புற்றுநோய் இல்லா தென்காசி… விழிப்புணர்வு நடைபயணம்…

Tenkasi Life மற்றும் பசுமை வலசை தென்காசி சங்கம் இணைந்து 05 நவம்பர் 2023 அன்று நடத்திய மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய நடைபயணம், கணக்கப்பிள்ளை வலசை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நிறைவடைந்தது. இருசக்கர வாகன பேரணியாக நடத்தப்படவிருந்த இந்நிகழ்வு, காவல்துறையினரின் அறிவுறுத்தக்கு இணங்க கடைசி நேரத்தில் நடைபயணமாக மாற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்த தென்காசி மெடிக்கல் சென்டர் மற்றும் தென்காசி கேன்சர் சென்டர், செல்வராணி பட்டு ஜவுளி ரெடிமேட்ஸ், மெடிக்ளோன் ரத்தப் பரிசோதனை ஆய்வகத்துக்கு நன்றி. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து கொடுத்த நிலா குடும்ப உணவகத்துக்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here