Home Blog Page 17

குற்றாலம் சாரல் விழா நாளை தொடக்கம்: எந்தெந்த நாட்களில் என்னென்ன போட்டிகள், நிகழ்ச்சிகள்? – முழுத் தகவல்

தென்காசி தனி மாவட்டமாக உதயமான பின் கடந்த 3 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு சாரல் திருவிழா குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் நாளை (ஆக .5) முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கிறது. இதில் நாள்தோறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறுகின்றன.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ”குற்றாலம் பேரூராட்சி கலைவாணா் அரங்கத்தில் ஆக .5 ஆம் தேதி முதல் ஆக. 12 ஆம் தேதிவரை சாரல் திருவிழா நடைபெறுகிறது.

முதல் நாளான வெள்ளிக்கிழமை (ஆக.5) மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தொழில் மற்றும் தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் விழாவைத் தொடங்கி வைக்கின்றனா்.

விழா நடைபெறும் நாள்களில் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சா் டாக்டா் மா.மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினா்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிகள் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.

தொடக்க விழா நாளன்று, பரத நாட்டியம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சி மற்றும் திரைப்பட நகைச்சுவை நடிகா் சூரி, நடிகை ரம்யா பாண்டியன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இரண்டாவது நாளன்று கொழு, கொழு குழந்தைகள் போட்டிகளும், நாய்கள் கண்காட்சியும் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் திரைப்பட நடிகை ரம்யா நம்பிஷன் கலந்துகொள்ளும் சென்னை லக்ஷ்மண் சுருதி இன்னிசை நிகழ்ச்சி, நடிகா் ஈரோடு மகேஷின் சிறப்பு நிகழ்ச்சி ஆகிய நடைபெறுகிறது.

மூன்றாவது நாளன்று பளு தூக்குதல், வலு தூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டிகளும், யோகா போட்டிகளும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய பாடகா் மற்றும் நடிகா் கானா பாலா, கலந்துகொள்ளும் நெல்லை வானவில் திரையிசைக் குழு வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

நான்காவது நாளன்று பள்ளி மாணவா்களுக்கான பலவித போட்டிகளும், படகு போட்டிகளும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா கலந்துகொள்ளும் நெல்லை ஆனந்தராகம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஐந்தாவது நாளன்று சைக்கிள் மாரத்தன், வில்வித்தை மற்றும் பத்மஸ்ரீ கலைமாமணி நா்த்தகி நட்ராஜன் வழங்கும் செந்தமிழ் ஆடல் நிகழ்ச்சிகளும், கேரள மாநில கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

ஆறாவது நாளன்று கோலம், யோகாப் போட்டிகள், பல்வேறு இசை நிகழ்ச்சிகளுடன் கூடிய நாகா்கோவில் கீதம் இசைக்குழுவினரின் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

ஏழாவது நாளன்று மகளிா் மினி மாரத்தன், மேஜிக் விளக்கு அலங்காரப் போட்டிகள், பல்வேறு பள்ளி மாணவ, மாணவியரின் பல்சுவை மற்றும் கலை நிகழ்ச்சிகளும், கா்நாடக மாநில கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகளும், தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் காவடியாட்டம் , நகைச்சுவை நடிகா் மதுரைமுத்து குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

தொடா்ந்து, பாடகா் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி கலந்துகொள்ளும் நெல்லை கஸ்தூரி திலகம் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிறைவு நாளன்று பழைய காா்கள் அணிவகுப்பு, கல்லூரி மாணவ, மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி மற்றும் திரைப்பட இயக்குநா் மற்றும் நடிகா் ரவிமரியா, பாடகா் வேல்முருகன் கலந்துகொள்ளும் சென்னை பரிமளாதேவி வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

எனவே, சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் அனைவரும் சாரல் திருவிழாவில் கலந்துகொண்டு அனைத்து கண்கவா் கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

சாரல் விழாவுடன் உணவுத் திருவிழா, புத்தகத் திருவிழா, தோட்டக்கலை திருவிழா ஆகியவையும் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 5 முதல் 12ஆம் தேதி வரை குற்றாலம் பராசக்தி கல்லூரி வளாகம் அருகில் உள்ள ஜமீன் பங்களா வளாகத்தில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. ஆகஸ்ட் 5 முதல் 14ஆம் தேதி வரை குற்றாலம் பராசக்தி கல்லூரி வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. ஆகஸ்ட் 6 முதல் 8ஆம் தேதி வரை குற்றாலம் எக்கோ பார்க்கில் தோட்டக்கலை திருவிழா நடைபெறுகிறது.

நாய்கள் கண்காட்சி உங்கள் நாய்கள் இடம்பெற வேண்டுமா?

சாரல் திருவிழாவில் வருகிற 6-ந் தேதி மதியம் 2 மணி அளவில் நாய்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் நாய்களின் உரிமையாளர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் நாளை (வெள்ளிக்கிழமை) வரை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் தென்காசி தொடர்பு எண்- 04633 295744, கால்நடை மருத்துவமனை செங்கோட்டை டாக்டர், சிவகிரி கால்நடை மருத்துவமனை டாக்டர் , சங்கரன்கோவில் கால்நடை மருத்துவமனை டாக்டர் ஆகிய எண்களில் தங்களின் பெயரை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பதிவு செய்யலாம். பதிவு செய்ய தவறும் பட்சத்தில் உரிமையாளர்கள் நிகழ்ச்சியின் நாளன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.

இந்நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து குற்றால அருவிகளில் குளிக்க நான்காவது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க: குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளம்: நிலைகுலைந்த பெண்கள்.. இருவர் பலி – நடந்தது என்ன?

தூத்துக்குடியில் அரசு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

▶️விண்ணப்பிக்க கடைசி நாள்: 10/08/2022
▶️மாத ஊதியம்: ரூ.15,000
▶️மொத்த பணியிடங்கள்: 35

இந்த பணியிடத்திற்கான அறிவிப்பாணை, கல்வித்தகுதி, மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Notification – Unit Block Mission Manager and Block Co-Ordinator

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 10/08/2022 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Application – Unit Block Mission Manager and Block Co-Ordinator

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

இணை இயக்குனர் / திட்ட இயக்குனர்,
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
இரண்டாவது தளம்,
கோரம்பள்ளம் – 628101
தூத்துக்குடி மாவட்டம்.

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் பணிபுரிய மருத்துவமனை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் (Hospital Quality Manager) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. அப்பணியிடத்தினை பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

▶️விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 12/08/2022

▶️பணியிட எண்ணிக்கை: 01

▶️மாத ஊதியம்: ரூ.60,000

இந்த பணியிடத்திற்கான அறிவிப்பாணை மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Notification – Post of Quality Manager in TVMCH

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 12/08/2022 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Application for the post of Quality Manager in TVMCH

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Dean,
Tirunelveli Medical College Hospital,
Tirunelveli – 627011

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

மேக்கரையில் தனியாா் அருவிகள் அகற்றும் பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம்  மேக்கரையில் விதிமுறைகளை மீறி செயற்கையாக உருவாக்கப்பட்ட அருவிகளை இடித்து அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் பல நீரோடைகள் மேக்கரை கிராமம் வழியாக பாய்ந்தோடுகிறது. இதன்மூலம் அடவிநயினார் அணை மற்றும் பண்பொழி, இலத்தூர், சீவநல்லூர், கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கிடைத்து, விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேக்கரையில் திருவாவடுதுறை ஆதீன மடத்துக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கா் நிலங்களை நீண்ட கால குத்தகை அடிப்படையில் பெற்று பலா் தோப்புகள் அமைத்தும், விவசாயம் செய்தும் வருகின்றனா். இந்த நிலையில் மேக்கரை பகுதியில் நீரோடைகளை மறித்து சில தனிநபர்கள் தடுப்பணை போல் அமைத்து, அதில் நீர்வீழ்ச்சிகள் போல் உருவாக்கி சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்து கட்டணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்தது. குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த காலங்களில் இந்த அருவிகளில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்தது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், பண்பொழி, வடகரை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சிலர் கலெக்டரிடம் எடுத்துக் கூறினர். இதையடுத்து தனியாா் அருவிகளை ஒழுங்குபடுத்துமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி தலைமையிலான குழுவினர் மேக்கரை பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது நீரோடைகளில் ஆக்கிரமிப்பு செய்து 30-க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகளை கட்டியது கண்டுபிடிக்கப்பட்டு, அதுதொடர்பான அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் நீர்வளத்துறை சார்பில், நீரோடை ஆக்கிரமிப்புகளை 15 நாட்களுக்குள் அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதைத்தொடர்ந்து செங்கோட்டை தாசில்தார் கந்தசாமி தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் சில ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். சில ஆக்கிரமிப்புகள் அணை போல் உறுதியாக கட்டப்பட்டு இருப்பதால் அவற்றை வெடி வைத்து தகர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி, இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி (அச்சன்புதூர்), சியாம் சுந்தரம் (குற்றாலம்), சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லையா (அச்சன்புதூர்), தர்மராஜ் (எலத்தூர்)ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து ஆட்சியா் ப.ஆகாஷிடம் கேட்டபோது, மேக்கரை பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக 9 தனியாா் அருவிகள் உள்ளது தெரியவந்தது. பட்டா உரிமையாளா்களாகவே இருந்தாலும் தண்ணீா் செல்லும் பாதையை திசை திருப்புவது, செயற்கையாக நீா்வீழ்ச்சியை உருவாக்குவது விதிமீறலாகும். இதுகுறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்ததால் தனியாா் அருவிகள் அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது. செங்கோட்டை குண்டாறு பகுதியிலும் தனியாா் அருவிகள் உள்ளன. அதுகுறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மேக்கரையில் சுமாா் 25 செயற்கை அருவிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை அனைத்தும் படிப்படியாக அகற்றப்படும் என்றனா்.

 

31/07/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (31/07/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 31/07/2022 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

அகஸ்தியர் அருவியில் குளிக்க 5ந் தேதி வரை தடை நீட்டிப்பு

பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அகஸ்தியர் அருவியில் குளிக்க வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி வரை தடையை நீட்டித்துள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. தற்போது இங்கு அடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்த நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் தங்கள் உடைமைகளை கொண்டு வருவதற்காக தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும் நாளை வனப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்துள்ளனர். மேலும் ஆண்டு முழுவதும் ஆர்ப்பரித்து கொட்டும் அகஸ்தியர் அருவியில் ஏற்கனவே சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அகஸ்தியர் அருவியில் குளிக்க வருகிற 5 ந் தேதி வரை தடையை நீட்டித்துள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளம்: நிலைகுலைந்த பெண்கள்.. இருவர் பலி – நடந்தது என்ன?

மெயின் அருவியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெள்ளம் ஆர்ப்பரித்தது. அருவியின் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியதால் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவசரமாக வெளியேறி வந்தார்கள்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் சீசன் இந்த ஆண்டும் தொடங்கியதால் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக வெளியூர்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.

பொதுவாக அருவிகளில் கூடுதலாக தண்ணீர் வரும்போது சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதிப்பது வழக்கம். இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்பகுதியில் இன்று மாலை திடீரென்று கனமழை பெய்ததால், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீரின் நிறம் மஞ்சளாக இருக்கும் அளவுக்கு மண் கலந்த நீர் வந்தது. அதில், மரக்கட்டைகள், சிறிய பாறைகள் அடித்து வரப்பட்டதால் குளித்துக் கொண்டிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினார்கள்.

மெயின் அருவியில் பொதுமக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் வெள்ளம் ஆர்ப்பரித்தது. அருவியின் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியதால் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவசரமாக வெளியேறி வந்தார்கள். அப்போது வெள்ள நீரில் நான்கு சுற்றுலாப் பயணிகள் அடித்துச் செல்லப்பட்டனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்க தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் முயற்சிகளை மேற்கொண்டனர். அதில் இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுற்றுலா வந்த இருவரும் வெள்ளத்தில் சிக்கி பலியானதால் அவர்களுடன் வந்திருந்த குடும்பத்தினரும் உறவினர்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தென்காசி மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், ”குற்றாலம் மெயின் அருவியில் இன்று மாலை 4 மணி அளவில் திடீரென பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அங்கே குளித்துக் கொண்டிருந்த பண்ருட்டியை சேர்ந்த கலாவதி (வயது 55), சென்னையை சேர்ந்த மல்லிகா (வயது 46) ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். குற்றாலம் பேரருவியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் தீயணைப்பு துறையினரால் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கிட தென்காசி வருவாய் வட்டாட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

குற்றாலத்தில் நாளை தடை

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை (ஜூலை 28) குற்றாலத்திற்கு வருகை தர வேண்டாம் தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

29/07/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (29/07/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 29/07/2022 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

23/07/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (23/07/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 23/07/2022 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

17/07/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (17/07/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 17/07/2022 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group