திறமையை தொழிலாக மாற்றலாம்
நீங்கள் வீட்டை அலங்காரப்படுத்துவதில் ஆர்வ ‘முடையவரா? ஆம் எனில், அதையே தொழிலாகவும் மாற்றி, சுயமாக சம்பாதிக்கலாம். அதைப்பற்றிய விவரங்களைக் காண்போம்.
உட்புற அலங்கார வடிவமைப்பு
பல பெண்கன் எந்தப் பொருளை, எங்கு வைத்தால், வீடு அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கும் என்பதில், நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இதற் கான தனிப் படிப்பு இருந்தாலும், இயற்கையிலேயே பெண்களுக்கு இதில் அனுபவம் இருக்கும். சுயமாக சம்பாதிக்க விரும்பும் பெண்கள், முதலில் இதனைத் தனக்கு தெரிந்த வீடுகளிலோ, நண்பர்களின் வீடுகளில் திருந்தோ தொடங்கலாம். இதில் வாடிக்கையாளரின் திருப்தி தான் உங்களுக்கு நல்ல விளம்பரத்தைப் பெற்றுத் தரும்.
எப்படி அழகுபடுத்துவது?
முதலில் நீங்கள் அழகுபடுத்த இருக்கும் இடத்தைப் பற்றி, வாடிக்கையாளரிடம் தெளிவாகக் கேட்டு தெரிந்துரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வீடாக இருந்தால், வாடிக்கையாளரின் ரசனைக்கேற்ப சுவர்களின் நிறத்தையும், அலங்காரப் பொருள்களையும், நாற்காலியையும் மேசையையும், ஓவியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதில் திட்டமிடுதல் மிகவும் முக்கியமானது. வீட்டின் அளவுக்கேற்ப, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருள் இருக்க வேண்டும். கைவினைப் பொருட்களையும், சிறந்த ஓவியங்களையும் விரும்பாத வாடிக்கையாளர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களின் ரசனைக்கேற்ப பொருட்களைத் தெளிவாகத் தேர்ந்தெடுத்து, அதற்கேற்ற இடத்தில் அவற்றைப் பொருத்துவது சிறப்பானது, அது மட்டுமின்றி காலத்திற்குத் தகுந்தாற் போலவும், மாறிவரும் ரசனைக்கேற்பவும், அலங்காரப் பொருட்களையும், அவற்றின் தரத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு பொருளும், வாடிக்கையாளருக்கு நீண்ட நாள் பயன் தரும் வகையில் இருக்க வேண்டும்.
வாடிக்கையாளரின் திருப்தி
சிறந்த வேலைப்பாடு, தகுந்த வருமானத்தைப் பெற்றுத் தரும், வாடிக்கையாளர் உங்களின் வேலையை பார்த்து மகிழ்ந்து, அதற்கு நீங்கள் நிர்ணயித்த கட்டணத்தை தருவதோடு மட்டுமல்லாமல், அதைத் தனக்குத் தெரிந்தவர்களிடம் கூறுவார். அதன் மூலம் உங்களுக்கு லாபமும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
எப்படி விளம்பரப்
படுத்துவது?
அதிக லாபத்தை ஈட்ட, அதிகமாக விளம்பரப்படுத்துவது முக்கியமானதாகும். உங்கள் வாடிக்கையாளரின் மூலம் விளம்பரம் கிடைத்தாலும், அது குறுகிய வட்டத்துடன் முடிந்து விடக்கூடும். எனவே அதிக லாபத்தை ஈட்ட, உங்கள் வேலைப்பாட்டை சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்துவது முக்கியமானதாகும். முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில்,
விளம்பரப்
படுத்துவதன் மூலம், அதிக வாடிக்கையாளரைப் பெறலாம்.
முயன்றால் வெல்லலாம்
எந்த ஒரு செயலை செய்யும்போதும், தன்னம்பிக்கை யோடு கூடிய விடா முயற்சியே வெற்றியைத் தேடி தரும். முதலில் நீங்கள் தனி ஆளாக இதனை ஆரம்பித்தாலும், • உங்களின் தொடர் முயற்சியால், தொழிலை மேம்படுத்தி, சிறந்த தொழில் அதிபராக உருவாகலாம்.