Home Blog Page 15

28/10/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (28/10/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 28/10/2022 

*விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

*விண்ணப்பிக்க தவறாதீர்: தென்காசி: நியாயவிலை கடைகளில் விற்பனையாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

23/10/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (23/10/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 23/10/2022 

*விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

*விண்ணப்பிக்க தவறாதீர்: தென்காசி: நியாயவிலை கடைகளில் விற்பனையாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

16/10/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (16/10/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 16/10/2022 

*விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி: வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு 

*விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

*விண்ணப்பிக்க தவறாதீர்: தென்காசி: நியாயவிலை கடைகளில் விற்பனையாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

தென்காசி: நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்காக விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

▶️மொத்த காலிப்பணியிடங்கள்: 83

▶️மாத ஊதியம்: ரூ.6,250 – ரூ.29,000

▶️கல்வித்தகுதி: +2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி தேர்ச்சி

▶️விண்ணப்பிக்க கடைசிநாள்: 14/11/2022

இந்தப் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கையை பார்க்க கீழ்க்காணும் இணைப்பை சொடுக்கவும்..

👉Notifications for Sales Men Recruitment

விண்ணப்பிக்கும் முறை: அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.

👉Click Here to Apply Recruitment of Salesmen

விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி: வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு  

விண்ணபிக்க தவற விடாதீர்கள்: தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம், சிவகிரி , வி.கே. புதூர், திருவேங்கடம் ஆகிய தாலுகாக்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து மனுக்கள் வரவேற்கப்படுகின்றன.

▶️விண்ணப்பிக்க கடைசிநாள்: 07/11/2022

▶️மாத ஊதியம்: ரூ.11,100 – ரூ.35,100

▶️கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

▶️முக்கியத் தகுதி: மனுதாரர் பணியிடம் காலியாக உள்ள கிராமம்/வட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

இந்தப் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கை தாலுகா வாரியாக பின்வருமாறு:-

தென்காசி வட்ட கிராம உதவியாளர் பணியிடம் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கை

செங்கோட்டை வட்ட கிராம உதவியாளர் பணியிடம் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கை

கடையநல்லூர் வட்ட கிராம உதவியாளர் பணியிடம் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கை

சங்கரன்கோவில் வட்ட கிராம உதவியாளர் பணியிடம் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கை

ஆலங்குளம் வட்ட கிராம உதவியாளர் பணியிடம் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கை

வி.கே. புதூர் வட்ட கிராம உதவியாளர் பணியிடம் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கை

திருவேங்கடம் வட்ட கிராம உதவியாளர் பணியிடம் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கை

சிவகிரி வட்ட கிராம உதவியாளர் பணியிடம் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கை

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவே மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான லிங்க் இதோ..

Online Application for the Post of Village Assistant 

*விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி: வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு 

*விண்ணப்பிக்க தவறாதீர்: தென்காசி: நியாயவிலை கடைகளில் விற்பனையாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

*தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

*தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

09/10/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (09/10/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 09/10/2022 

விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி: வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

மேக்கரையில் மிளா இறைச்சி சமைத்து சாப்பிட்ட 4 பேர் கைது

மேக்கரையில் செந்நாய் கடித்த மிளாவின் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே மேக்கரை எருமைச்சாவடி அருகே செந்நாய் கடித்த மிளாவின் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் கடையநல்லூர் மற்றும் மேக்கரை பிரிவு வனவர்கள் முருகேசன், அம்பல வாணன், பண்பொழி பீட் வனகாப்பாளர்கள் முத்துச்சாமி, ராஜா, ஆகிய வனத்துறை அலுவலர்கள் சம்பந்தபட்ட கிராமத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மேக்கரை எருமைச்சாவடி பகுதியில் செந்நாய் கடித்து இறந்து கிடந்த மிளாவின் இறைச்சியை மேக்கரை எருமைச்சாவடியை சேர்ந்த செல்லத்துரை மகன்கள் காசிராஜன், ஆறுமுகம் ,இசக்கிமுத்து, அய்யப்பன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் சேர்ந்து கறியை பங்கு போட்டு சமைத்து சாப்பிட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மிளாவின் கால், தோல் ஆகியவற்றை வனத்துறை யினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வனத் துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 (9)ன் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் முருகனின் உத்தரவின் பேரில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி இவர்களுக்கு கடையநல்லூர் வன ரேஞ்சர் சுரேஷ் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபதாரம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். இது போன்று வன உயிரினங்களை யார் வேட்டையாடினாலும் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் என ரேஞ்சர் சுரேஷ் தெரிவித்தார்.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள மான், மிளா, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் இறைச்சியை விற்பதோ, வாங்குவதோ, சமைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசி: வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 20.10.2022-க்குள் அனுப்பி பயன்பெறுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள 3 வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் 24 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்களின் தகுதிகள் உள்ளிட்ட முழு விவரங்களை கீழ்க்காணும் லிங்கை க்ளிக் செய்து பார்க்கலாம்…

Application for the post of Tenkasi Block Mission Manager / Block coordinator

*விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

*விண்ணப்பிக்க தவறாதீர்: தென்காசி: நியாயவிலை கடைகளில் விற்பனையாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

*தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

*தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

கடையநல்லூரில் முதல்முறையாக மினி மாரத்தான் போட்டி – 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வன உயிரின வார விழாவை முன்னிட்டு கடையநல்லூரில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

வருடந்தோறும் அக்டோபர் 2 முதல் 8 ம் தேதி வரை உலக வன உயிரின வாரம் கொண்டாடப்படுகிறது. வனம் மற்றும் வன உயிரினங்கள் அவசியம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு முக்கியமாக இளைய சமுதாயத்திடம் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு வன உயிர் வார விழா கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை, நெல்லை வன உயிரினச் சரணாலயம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு இணைந்து மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 3 கிலோமீட்டர் தூரத்தில் முடிவடைந்தது. போட்டியில் சுமார் 250 வீரர்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவாக போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு நிறுவனர் சேக் உசேன் தலைமை உரையாற்றினார். கடையநல்லூர் உடற்கல்வி ஆசிரியர் முகம்மது இபுராகிம் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி உதவி வனப்பாதுகாவலர் ஷா நவாஸ்கான் துவக்கி வைத்தார். விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பேராசிரியர் K.S.அப்துல் கனி வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ், விஸ்டம் பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளி ஆலோசகர் Dr.L.S. மைதீன் பிள்ளை, Dr.O.S. சேக் உதுமான் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு பொருளாளர் மந்திரி மஜீத் அப்துல்காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர் கவிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தார். கடையநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் கனகராஜ் கலந்து கொண்டு மராத்தானி்ல் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறி சிறப்பித்தார். விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு அறங்காவலர் முகம்மது சாபி மற்றும் உறுப்பினர்கள் பத்மா, சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம் மேற்க்குதொடர்ச்சி மலைகள் அதிகமாக காணப்படும் பகுதி ஆகும். இங்கு பல்வேறு வகையான தாவரங்களும், விலங்குகளும், பறவைகளும் வாழ்ந்து வருகின்றன. பொதுவாக காடுகளில் யானைகள், புலி, சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் காணப்படுகின்றன. இதில் எண்ணிலடங்கா தாவரங்களும் உண்டு. இவைகளை பாதுகாக்க ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரம் வன உயிரின வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த வருடமும் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு மூலம் வனத்துறையுடன் இணைந்து பல்வேறு வன உயிர் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது என விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு நிறுவனர் சேக் உசேன் கூறினார். பல்வேறு நிகழ்வுகள் மூலமாக மினி மாரத்தான், மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடல், பேரணிகள், ஒவியப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வனங்கள் மற்றும் வன உயிர் பற்றிய முக்கியத்துவங்களையும், அவசியத்தையும் பற்றிய விழிப்புணர்களை விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறக்கட்டளை நிறுவனர் சேக் உசேன் கூறினார்.

02/10/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (02/10/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 02/10/2022 