திருநெல்வேலி பல்கலைக்கழக கல்லூரிகளில் முதல்வா் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

திருநெல்வேலி பல்கலைக்கழக கல்லூரிகளில் முதல்வா் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கலைக் கல்லூரிகளின் முதல்வா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பதிவாளா் (பொ) மருதக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்து, இப்போது அரசு கலைக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ள நாகலாபுரம், கடையநல்லூா் மற்றும் கன்னியாகுமரியில் அரசு கல்லூரிகளில் தற்காலிக முதல்வா் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் இணைப்பேராசிரியா் அல்லது பேராசிரியராக 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உடையவா்கள் விண்ணப்பிக்கலாம். தகுந்த தகுதிகளுடன் ஓய்வு பெற்று 1-7-2022-ஆம் நாளன்று 61 வயதுக்கு மிகாதவா்களாக இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி பதிவிறக்கம் செய்து வரும் 13-6-2022 தேதிக்குள் பதிவாளா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி- 12 என்ற முகவரிக்கு சமா்ப்பிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Application for the Post of Principal for Government Colleges

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here