Home Blog Page 13

பழைய குற்றால அருவியின் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை துணிச்சலாக மீட்ட இளைஞர்

பழைய குற்றாலம் அருவியில் தடாகத்தில் தண்ணீரில் தவறி விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தற்போது பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் குற்றாலத்திற்கு அதிகபடியான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் பழைய குற்றாலம் அருவியில் இன்று நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர்.

அதில் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் அருவியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது குழந்தை ஹரிணி (வயது 4) அருவியின் முன்புறம் தண்ணீர் விழும் பகுதியில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென குழந்தை ஹரிணி அருவியின் தண்ணீர் வெளியேறும் இடத்தில் உள்ள துவாரத்தின் வழியாக கீழே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு கொண்டிருந்தாள். உடனே அங்கு நின்ற விளாத்திகுளத்தைச் சேர்ந்த விஜயக்குமார் என்ற இளைஞர் குழந்தையை அடித்து செல்லப்படும் இடத்திற்கு துணிச்சலாக சென்றார்.

அப்போது சிறுமி ஒரு பாறையின் இடுக்கில் பிடித்துக் கொண்டு நின்றாள். அந்த இளைஞர் அங்கு சென்று குழந்தையை தூக்கி கொண்டு மேலே வந்தார். பின்னர், அங்கு வந்த பதறியடித்து வந்த அந்த குழந்தையின் தாய், தனது குழந்தை தான் என்று கூறி பெற்றுக்கொண்டார். உடனடியாக அவர்கள் குழந்தையை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தால் பழைய குற்றாலம் அருவி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில், விளாத்திகுளம் இளைஞர் விஜயக்குமாருக்கு அனைவரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

2022-ஆம் ஆண்டின் ‘டாப் 10’ தென்காசி ஆளுமைகள் – முழுப் பட்டியல்

2022-ஆம் ஆண்டின் ‘டாப் 10’ தென்காசி ஆளுமைகளை பெருமிதத்துடன் அடையாளப்படுத்துகிறது Tenkasi Life

ஆகாஷ் IAS

செழித்தெழும் தென்காசி

எந்த வருடம் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு குற்றாலச் சாரல் திருவிழாவை கோலாகலமாக நடத்தியது; மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றியது; பொதுமக்களின் குறை தீர்ப்பதில் வேகம் காட்டியது… என தென்காசி மாவட்ட மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஆட்சியர் ஆகாஷ் அவர்களை பாராட்டி மகிழ்கிறோம்.

முனைவர். விஜயலட்சுமி

சூழலியல் முன்னோடி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 75 வயதிலும் தென்காசி மாவட்டம் முழுவதும் பம்பரமாக சுழன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மேலகரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியை விஜயலட்சுமி அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.

ராஜா IFS

தன்னம்பிக்கை நாயகன்!

5 முறை முயன்று சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்டம் அகரக்கட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு சாதாரண விவசாயியின் மகனும், முதல் தலைமுறை பட்டதாரியுமான ராஜா IFS அவர்களின் சாதனையை எண்ணி பெருமையடைகிறோம்.

சுப்புராஜ் IFS

விடாமுயற்சி நாயகன்

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வனத்துறையில் கடைநிலை ஊழியராக பணியைத் தொடங்கி, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இன்று IFS (Indian Forest Service) அதிகாரியாக உயர்ந்திருக்கும் கடையநல்லூரை சேர்ந்த சுப்புராஜ் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.

ஜெபா ஆனந்த்

தடைகளை தாண்டிய வெற்றி

சாதிக்க ஊனம் தடையல்ல என்பதற்கு சான்று மாதாபுரத்தை சேர்ந்த இந்த ஜெபா ஆனந்த். தனது யூடியூப் சேனல் மூலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள வில்லுப்பாட்டு கலைஞர்களின் திறமைகளை உலகறியச் செய்தவர். தென்காசி மாவட்டத்தில் சில்வர் பட்டன் பெற்ற முதல் யூடியூப் சேனல் இவருடையது. புதிய ஆண்டில் இன்னும் நிறைய சாதிக்க ஜெபாவை வாழ்த்துகிறது Tenkasi Life.

ஷேக் முகைதீன்

உழவர்களின் உற்ற தோழன்

செங்கோட்டை வட்டார துணை வேளாண் அலுவலா் இவர். ‘வயல்ல நெல்லு; வரப்புல உளுந்து’ என்ற பயிர் பாதுகாப்பு நுட்பத்தை கடைக்கோடி விவசாயிகள் வரை கொண்டு சேர்த்தவர். அரசு ஊழியராக இது இவருக்கு கடைசி ஆண்டு. அவரை கவுரவப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது Tenkasi Life.

பசுமை வலசை இயக்கம்

பசுமை விரும்பிகள்

கணக்கப்பிள்ளை வலசை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நடத்திவரும் அமைப்புதான் இது. தென்காசியில் இந்த ஆண்டு பிரமாண்டமான மாரத்தான் ஓட்டத்தை நடத்தியதோடு, மரக்கன்றுகள் நடும் பணியில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய பசுமை வலசை இயக்கத்தினரை இருகரம் தட்டி வாழ்த்துகிறது Tenkasi Life.

அமிர்த ஜோதி IAS

மண்ணின் பெருமை

தற்போது சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்து வரும் இவர் தென்காசி மாவட்டம் வடநத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். நம் மண்ணுக்கு பெருமை சேர்த்த அமிர்த ஜோதி IAS அவர்கள் மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துகிறோம்.

சுரேஷ் குமார்

மாணவர்களின் ஏணிப்படி

இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் இவர். இந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஊட்டி வளர்ப்பவர்.  ‘ஆசிரியர் பணியே அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி’ என்று வாழ்ந்துகாட்டும் சுரேஷ் குமார் அவர்களின் அறப்பணி தொடர வாழ்த்துக்கள்.

Dr.சற்குணம்

அறம்’ வளர்க்கும் அரசு மருத்துவர்

சுந்தரபாண்டியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர். கிராமப்புற மக்களுக்கான மருத்துவ சேவையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருபவர். இதற்காக மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த மருத்துவர் விருது பெற்றவர். மருத்துவத்தை ஒரு தொழிலாக பாராமல் அதனை சேவையாக செய்துவரும் மருத்துவர் சற்குணம் அவர்களது பணிசிறக்க வாழ்த்துக்கள்.

(இது Tenkasi Life Digital Awards 2023-க்கு தேர்வானோரின் பட்டியல் அல்ல. ‘Tenkasi Life Digital Awards 2023’ விருதுகளுக்கு தேர்வானவர்களின் பட்டியல் வருகிற ஜனவரி 5ஆம் தேதி முதல் வெளியிடப்படும்.. ‘Tenkasi Life Digital Awards 2023’ விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான லிங்க் இதோ.. Apply here)

 

25/12/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (25/12/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 25/12/2022 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

Tenkasi Life Digital Awards 2023 விருதுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

18/12/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (18/12/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 18/12/2022 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

Tenkasi Life Digital Awards 2023 விருதுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

Tenkasi Life Digital Awards 2023 – விண்ணப்பப் படிவம்

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சாதனையாளர்களை கவுரவிக்கும் விதமாக Tenkasi Life Digital Awards 2023 விருதுகள், 05 பிப்ரவரி 2023 அன்று தென்காசி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரியில் வைத்து பிரமாண்டமாக நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது. எனவே Tenkasi Life Digital Awards 2023 விருது பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சுற்றுச்சூழல், விளையாட்டு, சமூக சேவை, விவசாயம், புகைப்படக்கலை, கல்வி, வாழ்நாள் சாதனை, பெண் சாதனையாளர் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவோர் இங்கே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள்: 31/12/2022


விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:

*தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்/ தென்காசி மாவட்டத்தில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

* தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த எவரும் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது மற்றவர்களை பரிந்துரை செய்யலாம்.

* விண்ணப்பிப்பவர் வாழ்நாளில் தனித்தன்மையுடன் சிறப்பான சாதனை/சேவை செய்திருக்க வேண்டும்.

* ஏற்கனவே Tenkasi Life Annual Awards 2022 விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

* விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் 10/01/2023 முதல் Tenkasi Life சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும்.

விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்வதில் சிக்கல் இருந்தால் உங்கள் பெயர், ஊர், மற்றும் தொடர்பு எண் ஆகிய விவரங்களுடன் tenkasilifeteam@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். நன்றி.

 

09/12/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (09/12/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 09/12/2022 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

தமிழக முதல்வர் தென்காசி வருகை – பரபர தருணங்கள் – சிறப்பு புகைப்படத் தொகுப்பு..

தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று வருகை தந்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

05/12/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (05/12/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 05/12/2022 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

28/11/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (28/11/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 28/11/2022 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

புளியங்குடி: வனப்பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட பெண் யானை உயிரிழப்பு


புளியங்குடி அருகே வனப்பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை யானை பரிதாபமாக உயிரிழந்தது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வாசுதேவநல்லூர் `பீட்’ மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் நேற்று முன்தினம் புளியங்குடி வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் ஒரு இடத்தில் யானைகள் கூட்டமாக நின்று பிளிரி கொண்டிருந்ததை கண்டனர். உடனே அருகில் சென்று பார்த்தபோது அங்கு ஒரு பெண் யானை படுத்திருப்பதை பார்த்தனர். யானைகள் கூட்டமாக சுற்றி நின்றதால் வனத்துறையினரால் அந்த பெண் யானை அருகில் செல்ல இயலவில்லை.

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு புளியங்குடி வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை மாவட்ட வன அலுவலர் முருகன் புளியங்குடிக்கு வருகை தந்தார். அவருடன் புளியங்குடி வனச்சரகர் கார்த்திகேயன், வனவர்கள் மகேந்திரன், குமார் மற்றும் களக்காடு முண்டந்துறை வன காப்பக கால்நடை மருத்துவர் மனோகரன், நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் டாக்டர்கள் அருண்குமார், கருப்பையா, நெல்லை உதவி வன பாதுகாவலர் ஷா நவாஸ் கான் ஆகியோர் சென்றனர்.

அங்கு சத்தம் எழுப்பி சுற்றி நின்ற யானைக் கூட்டத்தை விரட்டினர். பின்னர் படுத்திருந்த அந்த பெண் யானையை பரிசோதித்தனர். அப்போது அந்த யானை உடல் நலக்குறைவு காரணமாக மிகவும் பலகீனத்துடன் காணப்பட்டது தெரிய வந்தது. அந்த யானைக்கு சுமார் 40 வயது இருக்கும். அதைத்தொடர்ந்து அந்த யானைக்கு முதலுதவி சிகிச்சைகளும், சோர்வைப் போக்கும் மருந்துகளும் அளிக்கப்பட்டன. மேலும் தென்னை ஓலை, மண்டைவெல்லம், வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகளும் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து அந்த யானையை வனத்துறையினர் தீவிரமாக பரிசோதித்தும், கண்காணித்தும் வந்தனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அங்கு யானை கூட்டங்கள் திரண்டது. இதனால் யானைக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் சோர்வடையாமல் இருக்க மருந்துகள் வழங்கிய வனத்துறை ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

மீண்டும் இன்று காலை அங்கு சென்றபோது யானைகள் கூட்டமாக அங்கு நின்றதால் பட்டாசு வெடித்து மற்ற யானைகளை கலைந்து போக செய்தனர். பின்னர் படுத்திருந்த யானையை பரிசோதித்தபோது அந்த யானை இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து யானையின் இறப்புக்கு காரணம் என்ன என்பதை அறிய அதன் உடலை இன்று அந்த பகுதியிலேயே வைத்து பிரேத பரிசோதனை செய்கின்றனர். அதன்பின்னர் யானையை அந்த காப்புக்காட்டிலேயே தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறை டாக்டர்கள் கூறுகையில், யானைக்கு 40 வயதாகிவிட்டது. அதன் கால், உடல், வயிறு உள்ளிட்ட எந்த பாகங்களிலும் எவ்வித காயங்களும் இல்லை. ஒருவேளை அதன் பற்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு சாப்பிட முடியாமல் யானை இறந்திருக்கலாம். அவ்வாறு இல்லையெனில் கடைசி கால கர்ப்பம் நடந்திருக்க கூடும். அதாவது யானையின் வயிற்றில் குட்டி இருந்து, அதனை பெற்றெடுக்க முடியாமல் வலியில் யானை உயிரிழந்திருக்கலாம். அல்லது அதன் ரத்தத்தில் ஏதேனும் விஷம் கலந்து இறந்ததா என்பதும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை செய்த பின்னரே யானையின் இறப்புக்கு இறுதியான காரணம் தெரியவரும் என்றனர்.

இதையும் படிக்கலாமே: வனப்பகுதிக்குள் திசை தெரியாமல் அலைந்த பெண் – வினோத செடி உரசியதால் வழிதவறி சென்றதாக தகவல்.