் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அகஸ்தியர் அருவியிலும் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் 21 மாதங்களுக்கு பிறகு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் நேற்று முதல் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்த அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் நேற்று அருவியில் குவிந்தனர். தண்ணீர் நன்றாக விழுந்ததால் அதில் அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மணிமுத்தாறு அருவி

இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்றொரு பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் கடந்த 21 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதை அறிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க திரண்டனர்.

ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் அருவியை மட்டும் பார்த்து சென்றனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

19/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (19/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

PDF: Today Job Vacancy 19/12/2021