நூடுல்ஸ் வரலாறு..
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த உணவாக மாறியிருக்கிறது நூடுல்ஸ். சமைப்பதற்கு எளிதாக இருப்பதோடு, குறைவான நேரத்தில் சட்டென்று தயாரிக்க முடியும் என்பதால், பலரது விருப்ப உணவு பட்டியலில் நூடுல்ஸ் இடம் பிடித்திருக்கிறது. இரண்டே நிமிடத்தில் ரெடியாகும் நூடுல்ஸின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
நூடுல்ஸ் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
சீனாதான் நூடுல்ஸின் தாயகம் என்பது அளைவரும் அறிந்ததே. சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் பிருந்தே சீனாவில் நூடுல்ஸ் புழக்கத்தில் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சீனாவின் சிங்ஹாய் மாகாணத்தில் இதற்கான சான்றை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நூடுல்ஸும், சீனர்களின் நம்பிக்கையும்
சீனாவில் நூடுல்ஸ் பாரம்பரிய உணவாகவே பார்க்கப்படுகிறது. சீனர்கள், நீளமான நூடுல்ஸ் உண்பது நீண்ட ஆயுளை குறிக்கும் என நம்புகிறார்கள். வழக்கமான அளவு நூடுல்ஸை விட கூடுதல் நீளமாக இருக்கும் நூடுல்ஸ், சீனாவில் புத்தாண்டு தினத்தன்று அதிகம் பரிமாறப்படும். மேலும் நீளமான நூடுல்ஸை வெட்டு வதை சீனர்கள் அதிர்ஷ்டமில்லாத ஒன்றாகவே கருதுகிறார்கள்.
நூடுல்ஸ் ஆரோக்கியமானதா?
நூடுல்ஸை அதிகம் பேர் விரும்பிளாலும், சமைப்பதற்கு எளிதாக இருந்தாலும் ‘உடலுக்கு ஆரோக்கிய மானது இல்லை’ என்பது அதன் மீது பரவலாக வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று. பழங்காலத்தில் நூடுல்ஸை தானியங்களைக் கொண்டு தயாரித்தனர். தற்போது கோதுமை மாவு மற்றும் இதர பொருட்களைக் கொண்டு தயாரிக்கின்றனர்.
சுவையை அதிகரிப்பதற்காக அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், நிறமூட்டிகள் நூடுல்ஸை ஆரோக்கியமற்றதாக மாற்றுகின்றன. நூடுல்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அதன் தரத்தில் கவனம் செலுத்துவது
முக்கியமானது என்கிறார்கள் உணவு நல ஆர்வலர்கள்.
மற்ற நாடுகளிலும் பிரபலமடைந்த நூடுல்ஸ்
இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் ஜப்பானில்தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஜப்பானில் பல வகையான நூடுல்ஸ் உணவுகளை காட்சிப்படுத்துவதற்கும், உண்பதற்கும் தனி அருங்காட்சியகமே உள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் சுமார் 4500-க்கும் மேற்பட்ட வகை வகையான நூடுல்ஸ்கள் விற்கப் படுவது சுவையான விஷயம்.
சீனா, ஜப்பானை போலவே தாய்லாந்து, கொரியா நாடுகளிலும் நூடுல்ஸ் பிரதான உணவாக இருக்கிறது. அவரவர் ரசனைக்கும், சுவைக்கும் ஏற்ற வகையில் முட்டை, இறைச்சி என பல விதமான பொருட்கள் சேர்த்து நூடுல்ஸ் உணவை தயாரிக்கிறார்கள். மேலும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 6-ந் தேதியை நூடுல்ஸ் தினமாக பல நாடுகளில் கொண்டாடுகிறார்கள்.