தென்காசி மாவட்டத்தில் உள்ள நிஜ நாயகர்களை, ஒவ்வொரு ஆண்டும் அடையாளம் கண்டு வெளிச்சம் பாய்ச்சி மேடையேற்றி வருகிறது Tenkasi Life. அந்த வகையில் இந்த ஆண்டும் வேறுவேறு துறைகளில் முத்திரை பதித்த ஆளுமைகள், உங்களின் மனமுவந்த பாராட்டுகளோடும், உங்களின் பலத்த கைதட்டல்களோடும் கௌரவிக்கப்படவிருக்கிறார்கள்.
Tenkasi Life Digital Awards 2023 விருதுகளுக்கு தேர்வானோர் பட்டியல் இதோ..
சிறப்பு விருது: விஜயகுமார், விளாத்திகுளம்
பழைய குற்றாலம் அருவியின் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை, தனது உயிரையும் துச்சமாக மதித்து துணிச்சலுடன் மீட்ட, விஜயகுமாருக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கிறது Tenkasi Life.
சிறந்த இளம் எழுத்தாளர் விருது: தேன்மொழி, கீழக் கடையம்
எழுத்திலும் பேச்சிலும் தனது திறமையை நிலைநாட்டி பல வெற்றிவாகை சூடிய, ஜேபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவி தேன்மொழிக்கு, சிறந்த இளம் எழுத்தாளர் விருது வழங்கி கவுரவிக்கிறது Tenkasi Life.
சிறந்த ஆசிரியர் விருது: பழனிகுமார், கடையநல்லூர் திருநாவுக்கரசு தொடக்கப்பள்ளி
தான் படிக்கும்போது என்னவெல்லாம் கிடைக்கவில்லையோ, அதெல்லாம் தனது மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறார் இவர். அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏணிப்படியாக விளங்கும் பழனிகுமார் அவர்களுக்கு, சிறந்த ஆசிரியர் விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது Tenkasi Life.
சிறந்த மருத்துவர் விருது: Dr.சங்கரி, இலஞ்சி ஆரம்ப சுகாதார நிலையம்
தன்னுடைய பணிப் பொறுப்பையும் கடந்து ஏழை, எளிய நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கி வருபவர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இரவு, பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர். கிராமப்புற மக்களுக்கான மருத்துவ சேவையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் சங்கரி அவர்களுக்கு, சிறந்த மருத்துவர் விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது Tenkasi Life.
Social Media Celebrity Award: அசாருதீன், ஆனைகுளம்
யூடியூப்பில் பிரபலமான Prankster Rahul சேனலில், ராகுலுடன் இணைந்து இவர் போடும் பிராங்க் வீடியோக்கள் அத்தனை பிரபலம். தனது நடிப்புத் திறமையால் இப்போது சினிமாவிலும் நுழைந்திருக்கும் அசாருதீனுக்கு, Social Media Celebrity Award வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது Tenkasi Life.
சிறந்த அரசு அதிகாரி விருது: தமிழ்மலர், தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்
அதிகாலையிலேயே மாவட்டத்தில் பல்வேறு கிராமப்புறங்களுக்கு ஆய்வு பணிக்கு சென்று விவசாயிகளை சந்திப்பவர். விவசாயிகளிடமும், தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடமும் கனிவோடு நடந்து கொள்ளும் மாவட்ட அதிகாரி. அவருக்கு சிறந்த அரசு அதிகாரிக்கான விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது Tenkasi Life.
சிறந்த விவசாயி விருது: அனந்த் வரதராஜன், ஆய்க்குடி
இயற்கை வேளாண்மையிலும், பாரம்பரிய ரக சாகுபடியிலும் அசத்தி வருபவர். உற்பத்தியோடு நின்று விடாமல், விளைபொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக்கி, சிறப்பான முறையில் சந்தைப்படுத்தி, விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றிக் காட்டிய இந்த பட்டதாரி விவசாயிக்கு, சிறந்த விவசாயி விருது வழங்கி கவுரவிக்கிறது Tenkasi Life.
சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது: பாக்கியவதி, குருவன்கோட்டை
கால ஓட்டத்தில் நாம் மறந்து போன தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை பாக்கியவதி போன்ற சிலரே உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். தொடர்ந்து 5 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுழற்றி உலக சாதனை நிகழ்த்தியவரும், தேசிய, மாநில, மாவட்ட அளவில் பதக்கங்களை அள்ளி வருபவருமான 11 வயதேயான இச்சிறுமிக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது வழங்கி கவுரவிக்கிறது Tenkasi Life.
நம்பிக்கை நட்சத்திரம் விருது: பூர்ணிமா, இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி
ஓவியமா..? இல்லை புகைப்படமா..? என வியக்குமளவிற்கு தத்ரூபமாக ஓவியம் தீட்டி அசத்துகிறார் இவர். உயிரோட்டமுள்ள ஓவியங்கள் பேசும் என்பார்கள். பூர்ணிமா வரைந்த ஓவியங்கள் அதை மெய்ப்பிக்கின்றன. வண்ணத் தூரிகையில் வர்ணஜாலம் நிகழ்த்தும் பூர்ணிமாவிற்கு நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்கி கவுரவிக்கிறது Tenkasi Life.
சிறந்த புகைப்படக் கலைஞர் விருது: நித்தின் சுரேஷ், தென்காசி
யதார்த்தம்தான் அழகு… நித்தின் சுரேஷின் புகைப்படங்கள் ஒவ்வொன்றிலும் அழகியல் ஜொலிக்கக் காரணமும் அதுதான். விதவிதமான பறவைகளை உயிரோட்டமான புகைப்படங்களாக தன் கேமராவுக்குள் சிறைபிடித்து அழகு பார்க்கிறார். இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை இயற்கையான ஒளியிலேயே அவர் எடுக்கும் புகைப்படங்களில் உயிர் ததும்புகிறது.
சிறந்த சுற்றுச்சூழல் அமைப்புக்கான விருது: தளிர் திப்பணம்பட்டி கிராமம்
பசுமை நிறைந்த தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில், மரக்கன்றுகள் நடுவதை ஒரு இயக்கமாக முன்னெடுத்து வருகிறார்கள் திப்பணம்பட்டி இளைஞர்கள். 15,000 பனை விதைகள் மற்றும் 2,000 மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் தளிர் திப்பணம்பட்டி கிராமம் அமைப்பினருக்கு, சிறந்த சுற்றுச்சூழல் அமைப்புக்கான விருது வழங்கி கவுரவிக்கிறது Tenkasi Life.
வாழ்நாள் சாதனையாளர் விருது: காந்திமதி, பாரத் கல்விக் குழும செயலா்
தென்காசி மாவட்டத்தில் ஏராளமான சாதனையாளர்களை உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். இவரது இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் பயின்ற நிறைய பேர் இன்று பிரபல மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், தொழில்முனைவோர்களாகவும் உள்ளனர். காந்திமதி அவர்களின் 33 ஆண்டுகால கல்விச் சேவையை பாராட்டி அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது Tenkasi Life.
சாதனையாளர்களின் வழிகாட்டி விருது: சேகர் கிருஷ்ணசாமி, கட்டளை குடியிருப்பு
செங்கோட்டை அரசு நூலகத்தில் போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சியை கடந்த 10 ஆண்டுகளாக தொடா்ந்து நடத்தி வருபவர். இதன்மூலம் மத்திய, மாநில அரசு பணிகளில் 600-க்கும் மேற்பட்டவா்களை உருவாக்கியுள்ளார். அவருக்கு சாதனையாளர்களின் வழிகாட்டி விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது Tenkasi Life.
சிறந்த பேச்சாளர் விருது: உஷா, இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி
இவரது பேச்சு அழகு தமிழில் குற்றால அருவிபோல கொட்டும். பார்வையாளர்களை தனது உரையில் கட்டிப் போடுபவர். பேச்சாற்றலில் தனி முத்திரை பதித்து வரும் உஷாவுக்கு சிறந்த பேச்சாளர் விருது வழங்கி கவுரவிக்கிறது Tenkasi Life.
Title Sponsor: Tenkasi Cancer Center & Tenkasi Medical Centre
Presented by: Tata Premium Motors Commercial Vehicles Dealer | Premium samsung smart cafe | Subbulakshmi Groups
Co-Presented by: VTSR Silks | Nila Sweets & Bakery Family Restaurant | Pro Vision Eye and Retina Center | Mediclone Diagnostics | Ragasya Feminine Fashion | Royal Hypermarket
Associate Sponsors: Treasure iland international school | Into The Wild Resort | Tenkasi Properties | M.R.V Metals & Furnitures | Homeway Properties | Spread Smiles Beyond Media | Falcon Fitness Studio
Decoration Partner: P.S.P. | Poster Designing Partner: Fashion Flex | Media Partner: சுபாஷ் டிவி | Social Media Partner: தென்றல் தவிழும் தென்காசி | Volunteers Support: பசுமை வலசை இயக்கம்