தென்காசி மாவட்டத்தில் உள்ள நிஜ நாயகர்களை, ஒவ்வொரு ஆண்டும் அடையாளம் கண்டு வெளிச்சம் பாய்ச்சி மேடையேற்றுகிறது Tenkasi Life. அந்த வகையில் இந்த ஆண்டும் வேறுவேறு துறைகளில் முத்திரை பதித்த ஆளுமைகள், உங்களின் மனமுவந்த பாராட்டுகளோடும், உங்களின் பலத்த கைதட்டல்களோடும் கௌரவிக்கப்படவிருக்கிறார்கள்.
Tenkasi Life Digital Awards 2023 விருதுகளுக்கு தேர்வானோர் பட்டியல் இதோ..
வந்து குவிந்த 1,287 விண்ணப்பங்களில் இருந்து வடிகட்டி தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் இவர்கள். 1,287 விண்ணப்பங்களில் யாருடைய விண்ணப்பத்தையும் நிராகரிக்க உண்மையில் மனமில்லை. எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதே எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. காரணம் விண்ணப்பித்த அனைவருக்குள்ளும் அத்தனை திறமைகள்; அத்தனை சேவைகள்.
எனவே விருதுக்கு தேர்வாகதவர்கள் மனம் நோக வேண்டாம்/ தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர்கள் திறமையற்றவர்கள் என்றோ விருதுக்கு தகுதியற்றவர்கள் என்றோ எவ்விதத்திலும் அதற்கு அர்த்தம் கிடையாது.
ஒரு பிரிவுக்கு ஒரு நபரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும்போது மற்றவர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பது தவிர்க்க முடியாததாகிறது. நிராகரிக்கப்பட்டது உங்கள் விண்ணப்பங்களை தானே தவிர, உங்களையோ உங்கள் திறமையையோ, உங்கள் சேவையையோ அல்ல. இதைவிட உயரிய விருதுகள் அல்லது உயரிய அங்கீகாரம் உங்களுக்காக காத்திருக்கலாம். அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். Tenkasi Life Digital Awards 2023 விழா சிறக்க அனைவரது ஆதரவும் தேவை. அனைவரும் விழாவில் சந்திப்போம்.
அன்பும்! நன்றியும்!
Admin Team, Tenkasi Life
Title Sponsor
Presented by
Co-Presented by
Associate Sponsor