கொரோனா தொற்று காரணமாக தமிழகத்துக்குள் செங்கோட்டை வழியாக வந்து செல்லும் 25-க்கும் மேற்பட்ட கேரள அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.
கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து அரசு உத்தரவுப்படி தற்போது 25-க்கும் மேற்பட்ட கேரள பேருந்துகள் முன்பு போல் செங்கோட்டைக்கு வந்து செல்கிறது. மேலும் செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவிலுக்கு சென்று வந்த கேரள பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் 21 மாதங்களுக்கு பிறகு செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவிலுக்கு நேற்று முதல் கேரள அரசு பஸ் இயக்கப்பட்டது. தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் என்பதால் இரு மாநில அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள அச்சன்கோவிலுக்கு 31 ரூபாய் பயணக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 8 மணி, மாலை 3.30 மணி, 5.30 மணி ஆகிய நேரங்களில் பஸ் இயக்கப்படுகிறது.