Home Blog Page 22

தென்காசி வழியாக மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில்

நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக மேட்டு்ப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.

தென்னக ரெயில்வே சார்பில் நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து வருகிற ஏப்ரல் 21-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், வருகிற 22-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.06030) நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு தென்காசி ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 12.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 6.25 மணிக்கு கோவைக்கும், 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்துக்கும் சென்றடைகிறது.

நிற்கும் இடங்கள்

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06029) மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தென்காசி ரெயில் நிலையம் சென்றடைகிறது. காலை 7.45 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. இந்த ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, போத்தனூர், கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயிலில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டிகள், ஒரு பார்சல் வேனுடன் இணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். இந்த வாராந்திர சிறப்பு ரெயில் சிறப்பு கட்டணத்தில் இயக்கப்படுவதால், வழக்கமான எக்ஸ்பிரஸ் ரெயில் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது, 10 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டவுடன் கட்டணம் உயர்ந்துவிடும்.
இருக்கைகளின் எண்ணிக்கை குறையும் போது, கட்டணம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வனப்பகுதிக்குள் திசை தெரியாமல் அலைந்த பெண் – வினோத செடி உரசியதால் வழிதவறி சென்றதாக தகவல்

10/04/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (10/04/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 10/04/2022

விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்ட பொது சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

09/04/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (09/04/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 09/04/2022

விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்ட பொது சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

தென்காசி துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தென்காசி துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில்
காலியாக உள்ள தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Co-ordinator) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். M.Sc. Computer Science அல்லது MCA அல்லது B.E. Computer Science படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 32
மாத ஊதியம்: ரூ.21000
விண்ணப்பிக்க கடைசிநாள்: 13/04/2022

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

Application for the post of IT Co-ordinator

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13.04.2022 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ/தபால் மூலமாகவோ துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், தென்காசி– 627 811 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement for the post of IT Co-ordinator, Account Assistant and Driver(MMU)

Also Read: விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி மாவட்ட பொது சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்புகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு

தென்காசி சுகாதார மாவட்டம், பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள வாகன ஓட்டுநர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Heavy Driving License உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 32
மாத ஊதியம்: ரூ.9000
விண்ணப்பிக்க கடைசிநாள்: 13/04/2022

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

Application for the post of Driver

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13.04.2022 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ/தபால் மூலமாகவோ துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், தென்காசி– 627 811 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement for the post of IT Co-ordinator, Account Assistant and Driver(MMU)

Also Read: விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி மாவட்ட பொது சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்புகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

பழைய குற்றாலம் மலையில் காட்டுத்தீ

குற்றாலம் மலையில் காட்டுத்தீ பிடித்தது. இதில் பல அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.

கடையம் வனச்சரக பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராமநதி அணை அருகே மலையில் காட்டுத்தீ பிடித்தது. உடனே வனத்துறையினர் அங்கு சென்று போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில் நேற்று குற்றாலம் மலைக்கு மேல் பழைய குற்றாலம் பகுதியில் காட்டுத்தீ பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட வன அலுவலர் செண்பகப்பிரியா, கடையம் வனச்சரகர் ராதை உள்ளிட்டோர் காட்டுத்தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி வனத்துறையினர் 35 பேர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் அங்குள்ள ஏராளமான அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

வீடியோ இணைப்பு: பற்றி எரியும் பழைய குற்றாலம்

இதையும் படிக்க: வனப்பகுதிக்குள் திசை தெரியாமல் அலைந்த பெண் – வினோத செடி உரசியதால் வழிதவறி சென்றதாக தகவல்

தென்காசி: வடகரை கீழ்பிடாகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு

தென்காசி சுகாதார மாவட்டம், வடகரை கீழ்பிடாகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர் (Account Assistant) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும்
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரியில் B.Com மற்றும் Tally படிப்புப்பிரிவு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

▶️வயது வரம்பு: 32
▶️மாத ஊதியம்: ரூ.12000
▶️விண்ணப்பிக்க கடைசிநாள்: 13/04/2022

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

Application for the post of Account Assistant

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13.04.2022 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ/தபால் மூலமாகவோ துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர்
அலுவலக வளாகம், தென்காசி– 627 811 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Also Read: விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி மாவட்ட பொது சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்புகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

தென்காசி மாவட்ட பொது சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு

தென்காசி மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Co-ordinator), கணக்கு உதவியாளர் (Account Assistant), வாகன ஓட்டுநர் ஆகிய பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13.04.2022 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

▶️பதவியிடங்களின் எண்ணிக்கை: 03
▶️வயது வரம்பு: 32
▶️மாத ஊதியம்: ரூ.9,000 – ரூ.21,000

இப்பதவிகளுக்கான கல்வித்தகுதி உள்ளிட்ட முழு விபரங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Advertisement for the post of IT Co-ordinator, Account Assistant and Driver(MMU)

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

Application for the post of IT Co-ordinator, Account Assistant and Driver

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்,
தென்காசி-627811.

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

Also Read: விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி மாவட்ட பொது சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்புகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

வனப்பகுதிக்குள் திசை தெரியாமல் அலைந்த பெண் – வினோத செடி உரசியதால் வழிதவறி சென்றதாக தகவல்

வால்பாறையில் விறகு எடுக்க சென்றபோது வனப்பகுதிக்குள் திசை தெரியாமல் அலைந்த பெண் மீட்கப்பட்டார். வினோத செடி பட்டதால் வழிதவறி சென்றதாக தெரியவந்து உள்ளது.

அடர்ந்து பரந்து இருக்கும் வனப்பகுதிக்குள் நாம் தெரிந்து கொள்ளாத விஷயங்கள் பல உள்ளன. ஆள் விழுங்கும் மரம், மதி மயக்கும் செடி, திசை திருப்பும் செடி, கையை வைத்தால் இழுத்துக் கொள்ளும் பூக்கள் என்று பலவகையான செடிகளும், மரங்களும் உள்ளன. இதுபோன்ற செடி, மரங்களில் சிக்கி உயிரையும் மாய்த்தது உண்டு. அதுபோன்றுதான் ஒரு வினோத செடியிடம் சிக்கி மதி மயங்கி, திசை தெரியாமல் அலைந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டு உள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சந்திரா என்கிற வேலுத்தாய் (வயது 54). தேயிலை பறிக்கும் வேலை செய்து வரும் இவர் விறகு எடுக்க அக்காமலை எஸ்டேட் அருகே உள்ள ஊசிமலை வனப்பகுதிக்குள் சென்றார்.

நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை. இதனால் வனத்துறையினர் அவரை தேடி பார்த்தனர். ஆனால் இருள் சூழ்ந்துவிட்டதால், தேடும் பணி கைவிடப்பட்டது. தொடர்ந்து 2-வது நாளாக அவரை தேடும் பணி நடந்தது. டிரோன் உதவியுடனும் தேடப்பட்டது. ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அக்காமலை பகுதியில் இருந்து 5 கி.மீ. தூரம் கொண்ட கீழ்ப்பகுதியான சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி பகுதியில் தேயிலை பறிக்கும் உடையுடன் நின்றிருந்த வேலுத்தாயை அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது விறகு எடுக்க சென்றபோது வழிதவறி வந்ததாக கூறினார். இதையடுத்து அவரை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து சின்னக்கல்லார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ”அக்காமலை வனப்பகுதியில் ஏராளமான வினோதமான செடிகள் உள்ளன. இதில் திசைதிருப்பான் என்ற செடி உள்ளது. அது நம் மீது உரசினால் நமக்கு சுயநினைவு இருக்காது. இதனால் நாம் எங்கு செல்கிறோம் என்றே நமக்கு தெரியாது. அதன்படிதான் வனப்பகுதிக்குள் சென்ற வேலுத்தாய் மீது இந்த செடி உரசி உள்ளது. இதனால்தான் அவர் சுயநினைவை இழந்து திசை தெரியாமல் பல கி.மீ. தூரம் சுற்றி உள்ளார்.

பின்னர் சுயநினைவுக்கு வந்ததும், இருள் சூழ்ந்துவிட்டதை அறிந்த அவர் அங்குள்ள ஒரு பாறை இடுக்கில் இரவு முழுவதும் இருந்துள்ளார். பின்னர் காலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து உள்ளார். இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம் அதிகம் உண்டு. சுயநினைவை இழந்துவிடுபவர்கள் அதிடம் சிக்கினால் அதோ கதிதான். நல்லவேளையாக வேலுத்தாய் வனவிலங்கிடம் சிக்க வில்லை. எனவே தனியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்கள்.

-தினத்தந்தி

இதையும் படிக்கலாம்: அவ்வளவு பெரிய யானையை சணல் அச்சுறுத்தும்!

திருநெல்வேலி மாவட்ட பொது சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்புகள்

திருநெல்வேலி மாவட்டம் பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பொது சுகாதார ஆய்வகம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியிடமாக உள்ள நுண்ணுயிரியலாளர் (Microbiologist), லேப் டெக்னிஷியன், ஆய்வக உதவியாளர் (Lab Attendant), குளிர்பதன கம்மியர் (Refrigeration Mechanic), மருந்தாளுநர் (Pharmacist), பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant), துணை செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், வாகன ஓட்டுனர், வாகன கிளீனர், மனநல ஆலோசகர் (Psychologist) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க கடைசிநாள்: 13/04/2022

இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள், கல்வித் தகுதி, ஊதியம், பணிபுரிய வேண்டிய இடம் ஆகியவற்றின் விபரங்களை பதவிகள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

▶️ ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ லேப் டெக்னிஷியன் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ நுண்ணுயிரியலாளர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ துணை செவிலியர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ மனநல ஆலோசகர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ வாகன கிளீனர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ ஊர்தி ஓட்டுநர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ பல் மருத்துவ உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ மருந்தாளுநர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ குளிர்பதன கம்மியர் காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு

Also Read: விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group