மேக்கரை அகத்தியர் கோவில் வரலாறு

நீண்ட காலத்திற்கு முன்பு, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், மேக்கரை அகத்தியர் கோவில் அமைந்துள்ள பகுதியை, பழங்குடியினத்தை சேர்ந்த தலைவர் ஆட்சி செய்து வந்தார். கடவுள் சுப்பிரமணியரின் தீவிர பக்தரான அவர், தினமும் அர்ப்பணிப்புடன் பிரார்த்தனை மேற்கொண்டு வந்தார். வாழ்க்கையின் முதல் பாதியை மகிழ்ச்சியாக கழிந்த அவருக்கு, பிற்பகுதி, பல்வேறு உடல்நலக்குறைவால் பாதிப்பு அடைந்து இருந்தார். உடல்நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளால் உழன்று வந்த அவர், இத்தகைய இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான வழிகளை வேண்டி, கடவுள் சுப்பிரமணியரிடம் பிரார்த்தனை மேற்கொண்டார். மனமிறங்கி வந்த கடவுள் சுப்பிரமணியர், மிகப்பெரும் முனிவரான அகத்தியரின் ஆசிகளை பெறுமாறு அவருக்கு அறிவுறுத்தினார். தான் அவதியுறும் இத்தகைய இன்னல்களுக்கு, நவக்கிரக தோஷமே காரணம் என அகத்தியரின் மூலமாக உணர்ந்த அவர், நவக்கிரகங்களுக்கு, ஒரு புனித கோவிலை கட்டினார்.

கோவில் புனரமைப்பு விழாவிற்கு உரிய தேதியை தேர்ந்தெடுத்த பின்னர், அவர், மிகுந்த நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புத் தன்மையுடன் ஹோம சடங்குகளை செய்யத் துவங்கினார். இந்த நிகழ்வின்போது அவர், நிறைய தடைகளையும், தடங்கல்களையும் எதிர்கொண்டார். தான் கண்ட கெட்ட சகுனங்களினால், பெரிதும் கவலைப்பட்ட அவர், அத்தகைய தடைகளுக்கான காரணங்களை தனக்குக் காட்டி, கோவில் சீரமைப்பு விழாவை, நல்லபடியாக நடக்க ஆசிர்வதிக்கும்படி, கடவுள் சுப்பிரமணியரை வேண்டினார்.  அவர் கட்டி வரும் கோவிலில், விநாயகப் பெருமானை இடம்பெறாமல் போனதே இந்த தடைகளுக்கு காரணம் என கடவுள் சுப்பிரமணியர் தெரிவித்தார். பிறகு கடவுள் சுப்பிரமணியர், தனது அருள் பிரசன்னத்தை முன்வைத்து, கட்டித்தழுவிக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார். அப்போது அங்கு விநாயகப் பெருமான், தனது வடிவத்தை காட்டுகிறார். பிரமாண்ட யானைப்பாறை வடிவில், முழங்கால் இட்டு, பெரிய காதுகள், தொப்பை உடன் அழகான தும்பிக்கை உடன், விநாயகர் காட்சி அளிக்கிறார். விநாயகரின் சிலை பிரமாண்டமாக பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, எல்லாம் சரியாக நடைபெற்றது. இந்தக் கோவில், இயற்கைப் பேரிடர்களால் சிதிலம் அடைந்தது.  பின்னர் அதே அகத்தியரின் வழிகாட்டுதல்களின்படி,  இந்த கோவில் மீண்டும் உருவாக்கப்பட்டது.

எல்லா கோவில்களிலும், விநாயகப் பெருமான், முதன்மைக் கடவுளாக முன்புறம் இருந்து அருள்பாலிக்கிறார். ஆனால், இந்த கோவிலில் மட்டும் அகத்திய முனிவரின் அறிவுறுத்தலின்படி, விநாயகப் பெருமானின் சன்னதி பின்புறம் அமைக்கப்பட்டு உள்ளது. ஒன்பது நவக்கிரகங்ளையும் கவனிப்பது போல் அவரது சன்னதி அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புனித தலத்தில் உருவமற்ற வகையில் சுற்றித் திரியும் துறவிகள், தங்கள் பக்தர்களை ஆசீர்வதிப்பதை உணர முடியும் என நம்பப்படுகிறது. தர்ப்பைப்புல் எனப்படும் புனித புல், இங்கு மட்டுமல்லாது, இந்த இடத்தை சுற்றி அடர்த்தியாக வளர்ந்து இருப்பதால், இந்த இடம் மிகவும் புனிதம் மிக்கதாக கருதப்படுகிறது. இயற்கையில் வளரும் தாவரங்களுக்கு இடையே, அண்டத்தின் ஆற்றலை அறிந்து கொள்ளும் சக்தி, இந்த தர்ப்பைப் புல்லுக்கு மட்டுமே உள்ளது. இதனாலேயே, இக்கோயிலில் நடத்தப்படும் சடங்குகள்,  பூஜைகளில் தர்ப்பைப் புல் பயன்படுத்தப்படுகிறது. கோவிலின் கோபுர கலசத்தின் உச்சியில் தர்ப்பைப் புல்லினால் கயிறு கட்டப்படுகிறது குடமுழுக்கு உள்ளிட்ட புதுப்பிப்பு நிகழ்வுகளில் நடத்தப்படும் ஹோம சடங்குகளில், தர்ப்பைப் புல் பயன்படுத்தப்படுகிறது. அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்ட கங்கை நீரால், இங்கு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிக்கலாம்: அதே அமைதி, அதே பிரமிப்பு, அதே ஏகாந்தம் – தென்காசி பெரிய கோவில் பயணம்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here