தென்காசி மாவட்ட புதிய கலெக்டர்: யார் இந்த ஆகாஷ்?

தென்காசி மாவட்ட புதிய கலெக்டர்: யார் இந்த ஆகாஷ்?

ஆகாஷ் தென்காசி மாவட்டத்தின் 4-வது கலெக்டர் ஆவார்.

தென்காசி மாவட்ட கலெக்டராக இருந்த கோபால சுந்தரராஜ் சென்னை வணிக வரித்துறை இணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஏற்கனவே கடந்த 2017 முதல் 2019-ம் ஆண்டு வரை இரண்டரை ஆண்டுகள் சேரன்மகாதேவி சப்-கலெக்டராக பணியாற்றி உள்ளேன். அப்போது ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தது. அப்போது சேரன்மகாதேவி சார்- ஆட்சியர் எல்கைக்குள் கடையம் பகுதிகள் இடம் பெற்றிருந்தது. எனவே இந்த பகுதிகளை பற்றி எனக்கு தெரியும். மேலும் இங்குள்ள முக்கிய பிரச்சினைகள் பற்றியும் அறிவேன். இங்கு பணியாற்றிய அனுபவத்தை வைத்து சிறப்பாக பணியாற்ற முடியும் என எதிர்பார்க்கிறேன்.

சேரன்மகாதேவிக்கு பிறகு சென்னையில் 3 ஆண்டுகள் பணி புரிந்தேன். வட்டார துணை ஆணையாளராக 2 ஆண்டுகளும், பெருநகர சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக 1 ஆண்டும் பணி புரிந்துள்ளேன். இந்த அனுபவங்களை வைத்து சிறப்பான முறையில் பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார். இவர் தென்காசி மாவட்டத்தின் 4-வது கலெக்டர் ஆவார்.

நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. இந்த மாவட்டத்தில் இதுவரை அருண் சுந்தர் தயாளன், சமீரன், கோபால சுந்தரராஜ் ஆகிய 3 பேர் மாவட்ட கலெக்டர்களாக பணி புரிந்துள்ளனர்.

புதிய கலெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here